search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Cup Final"

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது
    • கருப்பு மண் இரவில் கான்க்ரீட் போலாகி விடும் என பெய்லி தெரிவித்தார்

    நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டி தொடர் கடந்த அக்டோபர் 5 அன்று தொடங்கி, நவம்பர் 19 அன்று நிறைவடைந்தது.

    இந்த போட்டி தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வந்த இந்தியா, இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. வெற்றி உறுதி என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட திறமையான வீரர்கள் இருந்தும் இந்திய அணி தோல்வியுற்றது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    போட்டியின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. அதன் கேப்டன், பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்தியாவை ஆஸ்திரேலிய அணி 240 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. பிறகு ஆடிய அந்த அணி முதலில் 3 விக்கெட்டுகளை இழந்தாலும், டிராவிஸ் ஹெட் அடித்த சதத்தினால் எளிதாக உலக கோப்பையை வென்றது.


    இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து பல முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

    இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் இது குறித்து கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    நான் ஆஸ்திரேலிய தேர்வாளர் ஜார்ஜ் பெய்லியை சந்தித்து உரையாடும் போது, எப்போதும் முதலில் ஆடுவதை விரும்பும் ஆஸ்திரேலிய அணியினர், டாஸ் வென்றும் ஏன் பவுலிங்கை தேர்வு செய்தார்கள் என கேட்டேன்.

    அதற்கு பெய்லி, "ஐபிஎல் (IPL) மற்றும் பல இருதரப்பு போட்டிகள் இங்கு நாங்கள் விளையாடி உள்ளோம். சிவந்த மண் நேரம் செல்ல செல்ல தளர்ந்து போகும். ஆனால், கருப்பு மண் அப்படி அல்ல; மாலை விளக்கு ஓளியில் நன்றாக தெரியும். சிவந்த மண்ணில் பனிப்பொழிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. கருப்பு மண் மதிய வேளையில் பந்தை நன்றாக 'டர்ன்' செய்யும். பிறகு இரவு நேரத்தில் கான்க்ரீட் போன்று ஆகி விடும்" என கூறினார்.

    நான் அவர் பதிலால் ஆச்சரியம் அடைந்தேன்.

    இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.

    பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியினர், டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக திட்டமிட்டு கோப்பையை வென்றதை சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    • சுற்றுலாத்துறை ஏற்பாடு
    • புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரைசாலை காந்தி திடலில் பெரிய திரை அமைக்கப்பட்டுள்ளது,

    புதுச்சேரி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது.

    இதன் இறுதிப்போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. போட்டியை பொதுமக்கள் ஒன்றாக அமர்ந்து கண்டுகளிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரைசாலை காந்தி திடலில் பெரிய திரை அமைக்கப்பட்டுள்ளது, இந்த திரையில் நண்பகல் முதல் போட்டியின் முடிவு வரை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பு தொடங்கியது.

    வெயிலை பொருட்படுத்தாமல் ரசிகர்கள் போட்டியை காண குவிய தொடங்கினர்.நேரம் செல்ல செல்ல ரசிகர்கள் அதிகளவில் வந்தனர்.

    இதேபோல் புதுவை எல்லைப்புறங்களில் உள்ள மதுபார்களிலும் திறந்த வெளியில் போட்டியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நகர்புறங்களில் பெரிய தொலைக்காட்சி மூலம் ரசிகர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    • உலகக்கோப்பை இறுதிப்போட்டி நாளை நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
    • போட்டியை நேரலையில் திரையிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இறுதிப்போட்டியை நேரில் காணவும் ரசிகர்கள் அகமதாபாத்திற்கு படையெடுத்துள்ளனர்.

    இந்நிலையில், சென்னை மக்கள் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை காண பொது வெளியில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை, மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரலையில் திரையிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

    • டெல்லியில் இருந்து அகமதாபாத்துக்கான விமான கட்டணம் ரூ.9756-ல் இருந்து ரூ.14,036-க்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • அகமதாபாத்தில் இருந்து திரும்புவதற்கான விமான கட்டணம் 400 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    அகமதாபாத்:

    இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி நாளை மறுநாள் (19-ந்தேதி) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. சுமார் 1 லட்சம் பேர் அமரக்கூடிய அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.

    இந்த நிலையில் இறுதிப் போட்டி காரணமாக அகமதாபாத்தில் ஓட்டல் அறைகளின் ஒருநாள் வாடகை உயர்த்தப்பட்டிருக்கிறது. போட்டி நடைபெறும் அன்று பிரபல நட்சத்திர ஓட்டலில் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. ஓட்டலின் சாதாரண அறையின் ஒருநாள் வாடகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை இருக்கும். அந்த அறைகள் வாடகை ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. உயர்த்தர அறைகள், வாடகை சாதாரணமாக ரூ.35 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை இருக்கும். அந்த அறை களின் வாடகை ரூ.1 லட்சமாக அதிகரிக்கப் பட்டு உள்ளது.

    அதேபோன்று மற்றொரு பிரபல நட்சத்திர ஓட்டலிலும் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. மேலும் மைதானத்தை சுற்றி உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் அறைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. அதேபோல் அகமதாபாத்துக்கான விமான கட்டணம் உயர்ந்துள்ளது.

    டெல்லியில் இருந்து அகமதாபாத்துக்கான விமான கட்டணம் ரூ.9756-ல் இருந்து ரூ.14,036-க்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு ரூ.5515-ல் இருந்து ரூ.8099-ஆகவும் கோவாவில் இருந்து ரூ.7188-ல் இருந்து ரூ.11,933-ஆகவும் கொல்கத்தாவில் இருந்து ரூ.14,175-ல் இருந்து ரூ.20,068 ஆகவும் விமான கட்டணங்கள் உயர்ந்து உள்ளது.

    அகமதாபாத்தில் இருந்து திரும்புவதற்கான விமான கட்டணம் 400 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    உலகக்கோப்பை கால்பந்தில் தொடரில குரோசியா கேப்டன் லூகா மோட்ரிச் பந்தை கடத்த 63 கிலோ மீட்டர் தூரம் ஓடி அசத்தியுள்ளார். #WorldCup2018 #Modric
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய இந்த திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பிரான்ஸ் - குரோஷியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

    உலகக்கோப்பை தொடரில் சில நேரங்களில் ஜாம்பவான்கள், விமர்சகர்கள் போன்றோரின் கணிப்புகள் தவறாகிவிடும். தற்போது அதுதான் நடந்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் குரோசியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் வலுவான மிட்பீல்லர் பகுதிதான்.



    குரோசியா அணி கேப்டன் லூகா மோட்ரிச் மில்பீல்டர் பதகுதியில் முதுகெலும்பாக திகழ்கிறார். அவரை தாண்டி பந்தை கடத்திச் செல்வது கடினம். அதேபோல் அவர் கையில் பந்து கிடைத்தால் புயல் வேகத்தில் பந்தை எதிரணி கோல் எல்லைக்குள் கொண்டு சென்று விடுவார்.

    இதுவரை குரோசியாக மூன்று லீக், நாக்அவுட், காலிறுதி, அரையிறுதி என 6 போட்டியில் விளையாடியுள்ளது. இந்த 6 போட்டியிலும் லூகா மோட்ரிச் பந்தை கடத்துவதற்காக 63 கிலோ மீட்டர் தூரம் ஓடியுள்ளார். ஒரு போட்டிக்கு சராசரியாக 10.5 கிலோ மீட்டர் ஓடியுள்ளார். இதுதான் இதுவரை அதிகபட்ச தூரமாக உள்ளது.
    ×