search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதியை பார்க்க சென்னை செல்ல அனுமதிக்காததால் தொண்டர் தற்கொலை முயற்சி
    X

    கருணாநிதியை பார்க்க சென்னை செல்ல அனுமதிக்காததால் தொண்டர் தற்கொலை முயற்சி

    தருமபுரி அருகே தி.மு.க. தலைவர் கருணாநிதியை பார்க்க சென்னை செல்ல அனுமதிக்காததால் தொண்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
    தருமபுரி:

    தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையை சேர்ந்தவர் கணபதி (வயது 55), கட்டிட தொழிலாளி. இவர் தி.மு.க.வின் விசுவாசியாக இருந்து வந்தார். தி.மு.க. நடத்தும் போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கும் சென்றுள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து மருத்துவக்குழு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகிறது.

    கருணாநிதியின் உடல்நலக்குறைவு குறித்து பத்திரிகைகளிலும், டி.வி.யிலும் வெளியான செய்தியை பார்த்த கணபதி மனம் உடைந்தார். கருணாநிதியை நேரில் பார்க்க சென்னைக்கு அழைத்து செல்லுமாறு நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகத்திடம் கேட்டுள்ளார். அவரும் நாளை செல்லலாம் என்று கூறி உள்ளார். அவர் வராததை அறிந்த கணபதி தனிமையில் சென்னை செல்வதற்கு வீட்டில் கேட்டபோது வீட்டில் உள்ளவர்கள் சென்னை செல்ல அனுமதிக்காததால் தருமபுரி வந்து பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி சென்று நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

    இதை பார்த்த அக்கம்பக்கத்தினரும், குடும்பத்தினரும் அவரை மீட்டு தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் டாக்டர் 48 மணி நேரம் கழித்து தான் அவருடைய உடல்நிலையை குறித்து சொல்ல முடியும் என்று கூறி உள்ளார்.

    இவருக்கு மனைவி ராஜம்மாள் மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

    இந்த சம்பவம் தி.மு.க. தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×