search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Luka Modric"

    கால்பந்து விளையாட்டின் மிக உயரிய விருதான பலோன் டி’ஆர் விருதை முதன்முறையாக லூகா மோட்ரிச் தட்டிச் சென்றுள்ளார். #BallondOr
    பிரான்ஸ் நாட்டில் இருந்து பிரசுரிக்கப்படும் கால்பந்து பத்திரிகை சார்பில் ஆண்தோறும் உயரிய விருதான பலோன் டி’ஆர் விருது வழங்கப்படும். இதில் விருதிற்கு கடந்த 10 வருடமாக ரொனால்டோ, மெஸ்சி ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இவர்களை வேறு எந்த வீரர்களும் நெருங்க முடியாத நிலை இருந்தது. இந்த விருதை கடந்த 2008-ல் இருந்து மெஸ்சி, ரொனால்டோ ஆகியோர்தான் வாங்கிக் கொண்டிருந்தனர்.



    இந்த வருடம் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்றது. இதனால் கிளப் போட்டிகளுடன் உலகக்கோப்பை போட்டிகளும் கணக்கிடப்பட்டது. உலகக்கோப்பை தொடரில் குரோஷியா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனால் அந்த அணியின் கேப்டனும், மிட்பீல்டரும் ஆன லூகா மோட்ரிச் இந்த முறை முன்னணியில் திகழந்தார்.



    ஏற்கனவே, பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற லூகா மோட்ரிச் பலோன் டி’ஆர் விருதையும் தட்டிச் சென்றார். கடந்த 2007-ம் ஆண்டு பிரேசில் வீரர் காகா பலோன் டி’ஆர் விருதை கைப்பற்றிய பின்னர், 2008-ல் இருந்து 2017 வரை மெஸ்சியும், ரொனால்டோவும் 10 வருடம் கோலோச்சியிருந்தனர். அவர்களின் சாதனைகளுக்கு லூகா மோட்ரிச் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச்செல்ல ரொனால்டோ, முகமது சலா, லூகா மோட்ரிச் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரராக லூகா மோட்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #FIFA #LukaModric
    லண்டன் :

    2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிபா சிறந்த வீரர் விருதுக்கு, குரோசியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்து சிறந்த வீரருக்கான விருதை வழங்கி வருகிறது.

    அதன்படி, 2018-ம் ஆண்டிற்கான விருதை வழங்குவதற்காக 5 முறை பிபாவின் சிறந்த வீரர் விருது பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, லிவபர்பூல் அணிக்காக 43 கோல்கள் அடித்துள்ள முகமது சலா மற்றும் லூகா மோட்ரிச் ஆகிய மூவரும் இறுதி பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், ரொனால்டோ மற்றும் முகமது சலா ஆகியோரை பின்னுக்கு தள்ளி 33 வயதான லூகா மோட்ரிச் 2018-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ரஷியாவில் நடைபெற்ற உலக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல்முறையாக குரோசியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதற்கு கேப்டன் மோட்ரிச்சின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தங்க கால்பந்து விருதும் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பிரேசிலை சேர்ந்த மார்டா என்பவருக்கு சிறந்த பெண் வீராங்கனைக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. #FIFA #LukaModric
    ஐரோப்பிய சம்மேளனத்தின் 2017-18-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருதை பெற்ற மோட்ரிச்சிற்கு ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார். #Ronaldo #LukaModric
    கிளப் அணிகளுக்கு இடையிலான 2017-18 கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச், முகமது சாலா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    பெரும்பாலான விருதிற்கு இவர்கள் மூன்று பேரும் பரிந்துரைக்க பட்டுள்ளனர். ஆனால் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் குரோசியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் சில விருதுகளை தட்டிச் செல்லும் நிலையில் உள்ளார்.

    கடந்த வாரம் ஐரோப்பா கால்பந்து சம்மேளனத்தின் 2017-18-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டது. ரொனால்டோ, முகமது சலா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி மோட்ரிச் விருதை கைப்பற்றினார்.



    விருதை வாங்கிய மோட்ரிச்சிற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மொட்ரிச் கூறுகையில் ‘‘ரொனால்டோ எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார். அதில் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த ரொனால்டோ, தான் மகிழ்ச்சியடைவதாகவும், இந்த விருதிற்கு நான் தகுதியுடைவன் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் நாம் விளையாட்டில் மோதிக்கொள்ள காத்திருக்க முடியாது என்றார்’’ என தெரிவித்துள்ளார்.
    பலோன் டி'ஆர் விருதை பிரான்ஸ் வீரர்கள் அல்லது மோட்ரிச் வெல்ல வேண்டும் என்று ஆலிவர் ஜெரார்ட் வலியுறுத்தியுள்ளார். #FIFA
    ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் மற்றும் குரோசியா வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இரு அணிகள்தான் இறுதிப் போட்டியில் மோதின. இதில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.

    பிபா சமீபத்தில் சிறந்த வீரர் விருதிற்கான கடைசி மூன்று பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இதில் மெஸ்சி, பிரான்ஸ் வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோ, முகமது சாலா, லூகா மோட்ரிச் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் உள்ள கிலியான் மப்பே, கிரிஸ்மான் ஆகியோர் பெயர் இடம் பெறாதது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

    இந்நிலையில் பிரான்ஸ் வீரர் ஆலிவர் ஜிரார்டு பிபா விருதிற்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பலோன் டி'ஆர் விருதுதான் முக்கியமானது. இதை பிரான்ஸ் வீரர்களில் ஒருவர் அல்லது மோட்ரிச் வெல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஆலிவர் ஜெரார்டு கூறுகையில் ‘‘பிபா விருதுக்கான பட்டியலில் பிரான்ஸ் வீரர் இடம் பெறாதது ஆச்சர்யம் அளித்தது. ஆனால், உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் பிபா விருதிற்கு அதிக அளவில் முக்கியத்தும் கொடுப்பது கிடையாது.

    பலோன் டி'ஆர் விருதை பிரான்ஸ் வீரர் அல்லது மோட்ரிச் வெல்ல வேண்டும். நான் வாக்கு அளித்தால், நான் எனது பார்ட்னரைத்தான் தேர்வு செய்வான். ஆனால், அதை உங்களுக்குச் சொல்ல மாட்டேன்’’ என்றார்.
    உலகக்கோப்பை உள்பட மூன்று டிராபிகளை கைப்பற்றிய பின்னரும் பதக்க பிபா விருது பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என கிரிஸ்மான் கவலை தெரிவித்துள்ளார்.
    பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி வீரர் கிரிஸ்மான். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிபாவின் சிறந்த வீரருக்கான கடைசி 3 பேர் பட்டியலில் இடமபிடித்திருந்தார். இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விருதை தட்டிச் சென்றார். மெஸ்சி 2-வது இடம் பிடித்தார். கிரிஸ்மானுக்கு 3-வது இடமே கிடைத்தது.

    அப்போது கிரிஸ்மான் விளையாடிய அணி எந்தவித கோப்பைகளையும் கைப்பற்றவில்லை. யூரோ 2016 தொடரில் பிரான்ஸ் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. அதன்பின் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணி தோல்வியை சந்தித்தது.

    தற்போது கிரிஸ்மான் இடம் பிடித்துள்ள அணி மூன்று கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை பிரான்ஸ் அணி கைப்பற்றியுள்ளது. அட்லெடிகோ மாட்ரிட் யூரோப்பா லீக், யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பையை கைப்பற்றியுள்ளது.



    ஆனால் இந்த வருடத்திற்கான பிபா விருதிற்கான கடைசி மூன்று பேர் பட்டியலில் ரொனால்டோ, லூகா மோட்ரிச், முகமது சாலா ஆகியோர் பெயர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளது. இதனால் கிரிஸ்மான் கவலையடைந்துள்ளார்.

    ஒரு கோப்பையையும் வாங்காத போது இறுதிப் பட்டியலில் பெயர் இருந்தது. தற்போது மூன்று கோப்பைகளையும் வென்ற பிறகு தனது இடம் இல்லையே என்று தனது அதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
    பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச்செல்ல ரொனால்டோ, முகமது சலா, லூகா மோட்ரிச் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. #FIFA #Ronaldo
    சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்து சிறந்த வீரருக்கான விருதை வழங்கி வருகிறது. 2018-ம் ஆண்டிற்கான விருதை வழங்குவதற்காக பல்வேறு கட்டங்களாக வீரர்கள் பட்டியலை வடிகட்டி தற்போது மூன்று பேரை இறுதியாக பிபா தேர்வு செய்துள்ளது.

    இந்த மூன்று பேர் பட்டியலில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச், லிவர்பூல் அணிக்காக விளையாடிய முகமது சலா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் ஒருவர் சிறந்த வீரராக அறிவிக்கப்படுவார்.

    கடந்த 11 ஆண்டுகளில் முதன் முறையாக மெஸ்சி கடைசி மூன்று பேர் பட்டியலில் இடம்பெறவில்லை. அவர் பார்சிலோனா அணிக்காக 44 கோல்கள் அடித்துள்ளார். லா லிகா, கோபா டெல் ரே ஆகிய கோப்பைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். என்றாலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. மெஸ்சி 2007 மற்றும் 2008-ல் 2-வது இடம் பிடித்தார். அதன்பின் ஐந்து முறை சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.



    முகமது சலா லிவபர்பூல் அணிக்காக 43 கோல்கள் அடித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச் ஆகியோர் ரியல் மாட்ரிட் அணிக்கு ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் டிராபியை வாங்கிக் கொடுத்துள்ளனர். மோட்ரிச் தலைமையிலான குரோசியா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் இடம் தோல்வியடைந்து 2-வது இடம்பிடித்தது.
    2017-18-ம் ஆண்டுக்கான ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் யூனியன் சார்பில் வழங்கப்படும் விருதிற்கான பட்டியலில் மெஸ்சி பெயர் இல்லை. #Messi #Ronaldo
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து சங்கங்களின் யூனியன் சார்பில் 2017-18 சீசனின் சிறந்த வீரரை தேர்வு செய்து விருது வழங்கும். பல வீரர்களை தேர்வு செய்து அதில் இருந்து மூன்று பேரை இறுதியாக தேர்வு செய்வார்கள். இதில் ஒருவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவார்.



    கடைசி மூன்று பேரை தேர்வு செய்து இன்று முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி பெயர் இடம்பெறவில்லை.



    யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.



    இறுதிப் போட்டிக்கு முன்னேறிய லிவர்பூல் அணியின் முகமது சாலாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதன்முறையாக மூன்று பேர் கொண்ட பட்டியலில் சாலா இடம்பிடித்துள்ளார்.
    உலகக்கோப்பை கால்பந்தில் தொடரில குரோசியா கேப்டன் லூகா மோட்ரிச் பந்தை கடத்த 63 கிலோ மீட்டர் தூரம் ஓடி அசத்தியுள்ளார். #WorldCup2018 #Modric
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய இந்த திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பிரான்ஸ் - குரோஷியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

    உலகக்கோப்பை தொடரில் சில நேரங்களில் ஜாம்பவான்கள், விமர்சகர்கள் போன்றோரின் கணிப்புகள் தவறாகிவிடும். தற்போது அதுதான் நடந்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் குரோசியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் வலுவான மிட்பீல்லர் பகுதிதான்.



    குரோசியா அணி கேப்டன் லூகா மோட்ரிச் மில்பீல்டர் பதகுதியில் முதுகெலும்பாக திகழ்கிறார். அவரை தாண்டி பந்தை கடத்திச் செல்வது கடினம். அதேபோல் அவர் கையில் பந்து கிடைத்தால் புயல் வேகத்தில் பந்தை எதிரணி கோல் எல்லைக்குள் கொண்டு சென்று விடுவார்.

    இதுவரை குரோசியாக மூன்று லீக், நாக்அவுட், காலிறுதி, அரையிறுதி என 6 போட்டியில் விளையாடியுள்ளது. இந்த 6 போட்டியிலும் லூகா மோட்ரிச் பந்தை கடத்துவதற்காக 63 கிலோ மீட்டர் தூரம் ஓடியுள்ளார். ஒரு போட்டிக்கு சராசரியாக 10.5 கிலோ மீட்டர் ஓடியுள்ளார். இதுதான் இதுவரை அதிகபட்ச தூரமாக உள்ளது.
    ×