என் மலர்
சினிமா

கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நலம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி நேரில் சென்று விசாரித்தார். #Karunanidhi #VijayAntony
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கருணாநிதி இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க திரையுலகப் பிரபலங்கள் பலரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று வருகின்றனர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், கவுண்டமணி, விவேக், சூரி உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி நேற்று ஆழ்வார்பேட்டை மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தார். அப்போது நடிகர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார். #Karunanidhi #VijayAntony
Next Story






