search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிபாவின் சிறந்த வீரர் விருது- ரொனால்டோ, முகமது சலா, லூகா மோட்ரிச் இடையே கடும் போட்டி
    X

    பிபாவின் சிறந்த வீரர் விருது- ரொனால்டோ, முகமது சலா, லூகா மோட்ரிச் இடையே கடும் போட்டி

    பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச்செல்ல ரொனால்டோ, முகமது சலா, லூகா மோட்ரிச் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. #FIFA #Ronaldo
    சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்து சிறந்த வீரருக்கான விருதை வழங்கி வருகிறது. 2018-ம் ஆண்டிற்கான விருதை வழங்குவதற்காக பல்வேறு கட்டங்களாக வீரர்கள் பட்டியலை வடிகட்டி தற்போது மூன்று பேரை இறுதியாக பிபா தேர்வு செய்துள்ளது.

    இந்த மூன்று பேர் பட்டியலில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச், லிவர்பூல் அணிக்காக விளையாடிய முகமது சலா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் ஒருவர் சிறந்த வீரராக அறிவிக்கப்படுவார்.

    கடந்த 11 ஆண்டுகளில் முதன் முறையாக மெஸ்சி கடைசி மூன்று பேர் பட்டியலில் இடம்பெறவில்லை. அவர் பார்சிலோனா அணிக்காக 44 கோல்கள் அடித்துள்ளார். லா லிகா, கோபா டெல் ரே ஆகிய கோப்பைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். என்றாலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. மெஸ்சி 2007 மற்றும் 2008-ல் 2-வது இடம் பிடித்தார். அதன்பின் ஐந்து முறை சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.



    முகமது சலா லிவபர்பூல் அணிக்காக 43 கோல்கள் அடித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச் ஆகியோர் ரியல் மாட்ரிட் அணிக்கு ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் டிராபியை வாங்கிக் கொடுத்துள்ளனர். மோட்ரிச் தலைமையிலான குரோசியா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் இடம் தோல்வியடைந்து 2-வது இடம்பிடித்தது.
    Next Story
    ×