search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    உலக கோப்பை இறுதிபோட்டி பெரிய திரையில் ஒளிபரப்பு
    X

    புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப பெரிய திரை அமைக்கப்படும் காட்சி.

    உலக கோப்பை இறுதிபோட்டி பெரிய திரையில் ஒளிபரப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுற்றுலாத்துறை ஏற்பாடு
    • புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரைசாலை காந்தி திடலில் பெரிய திரை அமைக்கப்பட்டுள்ளது,

    புதுச்சேரி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது.

    இதன் இறுதிப்போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. போட்டியை பொதுமக்கள் ஒன்றாக அமர்ந்து கண்டுகளிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரைசாலை காந்தி திடலில் பெரிய திரை அமைக்கப்பட்டுள்ளது, இந்த திரையில் நண்பகல் முதல் போட்டியின் முடிவு வரை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பு தொடங்கியது.

    வெயிலை பொருட்படுத்தாமல் ரசிகர்கள் போட்டியை காண குவிய தொடங்கினர்.நேரம் செல்ல செல்ல ரசிகர்கள் அதிகளவில் வந்தனர்.

    இதேபோல் புதுவை எல்லைப்புறங்களில் உள்ள மதுபார்களிலும் திறந்த வெளியில் போட்டியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நகர்புறங்களில் பெரிய தொலைக்காட்சி மூலம் ரசிகர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    Next Story
    ×