என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பல லட்சம் பணம் கேட்டு திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர் கடத்தல்- 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
  X

  பல லட்சம் பணம் கேட்டு திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர் கடத்தல்- 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பனியன் நிறுவனம் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
  • 4 பேர் கொண்ட கும்பல் லியாகத்அலியை தரதரவென்று இழுத்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனால் மர்மநபர்கள் லியாகத் அலியை கடத்தி சென்றது தெரியவந்தது.

  திருப்பூர்:

  திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் லியாகத் அலி(வயது 40). இவர் திருநீலகண்டபுரம் 3-வது வீதியில் பனியன் நிறுவனம் வைத்துள்ளார்.

  நேற்று முன்தினம் இரவு லியாகத் அலி வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவரது மகன் நிஷார் தந்தையை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

  போலீசார் லியாகத் அலி எங்கு சென்றார் என்று விசாரணை நடத்தினர். அப்போது பனியன் நிறுவனம் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நேற்றுமுன்தினம் இரவு 4பேர் கொண்ட கும்பல் லியாகத்அலியை தரதரவென்று இழுத்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனால் மர்மநபர்கள் லியாகத் அலியை கடத்தி சென்றது தெரியவந்தது.

  இதையடுத்து லியாகத் அலியை கடத்திய மர்மநபர்கள் யார், எதற்காக கடத்தினர் என்று விசாரணை நடத்தி அவரை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

  இந்தநிலையில் நேற்றிரவு லியாகத் அலி வீட்டிற்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தன்னிடம் பல லட்சம் பணம் கேட்டு 4பேர் கும்பல் கடத்தி சென்றதாகவும், பணம் இல்லாததால் தன்னை விட்டு விட்டு சென்றதாகவும், போலீசில் புகார் செய்யக்கூடாது என மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

  இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×