search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லியோனல் மெஸ்சி"

    • 2023-ம் ஆண்டுக்கான ஆண்கள் பலோன் டி'ஓர் விருதை லியோனல் மெஸ்ஸி வென்றார்.
    • எட்டாவது முறையாக இந்த விருதை வென்று அவர் சாதனை படைத்துள்ளார்.

    பாரிஸ்:

    கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி 8-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.

    கடந்த ஆண்டு டிசம்பரில் கத்தாரில் நடந்த உலக கோப்பையை அர்ஜென்டினா வெல்வதில் முக்கிய பங்கு வகித்த மெஸ்சி, 7 கோல் அடித்ததுடன், 4 ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.

    மெஸ்ஸி 2009, 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் வென்று அசத்தியிருந்தார். ஏற்கனவே, இந்த விருதுக்கு அதிக முறை பரிந்துரைக்கப்பட்ட வீரர் என்ற சாதனையையும் மெஸ்சி படைத்திருந்தார்.

    இந்நிலையில், பாரிசில் உள்ள ஈபிள் டவரில் லியோனல் மெஸ்சியின் சாதனையை கவுரவிக்கும் வகையில், அவரது புகைப்படம் லேஸ் சிப்ஸ் பாக்கெட்டில் அச்சிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • 2023-ம் ஆண்டுக்கான ஆண்கள் பலோன் டி'ஓர் விருதை லியோனல் மெஸ்ஸி வென்றார்.
    • எட்டாவது முறையாக இந்த விருதை வென்று அவர் சாதனை படைத்துள்ளார்.

    பாரிஸ்:

    கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. 1956-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 60 (30 ஆண் மற்றும் 30 பெண்) பேர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி 8-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.

    கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த உலக கோப்பையை அர்ஜென்டினா வெல்வதில் முக்கிய பங்கு வகித்த மெஸ்சி, 7 கோல் அடித்ததுடன், 4 ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.

    மெஸ்சி 2009, 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் வென்று அசத்தியிருந்தார். ஏற்கனவே, இந்த விருதுக்கு அதிக முறை பரிந்துரைக்கப்பட்ட வீரர் என்ற சாதனையையும் மெஸ்சி படைத்திருந்தார்.

    பெண்களுக்கான பலோன் டி'ஓர் விருதை உலக கோப்பை வென்ற ஸ்பெயின் நட்சத்திர வீராங்கனை அடானா பொன்மதி கைப்பற்றினார்.

    • புதிய சவாலை எதிர்கொள்ள தயாராகவும் ஆர்வமாகவும் இருக்கிறேன் என மெஸ்சி கூறினார்.
    • அர்ஜென்டினா கால்பாந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்சி, அமெரிக்காவின் இண்டர் மியாமி அணிக்காக விளையாட உள்ளார்.

    அமெரிக்கா:

    கால்பந்து உலகின் சிறந்த வீரரும் , அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்சி பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) அனிக்காக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வந்தார் .பிஎஸ்ஜி அணியுடன் எற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த அணியில் இருந்து விலகி அமெரிக்காவின் இண்டர் மியாமி அணிக்காக விளையாட உள்ளார்.

    இந்நிலையில் அமெரிக்காவில் இண்டர் மியாமி வீரராக அவரை அறிமுகப்படுத்த அணியின் நிர்வாகம் சிறப்பு நிகழ்வு ஒன்றை எற்பாடு செய்து உள்ளது. அதில் பங்கேற்பதற்காக மெஸ்சி அமெரிக்கா சென்று உள்ளார்.

    அங்கு அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்,அதில்'"நான் எடுத்த முடிவில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய சவாலை எதிர்கொள்ள தயாராகவும் ஆர்வமாகவும் இருக்கிறேன்," என்று கூறினார்.

    மேலும் அவர்,"எனது மனநிலையும் என் உறுதியும் மாறப்போவதில்லை. நான் எங்கிருந்தாலும், எனக்காகவும் அணிக்காகவும் அதிகபட்ச உழைப்பை கொடுக்க முயற்சிப்பேன். உயர்ந்த தரத்தில் தொடர்ந்து செயல்படுவேன்'என்று பேட்டி அளித்து உள்ளார்.

    மெஸ்சி இண்டர் மியாமி அணியில் முன்னாள் பார்சிலோனா அணி வீரர் செர்ஜியோ புஸ்கெட்ஸ் மற்றும் முன்னாள் அர்ஜென்டினா பயிற்சியாளர் ஜெரார்டோ மார்டினோவுடன் மீண்டும் இணைய உள்ளார். மெஸ்சி இண்டர் மியாமி அணி வீரராக முதல் ஆட்டத்தை ஜூலை 21 அன்று மெக்சிகன் அணியான குரூஸ் அசுலுக்கு எதிரான லீக் கோப்பை மோதலில் அறுமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

    • அடுத்தடுத்து நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்தும் அசத்தியுள்ளார். இதனால் மெஸ்சியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    • உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்துள்ளார்.

    கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பெரிய கோஷங்களுடன் மகுடத்தை வென்றுள்ளது அர்ஜெண்டினா அணி. நொடிக்கு நொடி பரபரப்பாக இருந்த இப்போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது அர்ஜெண்டினா.

    இந்த போட்டியில் அர்ஜெண்டினா கோப்பை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்ததை விட, எப்படியாவது லியோனல் மெஸ்சி வென்றுவிட வேண்டும் என்று தான் கடும் பிரார்த்தனையில் இருந்தனர். இதற்கு காரணம் மெஸ்சி விளையாடும் கடைசி உலகக்கோப்பை தொடராக இது இருந்திருப்பது தான். இதனை அவர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

    சுமார் 18 ஆண்டுகளாக கால்பந்து உலகில் கொடிகட்டி பறக்கும் மெஸ்சிக்கு இந்த உலகக்கோப்பையில் சாதனைகளும் குவிந்தன. இதன் மூலம் உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்துள்ளார். மேலும் அடுத்தடுத்து நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்தும் அசத்தியுள்ளார். இதனால் மெஸ்சியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில் மெஸ்சியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கிரிக்கெட்டின் கடவுளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட சச்சின் டெண்டுல்கருக்கு உலகக்கோப்பை என்பது மிகப்பெரிய கனவாகவே இருந்தது. எனினும் அவர் விளையாடும் கடைசி உலகக்கோப்பையின் போது லட்சியம் நிறைவேறியிருந்தது. இதே போன்ற சூழல் தான் இன்று மெஸ்சிக்கும் நிறைவேறியுள்ளது.

    இந்தியாவின் 28 வருட உலகக்கோப்பை கனவு சச்சினுக்காகவே நிறைவேறியது போல, இன்று அர்ஜெண்டினாவின் 36 ஆண்டு கால கனவு லியோனல் மெஸ்சிக்காக நிறைவேறியுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் ஒப்பிட்டு, மீம்ஸ் மற்றும் கருத்துகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    • உலக கோப்பையை வெல்வது எனது வாழ்நாள் லட்சியமாக கருதினேன்.
    • கால்பந்தை நேசிப்பதால் மேலும் சில போட்டியில் ஆடுவேன்.

    தோகா:

    உலக கோப்பை இறுதி போட்டி தனது கடைசி ஆட்டம், அதோடு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று மெஸ்சி அறிவித்து இருந்தார்.

    குரோஷியாவுக்கு எதிரான அரை இறுதியில் பெற்ற வெற்றிக்கு பிறகு அர்ஜென்டினா கேப்டனான அவர் இதை தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் உலக கோப்பையை வென்று கனவு நனவானதால் மெஸ்சி தனது ஓய்வு முடிவை மாற்றியுள்ளார். அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் ஆடுவேன் என்று அவர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலக கோப்பையை வெல்வது எனது வாழ்நாள் லட்சியமாக கருதினேன். உலக கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன். உலக சாம்பியனாக இன்னும் சில போட்டிகளை அனுபவிக்க விரும்புகிறேன். கால்பந்தை நேசிப்பதால் மேலும் சில போட்டியில் ஆடுவேன்.

    உலக கோப்பைக்காக நான் மிகவும் ஏங்கினேன். கடவுள் இந்த பரிசை அளிப்பார் என்று முன்பே சொன்னேன். இந்த நேரத்தில் அது நடக்கும் என்பதை உணர்ந்தேன். இதற்காக நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். இறுதியில் எங்களால் அதை வெல்ல முடிந்தது. உலக கோப்பை அழகானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    35 வயதான லியோனல் மெஸ்சி 2005-ல் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். அர்ஜென்டினா அணிக்காக 172 போட்டியில் விளையாடி 98 கோல்கள் அடித்துள்ளார்.

    • ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மெஸ்சியின் கட்-அவுட் அந்த வழியாக சென்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
    • பொதுமக்கள் மெஸ்சியின் கட்-அவுட்டை செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

    அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னணி வீரர்கள் பலருக்கும் கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    அவர்கள் கால்பந்து வீரர்களின் ஜெர்சி அணிந்தும், அவர்களை போலவே விளையாடியும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டம் செருபுழா பகுதியை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சியின் 30 அடி உயரம், 8 அடி அகலம் கொண்ட ராட்சத கட்-அவுட்டை உருவாக்கினர்.

    இந்த கட்-அவுட்டை அவர்கள் செருபுழா ஆற்றின் நடுவே வைத்தனர்.

    ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மெஸ்சியின் கட்-அவுட் அந்த வழியாக சென்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர்கள் அதனை செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

    ×