search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kidnap"

    • மாயமான தனியார் மருத்துவமனை நர்ஸ் கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை
    • காதலன் கடத்தியிருக்க கூடும் என்று சந்தேகம்

    திருச்சி,

    திருச்சி காட்டூர் பாத்திமாபுரம் 4-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத்.இவரது மகள் ரம்ஜான் பேகம் (வயது 19). இவர் அரியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்த போது வேலைக்கு வரவில்லை என நிர்வாகத்தினர் கூறினர். இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் ரம்ஜான் பேகத்தை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, ரம்ஜான் பேகம் காதல் வலையில் விழுந்தது தெரிய வந்தது. அந்த அடிப்படையில்அவரை காட்டூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர் கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதன் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் புகையிலை பொருட்களை பஸ்சில் கடத்தி சென்ற மோகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • பயணி போல் நடித்து குட்கா பொருட்களை கடத்தி சென்ற விவகாரம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    தருமபுரி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவைக்கு நேற்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விரைவு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ் தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே வந்தபோது பாளையம் புதூரில் தருமபுரி போக்குவரத்து துறை டிக்கெட் பரிசோதகர் சண்முகம் என்பவர் திடீரென்று வண்டியில் ஏறி பயணிகளிடம் டிக்கெட் கேட்டு சோதனையில் ஈடுபட்டார்.

    அப்போது வண்டியில் திடீரென்று புகையிலை வாசனை வந்தது. உடனே பஸ்சில் இருந்த பயணிகளின் பைகளை அவர் சோதனையிட்டார். அதில் ஒரு பையில் சுமார் 20 கிலோ தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், பான்மசாலா போன்ற அரசு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதும், அந்த பையை கோவை செல்லப்பகவுண்டன் புதூரைச் சேர்ந்த மோகன் (வயது32) என்பவர் பெங்களூருவில்இருந்து கொண்டு வந்ததும் தெரியவந்தது. உடனே அவரை கையும்களவுமாக சண்முகம் பிடித்து தொப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீசார் புகையிலை பொருட்களை பஸ்சில் கடத்தி சென்ற மோகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 20 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பயணி போல் நடித்து குட்கா பொருட்களை கடத்தி சென்ற விவகாரம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கைதான முகமது அனிபா மருதமுத்துவிடம் வேலை செய்து வந்துள்ளார்.
    • ஒரு நகராட்சிக்கான கழிப்பிட கட்டணத்தை வசூல் செய்து அதனை மருதமுத்துவிடம் கொடுத்து வந்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்தவர் மருதமுத்து (வயது 52). இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஆகும். இவர் திருப்பூர் மாநகராட்சி மற்றும் 5 நகராட்சிகளில் கட்டண கழிப்பிட ஒப்பந்ததாரராக உள்ளார். இவரது மகன் கண்ணன் (26). இவர் நேற்று லட்சுமி நகரில் உள்ள மாநகராட்சி கட்டண கழிப்பிடத்தில் வசூலான பணத்தை வாங்குவதற்காக சென்றுள்ளார்.

    அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் கண்ணனை கடத்தி சென்றனர். பின்னர் கண்ணனின் தாயாரிடம் செல்போனில் பேசிய நபர்கள், ரூ.20 லட்சம் கொடுத்தால் கண்ணனை உயிரோடு விடுவோம். இல்லையென்றால் கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மருதமுத்து உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்ணனை கடத்தி சென்ற கும்பல் யார், எதற்காக கடத்தினர் என்று விசாரணை நடத்தினர்.

    அப்போது கடத்தல் கும்பல் கண்ணனை கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் அவரை மீட்டனர்.

    மேலும் அவரை கடத்திய மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த முகமது அனிபா (51), சிவகங்கையை சேர்ந்த கார்த்திக் (35), தேனி எல்லப்பட்டியை சேர்ந்த சஞ்சீவ் (32), சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த லட்சுமணன் (38) ஆகிய 4 பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் கண்ணனை கடத்தியதற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல் கிடைத்தது.

    கைதான முகமது அனிபா மருதமுத்துவிடம் வேலை செய்து வந்துள்ளார். மேலும் ஒரு நகராட்சிக்கான கழிப்பிட கட்டணத்தை வசூல் செய்து அதனை மருதமுத்துவிடம் கொடுத்து வந்துள்ளார். இதனால் மருதமுத்துவிடம் அதிகம் பணம் இருப்பதை அறிந்த முகமதுஅனிபா, பணத்தை பறிக்க திட்டமிட்டார். அப்போது மருதமுத்துவின் மகன் கண்ணனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டார்.

    இதற்காக தனது நண்பர்களான கோவை காந்திபுரத்தில் உள்ள மெஸ்சில் பணிபுரியும் கார்த்திக், சஞ்சீவ், லட்சுமணன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அவர்களும் சம்மதித்துள்ளனர். கண்ணனை கடத்தி பணம் பறித்தால் அதில் ஒரு தொகையை தருவதாக முகமது அனிபா தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து நண்பர்கள் 3பேரையும் திருப்பூர் வரவழைத்த முகமதுஅனிபா புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகே உள்ள லாட்ஜில் தங்க வைத்தார். மேலும் மருதமுத்துவின் மகன் கண்ணன் தினமும் கழிப்பிட கட்டண வசூல் பணத்தை வீட்டிற்கு கொண்டு செல்வதை 4 பேரும் 2 நாட்களாக நோட்டமிட்டுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து அவரை கடத்த முகமது அனிபா மளிகை கடை நடத்தி வரும் தனது நண்பர் ஒருவரிடம் இருந்து காரை வாங்கியுள்ளார். அதன் மூலம் நேற்று கண்ணனை கடத்தியுள்ளனர். பின்னர் பொள்ளாச்சி நெகமத்திற்கு சென்ற அவர்கள் அங்குள்ள வீட்டில் கண்ணனை அடைத்து வைத்ததுடன், கண்ணனின் தாய்க்கு போன் செய்து ரூ.20 லட்சம் பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்காவிட்டால் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி 4பேரையும் கைது செய்தனர். இந்த கடத்தல் சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர். ரூ.20 லட்சம் பணம் கேட்டு வாலிபர் கடத்தப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறுமியை கடந்த ஏப்ரல் 18ம் தேதி அன்று குருகிராமில் இருந்து சந்தீப் மற்றும் அசுதோஷ் ஆகிய இருவர் கடத்திச் சென்றுள்ளனர்.
    • இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

    சிறுமியை கடந்த ஏப்ரல் 18ம் தேதி அன்று குருகிராமில் இருந்து சந்தீப் மற்றும் அசுதோஷ் ஆகிய இருவர் கடத்திச் சென்றுள்ளனர்.

    பின்னர், சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சிறுமி அளித்து வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இருவர் மீதும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (கற்பழிப்பு), பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) சட்டம் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • காரில் கடத்தப்பட்டதாக தந்தை போலீசில் புகார்
    • நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்

    கரூர்,

    அரவக்குறிச்சி அருகே, சிறுமியை கடத்தி சென்றதாக, நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆர். புதுப்பட்டி பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமி, அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திண்டுக்கல் மாவட்டம், ஈட்ட மணநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த வேல்முருகன், நாகராஜன், தங்கராஜ், தண்டபாணி ஆகிய, நான்கு பேரும் சிறுமியை காரில் கடத்தி சென்றதாக, சிறுமியின் தந்தை, அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் வேல்முருகன் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • வேலைக்கு சென்றவர் மாயம்
    • வழக்கு பதிந்து தேடி வரும் போலீசார்

    ஆலங்குடி

    ஆலங்குடி அருகே உள்ள மணவிடுதி கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரின் மகள் மகாலட்சுமி (வயது 22). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். புதுக்கோட்டை உள்ள தனியார் மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல கடைக்கு சென்ற அவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. காணாமல் போன பெண் குறித்து அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் பலனில்லை.இது குறித்து செம்பட்டி விடுதி போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை முத்துசாமி (வயது 52 ) கொடுத்த புகா ரின் பேரில் செம்பட்டிவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை யாரும் கடத்தி விட்டார்களா? அல்லது காதலனுடன் சென்று விட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    • பாபு வரட்டனப்பள்ளி கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • இனோவா காரில் வந்த கும்பல் பாபுவை வழிமறித்தது.

    வானூர்:

    விழுப்புரம் அருகே வானூர் போலீஸ் சரகம் ஒழிந்தியாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுலோசனா. இவர் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். தி.மு.க.வை சேர்ந்தவர். இவரது மகன் சக்திவேல் (வயது 43). இவர் பல்வேறு இடங்களில் பணம்-கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வருகிறார்.

    அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் தந்திகுப்பம் போலீஸ் சரகம் பாலேபள்ளியை சேர்ந்த நிலப்புரோக்கர் பாபு என்பவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சம் கடன் கொடுத்து உள்ளார்.

    அதன்பின்னர் பணத்தை திருப்பி தரவில்லை. இதனால் சக்திவேலுவுக்கும், பாபுவுக்கும் இடையே பிரச்சினை எழுந்தது.

    இந்த நிலையில் நேற்று காலை பாபு வரட்டனப்பள்ளி கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது இனோவா காரில் வந்த கும்பல் அவரை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் நிலப்புரோக்கர் பாபுவை காரில் கடத்தி சென்றது.

    இதுகுறித்து பாபுவின் மனைவி ராஜேஸ்வரி தந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார். அந்த மனுவில், தனது கணவரை கடத்தி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் உள்பட சிலரை தேடினர். அப்போது சக்திவேல் வைத்திருந்த செல்போன் மூலம் துப்பு துலக்கினர். அந்த செல்போன் டவர் வானூர் அருகே திருச்சிற்றம்பலம்கூட்டு ரோட்டில் சக்திவேல் இருப்பதை காட்டியது.

    இதனை தொடர்ந்து தந்திகுப்பம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த சக்திவேலை சுற்றி வளைத்து கைது செய்து அழைத்து சென்றனர். தொடர்ந்து போலீசார் சக்திவேலிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வி.சி.க. பிரமுகர் செல்லப்பன், ஜமாலுதீன், விஜயபாஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
    • கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சிதம்பரம்:

    தஞ்சை மதினா வடக்கு தெருவை சேர்ந்தவர் காஜாமைதீன் (வயது 52). சென்னையில் உள்ளார். இவர் சிதம்பரம் வடக்கு ரதவீதி கே.கே.சி. தெருவில் வசித்து வரும் ஜமாலுதீன் என்பவருக்கு சொந்தமான வீட்டை விலைக்கு வாங்கினார்.

    அந்த வீட்டை அவர் காஜாமைதீனுக்கு பத்திரம் பதிவு செய்து கொடுத்தார். ஆனால், அந்த வீட்டை ஜமாலுதீன் ஒப்படைக்கவில்லை.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜமாலுதீன் சென்னைக்கு சென்று காஜாமைதீனிடம் தனக்கு தருமாறு கேட்டார். ஆனால், காஜாமைதீன் மறுத்து விட்டார்.

    எனவே, ஆத்திரம் அடைந்த ஜமாலுதீன், காஜாமைதீனை காரில் கடத்தி வந்து சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் உள்ள லாட்ஜில் அடைத்தனர்.

    இது தொடர்பாக காஜாமைதீன் செல்போன் மூலம் தனது மனைவிக்கு பேசியுள்ளார். அவர் ஆன்லைன் மூலம் போலீசுக்கு புகார் செய்தார்.

    அதன் பேரில் சென்னை நீலாங்கரை போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு சிதம்பரம் பகுதிக்குட்பட்டதால் அங்கு மாற்றப்பட்டது.

    இது தொடர்பாக ஜமாலுதீன், ரபீக், சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற வி.சி.க. செயலாளர் செல்லப்பன், விஜயபாஸ்கர், செந்தில், நடனம், நடராஜ், ரவீந்திரன் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இவர்களில் வி.சி.க. பிரமுகர் செல்லப்பன், ஜமாலுதீன், விஜயபாஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

    இவர்களிடம் விசாரணை நடத்தியதில் காஜாமைதீனிடம் விற்கப்பட்ட வீட்டை புதுவையை சேர்ந்தவருக்கு ரூ.2 கோடிக்கு விலை பேசியது தெரிய வந்தது.

    கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • தொழிலாளி ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
    • கைது செய்யப்பட்ட நபர் போலீஸ் காவலில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றுள்ளார்

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36), இவரது மனைவி ஜஸ்லீன் கவுர், இவர்களின் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி மற்றும் உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் கடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த திங்கட்கிழமை மெர்சிட் கவுன்டியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் வைத்து கடத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை தேடிவந்தனர்.

    இந்நிலையில், காணாமல் போன 4 பேரின் சடலமும் இண்டியானா சாலை மற்றும் ஹட்ச்ஹின்சன் சாலையை ஒட்டிய பழத்தோட்டத்தில் மீட்கப்பட்டுள்ளது. தொழிலாளி ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறது.

    இந்தக் கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக ஜீஸஸ் மேனுவல் சால்கடோ (வயது 48) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த நபர் போலீஸ் காவலில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொலை செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • 8 மாத பெண் குழந்தை உள்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் கடத்தப்பட்டனர்.
    • இந்தச் சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங் (39), ஆகியோருடன் வசித்து வருகிறார்.

    கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இவர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர். இவர்களை கடத்தியது யார், எதற்காக கடத்தப்பட்டனர் என்ற விபரம் தெரியவில்லை. ஆனால் கடத்திய நபர் பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும், அவரை கண்டால் மக்கள் நெருங்கி செல்லாமல் தொடர்பு கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் 8 மாத குழந்தை உள்பட இந்திய வம்சாவளியினர் 4 பேர் கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மகளை காணவில்லை என்று மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
    • மாணவி வாலிபர் ஒருவருடன் கரூரில் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூரில் உள்ள கல்லூரியில் 17 வயது மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி மகளைக் காணவில்லை என்று மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அந்த மாணவி வாலிபர் ஒருவருடன் கரூரில் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியை பத்திரமாக மீட்டனர். அவருடன் இருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் மாணவி வீட்டின் அருகில் வசிக்கும் ஒர்க் ஷாப் தொழிலாளியான கோபாலகிருஷ்ணன் (வயது 23) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் கல்லூரி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து திருப்பூர் கொங்குநகர் அனைத்து மகளிர் போலீசார் கோபாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பனியன் நிறுவனம் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
    • 4 பேர் கொண்ட கும்பல் லியாகத்அலியை தரதரவென்று இழுத்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனால் மர்மநபர்கள் லியாகத் அலியை கடத்தி சென்றது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் லியாகத் அலி(வயது 40). இவர் திருநீலகண்டபுரம் 3-வது வீதியில் பனியன் நிறுவனம் வைத்துள்ளார்.

    நேற்று முன்தினம் இரவு லியாகத் அலி வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவரது மகன் நிஷார் தந்தையை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் லியாகத் அலி எங்கு சென்றார் என்று விசாரணை நடத்தினர். அப்போது பனியன் நிறுவனம் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நேற்றுமுன்தினம் இரவு 4பேர் கொண்ட கும்பல் லியாகத்அலியை தரதரவென்று இழுத்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனால் மர்மநபர்கள் லியாகத் அலியை கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து லியாகத் அலியை கடத்திய மர்மநபர்கள் யார், எதற்காக கடத்தினர் என்று விசாரணை நடத்தி அவரை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் நேற்றிரவு லியாகத் அலி வீட்டிற்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தன்னிடம் பல லட்சம் பணம் கேட்டு 4பேர் கும்பல் கடத்தி சென்றதாகவும், பணம் இல்லாததால் தன்னை விட்டு விட்டு சென்றதாகவும், போலீசில் புகார் செய்யக்கூடாது என மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×