search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உலகக் கோப்பை இறுதிப்போட்டி: நட்சத்திர ஓட்டலில் ஒருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா?
    X

    உலகக் கோப்பை இறுதிப்போட்டி: நட்சத்திர ஓட்டலில் ஒருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

    • டெல்லியில் இருந்து அகமதாபாத்துக்கான விமான கட்டணம் ரூ.9756-ல் இருந்து ரூ.14,036-க்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • அகமதாபாத்தில் இருந்து திரும்புவதற்கான விமான கட்டணம் 400 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    அகமதாபாத்:

    இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி நாளை மறுநாள் (19-ந்தேதி) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. சுமார் 1 லட்சம் பேர் அமரக்கூடிய அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.

    இந்த நிலையில் இறுதிப் போட்டி காரணமாக அகமதாபாத்தில் ஓட்டல் அறைகளின் ஒருநாள் வாடகை உயர்த்தப்பட்டிருக்கிறது. போட்டி நடைபெறும் அன்று பிரபல நட்சத்திர ஓட்டலில் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. ஓட்டலின் சாதாரண அறையின் ஒருநாள் வாடகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை இருக்கும். அந்த அறைகள் வாடகை ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. உயர்த்தர அறைகள், வாடகை சாதாரணமாக ரூ.35 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை இருக்கும். அந்த அறை களின் வாடகை ரூ.1 லட்சமாக அதிகரிக்கப் பட்டு உள்ளது.

    அதேபோன்று மற்றொரு பிரபல நட்சத்திர ஓட்டலிலும் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. மேலும் மைதானத்தை சுற்றி உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் அறைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. அதேபோல் அகமதாபாத்துக்கான விமான கட்டணம் உயர்ந்துள்ளது.

    டெல்லியில் இருந்து அகமதாபாத்துக்கான விமான கட்டணம் ரூ.9756-ல் இருந்து ரூ.14,036-க்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு ரூ.5515-ல் இருந்து ரூ.8099-ஆகவும் கோவாவில் இருந்து ரூ.7188-ல் இருந்து ரூ.11,933-ஆகவும் கொல்கத்தாவில் இருந்து ரூ.14,175-ல் இருந்து ரூ.20,068 ஆகவும் விமான கட்டணங்கள் உயர்ந்து உள்ளது.

    அகமதாபாத்தில் இருந்து திரும்புவதற்கான விமான கட்டணம் 400 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×