search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ்சில்  குட்கா பொருட்களை எடுத்து சென்ற வாலிபர் கைது
    X

    அரசு பஸ்சில் குட்கா பொருட்களை எடுத்து சென்ற வாலிபர் கைது

    • போலீசார் புகையிலை பொருட்களை பஸ்சில் கடத்தி சென்ற மோகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • பயணி போல் நடித்து குட்கா பொருட்களை கடத்தி சென்ற விவகாரம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    தருமபுரி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவைக்கு நேற்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விரைவு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ் தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே வந்தபோது பாளையம் புதூரில் தருமபுரி போக்குவரத்து துறை டிக்கெட் பரிசோதகர் சண்முகம் என்பவர் திடீரென்று வண்டியில் ஏறி பயணிகளிடம் டிக்கெட் கேட்டு சோதனையில் ஈடுபட்டார்.

    அப்போது வண்டியில் திடீரென்று புகையிலை வாசனை வந்தது. உடனே பஸ்சில் இருந்த பயணிகளின் பைகளை அவர் சோதனையிட்டார். அதில் ஒரு பையில் சுமார் 20 கிலோ தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், பான்மசாலா போன்ற அரசு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதும், அந்த பையை கோவை செல்லப்பகவுண்டன் புதூரைச் சேர்ந்த மோகன் (வயது32) என்பவர் பெங்களூருவில்இருந்து கொண்டு வந்ததும் தெரியவந்தது. உடனே அவரை கையும்களவுமாக சண்முகம் பிடித்து தொப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீசார் புகையிலை பொருட்களை பஸ்சில் கடத்தி சென்ற மோகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 20 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பயணி போல் நடித்து குட்கா பொருட்களை கடத்தி சென்ற விவகாரம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×