search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kauvery hospital"

    தி.முக. தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் அவரைக் காண காவேரி மருத்துவமனைக்கு முதல்முறையாக தயாளு அம்மாள் இன்று வந்தார். #DMKLeader #Karunanidhi #KauveryHospital
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த மாதம் இறுதியில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    கழுத்தில் பொருத்தப்பட்டு இருந்த செயற்கை சுவாச கருவியை மாற்றிய பிறகு அவருக்கு காய்ச்சல் அடித் தது. அதன் பிறகு கடந்த மாதம் 28-ந்தேதி மூச்சு திணறல் ஏற்பட்டது.

    இதையடுத்து கருணாநிதி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மூச்சு திணறல் உடனடியாக சரியான நிலையில் மறுநாள் அவருக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டது.

    இதன் காரணமாக கருணாநிதியின் உடல்நலத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் காவேரி ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    3 நாட்களுக்கு தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு திரண்டு நின்று, எழுந்துவா தலைவா எழுந்துவா” என்று கண்ணீர் மல்க கோ‌ஷமிட்டனர். நிறைய தொண்டர்கள் இரவு-பகல் பாராது ஆஸ்பத்திரி முன்பே தூங்கி எழுந்தனர்.

    அடுத்த 2 நாட்களில் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் கருணாநிதி உடல்நிலை சீராகி விட்டதாக தெரிவித்தனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கருணாநிதியை நேரில் பார்த்து நலம் விசாரிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

    இதன் காரணமாக தி.மு.க.வினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். காவேரி ஆஸ்பத்திரி முன்பிருந்து கிளம்பி சென்றனர். இதைத் தொடர்ந்து கருணாநிதியை 24 மணி நேரமும் டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். இன்று 10-வது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கருணாநிதி கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள டிரக் கியாஸ்டமி எனும் செயற்கை சுவாச கருவி வழியாக அவர் சுவாசித்து வருகிறார். சில சமயம் தானாகவே சுவாசித்து வருகிறார்.

    இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக கருணாநிதி உடல்நிலையில் ஏற்றமும்-இறக்கமுமாக காணப்படுவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். கடந்த வாரம் கருணாநிதிக்கு கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டது.

    2 தினங்களுக்கு முன்பு கருணாநிதியின் கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை அதிகரித்தது. லண்டனைச் சேர்ந்த டாக்டர் முகமதுரேலா வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆலோசனைப்படி டாக்டர்கள் குழு தற்போது கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கிறது.

    ஆனால் கருணாநிதி உடலில் உள்ள இதர உறுப்புகளிலும் பிரச்சனைகள் எழுந்துள்ளதால் கல்லீரலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு தாமதமாக பலன் கிடைப்பதாக கூறப்படுகிறது.

    கல்லீரல் செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் கருணாநிதிக்கு நேற்று முதல் மஞ்சள் காமாலை ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களிலும் (ப்ளெட்லெட்ஸ்) குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை தீர்க்க டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சைகளை அளித்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை அவரது நாடி துடிப்பிலும் சற்று தொய்வு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை உறுதி செய்ய இயலவில்லை.

    நோய் எதிர்ப்பு சக்தியை தரும் தட்டணுக்கள் குறைந்து வருவதால் கருணாநிதி உடலில் செலுத்தப்படும் மருந்துகள் மிக மெதுவாகவே வேலை செய்கின்றன. இதனால் அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக இன்று மதியம் தகவல்கள் வெளியானது. இது தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    இதையடுத்து கருணாநிதியின் உடல்நிலையை அறிந்து கொள்ள அனைத்து தரப்பினரிடமும் ஆர்வம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் காவேரி மருத்துவமனையை தொடர்பு கொண்டு போனில் கேட்டனர்.

    கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பது தி.மு.க. தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் இன்று மருத்துவமனைக்கு விரைந்தனர். அவரது மனைவி தயாளு அம்மாள் முதன் முதறையாக கருணாநிதியைக் காண இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

    ராஜாத்தி அம்மாள், மு.க.ஸ்டாலின், கனிமொழி, செல்வி ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர். துரை முருகன் உள்ளிட்ட தி.மு.க. மூத்த தலைவர்களும் இன்று மதியம் மருத்துவமனைக்கு வந்தனர்.

    தி.மு.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்றதால் தி.மு.க. நிர்வாகிகளும் காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். இதனால் காவேரி மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கருணாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க மத்திய மந்திரி நிதின்கட்காரி இன்று இரவு சென்னை வருகிறார். #DMKLeader #Karunanidhi #KauveryHospital
    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு 10-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Karunanidhi #KauveryHospital
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த மாதம் இறுதியில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    கழுத்தில் மாட்டப்பட்டு இருந்த செயற்கை சுவாச கருவியை மாற்றிய பிறகு அவருக்கு காய்ச்சல் அடித்தது. அதன் பிறகு கடந்த மாதம் 28-ந்தேதி மூச்சு திணறல் ஏற்பட்டது.

    இதையடுத்து கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மூச்சு திணறல் உடனடியாக சரியான நிலையில் மறுநாள் அவருக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டது.

    இதன் காரணமாக கருணாநிதியின் உடல்நலத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் காவேரி ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    அடுத்த 2 நாட்களில் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டு சீரானது. அவரை 24 மணி நேரமும் டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். இன்று 10-வது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


    கருணாநிதி கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள டிரக்கியாஸ்டமி எனும் செயற்கை சுவாச கருவி வழியாக அவர் சுவாசித்து வருகிறார். சில சமயம் தானாகவே சுவாசித்து வருகிறார். அவர் உடல்நிலை அப்படியே உள்ளது.

    இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக கருணாநிதி உடல்நிலையில் ஏற்றமும்-இறக்கமுமாக காணப்படுவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். சமீபத்தில் கருணாநிதி கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர் முகமதுரேலா வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    லண்டனில் இருந்து வந்துள்ள முகமதுரேலா தெரிவிக்கும் ஆலோசனைப் படி டாக்டர்கள் குழு தற்போது கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கிறது. ஆனால் கருணாநிதி உடலில் உள்ள இதர உறுப்புகளிலும் பிரச்சனைகள் எழுந்துள்ளதால் கல்லீரலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு மெல்ல பலன் கிடைத்து வருகிறது.

    கல்லீரல் செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் கருணாநிதிக்கு கடந்த 2 தினங்களாக மஞ்சள் காமாலை ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது ரத்தத்தில் உள்ள அணுஅளவிலும் குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை தீர்க்க டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சைகளை அளித்து வருகிறது.

    கருணாநிதியால் தனக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை தெரிந்துக் கொள்ள முடிகிறது. தன்னை பார்க்க யார்-யார் வருகிறார்கள் என்பதையும் அவர் உணர்ந்து கொள்வதாக காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

    என்றாலும் கருணாநிதி உடல்நிலையில் மிக வேகமான முன்னேற்றம் இல்லை என்று கூறப்படுகிறது. மெதுவாக அவரது உடல்நிலை சீராகி வருகிறது. எனவே இந்த வார இறுதியில்தான் அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. #DMKLeader #Karunanidhi #KauveryHospital
    ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார். #KarunanidhiHealth #AndhraCM
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால் டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை அளிக்கின்றனர்.

    அவ்வப்போது சளித்தொல்லை ஏற்படுவதால் அதற்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கருணாநிதியின் உடல் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக தி.மு.க.வினர் தினமும் மருத்துவமனைக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

    அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமாத்துறையை சார்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரித்து செல்கின்றனர். செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, மு.க.தமிழரசு, கனிமொழி எம்.பி. உள்பட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் நலம் விசாரிக்க வருபவர்களுக்கு சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.


    இந்நிலையில், ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று காவேரி மருத்துமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.  

    முன்னதாக மத்திய மந்திரி சுரேஷ் பிரபு, பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தனர். கேரளாவை சேர்ந்த சுனில்தாஸ் என்பவர் சாய் பாபா கோவில் பிரசாதத்தை வழங்கினார்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மதியம் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க உள்ளார். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #KarunanidhiHealth #AndhraCM
    மத்திய மந்திரி சுரேஷ் பிரபு உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். #KarunanidhiHealth #KauveryHospital #SureshPrabhu
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி (வயது 94) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியு வார்டில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் நேரில் வந்து விசாரித்துவருகின்றனர்.



    அவ்வகையில், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் ஆகியோர் இன்று மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தனர். கருணாநிதியின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தனர். அவர்களுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நலம் விசாரித்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி சுரேஷ் பிரபு, திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் என்றும், தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் மூத்த அரசியல்வாதி என்றும் கருணாநிதியை பாராட்டினார்.

    இதற்கிடையே கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் அவர் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். #KarunanidhiHealth #KauveryHospital #SureshPrabhu

    நோயின் பிடியில் இருந்து கருணாநிதி புத்துயிர் பெற்று வருவார் என்று கவிஞர் வைரமுத்து நம்பிக்கை தெரிவித்தார். #Karunanidhi #KauveryHospital #Vairamuthu
    சென்னை:

    சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கருணாநிதி உடல்நலன் குறித்து கவிஞர் வைரமுத்து தினமும் நேரில் வந்து நலம் விசாரித்து செல்கிறார். அதன்படி காவேரி ஆஸ்பத்திரிக்கு நேற்று வருகை தந்த கவிஞர் வைரமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    பின்னடைவு இல்லை என்பதே ஓர் ஆறுதலாக இருக்கிறது. கருணாநிதியுடைய வாழ்வில் சோதனைகள் வந்த காலம் எல்லாம் அது அவருக்கு மேன்மையே தந்து இருக்கிறது.

    நெருக்கடி நிலை என்ற சோதனை வந்த போது ஒரு இயக்கத்தை ஒரு தலைவன் எப்படி காப்பாற்ற முடியும் என்ற புகழை அவர் ஈட்டினார். எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகு 13 ஆண்டுகள் ஆட்சி இல்லாமல் ஒரு தலைவன் எப்படி இயக்கத்தை வழி நடத்த முடியும், கட்டிக்காக்க முடியும் என்ற புகழை அவர் பெற்றார்.

    ஒவ்வொரு சோதனையிலும் காலம் அவர் புகழை வளர்த்தே வந்திருக்கிறது. இப்போது இந்த நோயின் தாக்கம் உடல்நலக்குறைவு என்ற இந்த பின்னடைவு கூட கருணாநிதிக்கு நன்மையே தந்து இருக்கிறது என்று சமூக உணர்வாளர்கள் கருதுகிறார்கள்.

    கருணாநிதி மீது இருந்த வசை கழிந்துவிட்டது. கருணாநிதி மீது இருந்த விமர்சனம் ஒழிந்துவிட்டது. கருணாநிதி மீது சொல்லப்பட்ட குறைகள் எல்லாம் சலவை செய்யப்பட்டு விட்டது. ஒட்டுமொத்த சமூகமும் கருணாநிதியின் பெருமைகளை உணர்ந்துக் கொள்வதற்கு இந்த சந்தர்ப்பம் பெரிய வாசலை திறந்து விட்டிருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம்.



    கருணாநிதியின் பெருமையை இப்போது தான் தமிழகம் கருத்து வேறுபாடின்றி ஒப்புக்கொண்டு இருக்கிறது. கைரிக்‌ஷாக்களை ஒழித்த தலைவர் இவர் தான் என்ற செய்தி இளைய உலகத்துக்கு தெரிந்து இருக்கிறது.

    இலவச மின்சாரம் பெற்ற விவசாயிகள் கருணாநிதியை வாழ்த்துகிறார்கள். இட ஒதுக்கீட்டு மூலமாக வாழ்வில் முன்னேறிய பழைய தலைமுறை இப்போது தான் கருணாநிதி புகழை பாடுகிறது.

    செம்மொழி என்ற பெருமையை தமிழுக்கு பெற்று தந்த தலைவன் என்பதை ஊடகங் கள் இப்போது உயர்த்தி பிடிக் கின்றன. விமர்சனங்கள் என்ற கரைகள் எல்லாம் இந்த குறையால் தீர்ந்து விட்டது என்று நாம் கருத வேண்டி இருக்கிறது. உலகத்தில் மிக அதிகமாக கவனித்துக்கொண்டிருப்பவரும், உலகத்தில் தமிழர்களால் அதிகம் கொண்டாடப்படுகிறவரும் கருணாநிதி என்ற செய்தி ஓரளவு எங்களுக்கு ஆதரவு தருகிறது. எல்லா சோதனைகளிலும் புகழோடு மீண்டு வந்த கருணாநிதி நோயின் பிடியில் இருந்தும் மீண்டு புத்துயிர் பெற்று வருவார் என்ற நம்பிக்கை தமிழர்கள் நெஞ்சில் இப்போது நிறைந்திருக்கிறது. காலம் கருணாநிதியை வாழ்த்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Karunanidhi #KauveryHospital  #Vairamuthu

    காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #KauveryHospital #DMK #Karunanidhi #GetWellKarunanidhi #MKStalin #ChandrababuNaidu
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்ச்சி காரணமாக நோய்வாய்பட்டு தற்போது காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முழுநேர மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் கருணாநிதியின் உடல்நிலை தற்போது வெகுவாக முன்னேறியுள்ளது.

    இந்திய அரசியலின் உயிருடன் இருக்கும் மிக மூத்த தலைவர் ஆதலால் கருணாநிதியை சந்திக்க பல்வேறு அரசியல் தலைவர்களும் சென்னை காவிரி மருத்துவமனை வந்தடைந்தனர்.



    அதன்படி, இன்று முன்னாள் பிரதமர் தேவகவுடா சென்னை காவிரி மருத்துவமனை வந்தடைந்தார். முக ஸ்டாலினிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்த தேவகவுடா, கருணாநிதி 100 ஆண்டுகள் கடந்தும் நலமுடன் வாழ்வார் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை சென்னை காவிரி மருத்துவமனை வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #KauveryHospital #DMK #Karunanidhi #GetWellKarunanidhi #MKStalin #ChandrababuNaidu
    காவேரி மருத்துவமனைக்கு வந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். #KarunanidhiHealth #KeralaCM #PinarayiVijayan
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததையடுத்து கடந்த 27-ம் தேதி நள்ளிரவு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



    மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து தினமும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள் என நேரில் வந்து நலம் விசாரித்த வண்ணம் உள்ளனர். தொண்டர்களும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக காவேரி மருத்துவமனை வளாகத்தில் காத்துக்கிடக்கின்றனர்.

    இந்நிலையில், கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார். காவேரி மருத்துவமனைக்கு சென்ற அவர், கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், பிறவி போராளியான கருணாநிதியின் உடல்நிலை மிகவும் முன்னேற்றம் அடைந்திருப்பதாக கூறினார்.

    ‘கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரிடம் நலம் விசாரித்தேன். கருணாநிதி உடல்நிலை வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்தனர். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்’ என்றும் பினராயி விஜயன் கூறினார். #KarunanidhiHealth #KeralaCM #PinarayiVijayan
    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததால் அவர் நாற்காலில் அமரவைக்கப்பட்டார். #DMKLeader #Karunanidhi #KauveryHospital
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 27-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் உடல் நிலை தேறிவருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று கருணாநிதி உடல் நிலை பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    அவரது உடல் நிலை பற்றி கவலை அடைந்த தொண்டர்கள் ஆஸ்பத்திரி முன் 5 நாட்களாக விடிய விடிய காத்து கிடந்தார்கள்.

    துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை பார்த்த படங்கள் வெளியிடப்பட்ட பின்புதான் தொண்டர்கள் நிம்மதி அடைந்தனர்.


    ராகுல் காந்தி கருணாநிதியை பார்க்க வந்த போது அவரது காதில் மு.க.ஸ்டாலின் ராகுல் வந்திருக்கும் தகவலை சொல்வதும் கருணாநிதி கண் திறந்து பார்க்கும் காட்சியும் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    தற்போது கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நேற்று இரவு கருணாநிதி உடல் நிலையில் மேலும் முன்னேற்றமாக அவர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார். முதலில் டாக்டர்கள் அவரை படுக்கையில் சிறிது நேரம் அமரவைத்தனர். அதன் பிறகு அருகில் இருந்த நாற்காலியில் அமரவைத்து சிறிது நேரம் பயிற்சிகள் அளித்தனர்.

    இதுபற்றி ஆஸ்பத்திரி வட்டாரத்தில் கூறும் போது, கருணாநிதி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவரை சிறிது நேரம் நாற்காலியில் அமர வைத்து பயிற்சி அளித்தனர். மருந்துகளை ஏற்றுக் கொண்டு உடல் நிலை ஒத்துழைப்பு அளிக்கிறது என்று தெரிவித்தனர்.

    கருணாநிதி செயற்கை சுவாசம் இல்லாமல் தானாகவே சுவாசிக்கிறார். தேவைப்படும் போது மட்டுமே செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. திரவ உணவு குழாய் வழியாக செலுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.

    இதற்கிடையே முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் ஏற்பாட்டின் பேரில் லண்டன் மற்றும் வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற தொற்று நோய் மருத்துவ சிசிச்சை நிபுணர் நேற்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடலை பரிசோதித்தார். சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான ஆவணங்களையும் பார்த்தார்.

    தற்போது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் திருப்திகரமாக இருப்பதாகவும் இதுவே அவருக்கு போதுமானது என்றும் தெரிவித்தார். மேலும் தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார். #DMKLeader #Karunanidhi #KauveryHospital
    திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நலம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி நேரில் சென்று விசாரித்தார். #Karunanidhi #VijayAntony
    திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

    கருணாநிதி இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க திரையுலகப் பிரபலங்கள் பலரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று வருகின்றனர். 



    ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், கவுண்டமணி, விவேக், சூரி உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர். 

    இந்த நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி நேற்று ஆழ்வார்பேட்டை மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தார். அப்போது நடிகர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார். #Karunanidhi #VijayAntony

    தருமபுரி அருகே தி.மு.க. தலைவர் கருணாநிதியை பார்க்க சென்னை செல்ல அனுமதிக்காததால் தொண்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
    தருமபுரி:

    தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையை சேர்ந்தவர் கணபதி (வயது 55), கட்டிட தொழிலாளி. இவர் தி.மு.க.வின் விசுவாசியாக இருந்து வந்தார். தி.மு.க. நடத்தும் போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கும் சென்றுள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து மருத்துவக்குழு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகிறது.

    கருணாநிதியின் உடல்நலக்குறைவு குறித்து பத்திரிகைகளிலும், டி.வி.யிலும் வெளியான செய்தியை பார்த்த கணபதி மனம் உடைந்தார். கருணாநிதியை நேரில் பார்க்க சென்னைக்கு அழைத்து செல்லுமாறு நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகத்திடம் கேட்டுள்ளார். அவரும் நாளை செல்லலாம் என்று கூறி உள்ளார். அவர் வராததை அறிந்த கணபதி தனிமையில் சென்னை செல்வதற்கு வீட்டில் கேட்டபோது வீட்டில் உள்ளவர்கள் சென்னை செல்ல அனுமதிக்காததால் தருமபுரி வந்து பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி சென்று நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

    இதை பார்த்த அக்கம்பக்கத்தினரும், குடும்பத்தினரும் அவரை மீட்டு தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் டாக்டர் 48 மணி நேரம் கழித்து தான் அவருடைய உடல்நிலையை குறித்து சொல்ல முடியும் என்று கூறி உள்ளார்.

    இவருக்கு மனைவி ராஜம்மாள் மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

    இந்த சம்பவம் தி.மு.க. தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கொடுக்கப்படும் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்ததாக ஜி.கே.வாசன் கூறினார். #Karunanidhi #GKVasan
    சென்னை:

    காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் இன்று ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

    அவருடன் கோவை தங்கம், என்.எஸ்.வி.சித்தன், விடியல் சேகர், பட்டுக்கோட்டை ரங்க ராஜன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் ஆகியோரும் வந்தனர்.

    ஆஸ்பத்திரிக்குள் சென்று கருணாநிதி உடல்நலம் குறித்து ஜி.கே.வாசன் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாநிதியின் உடல் நலம் குறித்து குடும்ப உறுப்பினர்களையும், மூத்த தலைவர்களையும் சந்தித்து விசாரித்தேன். கலைஞருக்கு கொடுக்கப்படும் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறினார்கள்.


    அவருக்கு அளிக்கப்படும் தீவிர சிகிச்சையின் அடிப்படையில் பழையபடி ஆரோக்கியமான நிலைக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு கிடைத்த நல்ல செய்தியாகும். அவர் பூரண நலத்துடன் இல்லம் திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பசும்பொன் மக்கள் கழக தலைவர் இசக்கிமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்- அமைச்சராக 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பல நல்ல திட்டங்களை மக்களுக்கு தந்த கருணாநிதி நிச்சயமாக எமனிடம் போராடி மீண்டு வருவார். தமிழக மக்களின் நலனுக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அவர் உடல்நலம் தேறி வந்து மீண்டும் தமிழக மக்களுக்காக பணியாற்றிட இறைவனை வேண்டுகிறோம்.

    இவ்வாறு இசக்கிமுத்து கூறினார்.

    இதேபோல் கிறிஸ்தவ அமைப்பினர், தொண்டு நிறு வனங்களை சார்ந்தவர்களும் காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதி உடல்நிலை பற்றி கேட்டறிந்தனர். #Karunanidhi #GKVasan
    திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து நடிகர் விஜய் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். #Karunanidhi #Vijay
    திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

    தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

    இந்த நிலையில், சர்கார் படப்பிடிப்பில் பிசியாக இருந்த நடிகர் விஜய், காவிரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரித்தார்.

    முன்னதாக நடிகர் ரஜினிகாந்த், சூரி உள்ளிட்டோர் நேற்று காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Karunanidhi #KauveryHospital #Vijay
    ×