search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi"

    • மகளிர் மாநாட்டில் பங்கேற்க அகில இந்திய அளவில் பெண்களுக்காக பாடுபடுபவர்கள், பெண் தலைவர்கள் ஆகியோரை அழைத்து வருகிறார்கள்.
    • காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து அழைத்துள்ளார்.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பிலும், கட்சி சார்பிலும் ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி தி.மு.க.வின் பல்வேறு அணிகள் மற்றும் அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., மகளிர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார்.

    இதையொட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதி பிரமாண்டமான மகளிர் மாநாடு மற்றும் கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாடு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் 14-ந்தேதி மாலையில் நடைபெறுகிறது.

    இதில் பெண்கள் முன்னேற்றத்துக்காக கருணாநிதி செய்த சாதனைகள், கொண்டு வந்த திட்டங்களை பற்றி எடுத்துரைத்து கருணாநிதிக்கு பெருமை சேர்த்திடும் வகையில் மாநாட்டை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    மகளிர் மாநாட்டில் பங்கேற்க அகில இந்திய அளவில் பெண்களுக்காக பாடுபடுபவர்கள், பெண் தலைவர்கள் ஆகியோரை அழைத்து வருகிறார்கள்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து அழைத்துள்ளார். அவர் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார். மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவரும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தவிர கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பிருந்தா காரத் எம்.பி. உள்ளிட்ட பிரபலங்களை கனிமொழி எம்.பி. நேரில் சென்று சந்தித்து அழைத்து வருகிறார்.

    இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக இரண்டு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் (23-ந்தேதி) அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்று நிகழ்ச்சிகள் பற்றி விளக்குகிறார்.

    • கால் கோள் விழா இந்த மாதம் 29-ந் தேதி நடக்கிறது.
    • பெங்களூர் சாலை காரையில் உள்ள விடுதலை பறவைகள் கட்சி அலுவலகம் அருகில் தங்கத்தில் சிலை அமைக்கப்படுகிறது.

    விடுதலை பறவைகள் கட்சி நிறுவன தலைவர் டெல்லி ராஜா சமூக நல அறக்கட்டளை சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பெங்களூர் சாலை காரையில் உள்ள விடுதலை பறவைகள் கட்சி அலுவலகம் அருகில் தங்கத்தில் சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக கால் கோள் விழா இந்த மாதம் 29-ந் தேதி நடக்கிறது.

    தங்க சிலை அமைக்க தமிழகம் முழுவதும் விடுதலை பறவைகள் கட்சி சார்பில் பல்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதியின் தங்க சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்கள் என்று கட்சியின் நிறுவன தலைவர் டெல்லி ராஜா கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கச்சத்தீவு தாரைவார்ப்பினை தடுத்து நிறுத்த முதலமைச்சர் என்ற முறையில் கருணாநிதி எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
    • கச்சத்தீவு பிரச்சினையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க.தான்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    1974-ம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் மு.கருணாநிதி.

    கச்சத்தீவு தாரைவார்ப்பினை தடுத்து நிறுத்த முதலமைச்சர் என்ற முறையில் கருணாநிதி எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

    இந்த வரலாற்றை படித்துத் தெரிந்து கொள்ளாமல், தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாகவும், அதையும்மீறி கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டது என்று கூறுவதும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. இதற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கச்சத்தீவு பிரச்சினையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க.தான். கச்சத்தீவு ஒப்பந்தத்தை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை எதிர்த்து குரல் கொடுக்காமல் மவுனம் காத்ததுதான் துரோகம்.

    வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து மீண்டும் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்து இருக்கிறார் தி.மு.க. தலைவர். இது பலிக்காது. மக்கள் தி.மு.க.வை பற்றி நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். வருகின்ற மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வீழ்ச்சியை தி.மு.க. சந்திக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கருணாநிதியின் உருவச்சிலையை இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை திறந்து வைக்கிறார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கழக நிர்வாகிகள் வரவேற்பு கொடுக்க உள்ளனர்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சிலை அமைக்கப்பட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு தி.மு.க. தலைமை உத்தரவிட்டுள்ளது.

    இதை உடனே செயல்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் குன்றத்தூர் கோவூர் அருகே பெரிய பணிச்சேரியில் கருணாநிதிக்கு சிலை அமைத்துள்ளார். அங்கு கலைஞர் படிப்பகமும் அமைக்கப்பட்டு உள்ளது.

    கருணாநிதியின் உருவச்சிலையை இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை திறந்து வைக்கிறார். இதுகுறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குன்றத்தூர் வடக்கு ஒன்றியம் பெரிய பணிச்சேரியில் கழகத்திற்கு சொந்தமான இடத்தில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு வெண்கலத்தால் செய்யப்பட்ட திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த திருவுருவச் சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை 6 மணிக்கு திறந்து வைக்கிறார்.

    எனது தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் குன்றத்தூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வந்தேமாதரம் வரவேற்று பேசுகிறார்.

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழக அவைத் தலைவர் துரைசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. து.மூர்த்தி, மாவட்டப் பொருளாளர் விஸ்வநாதன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை ஆ.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    விழாவில் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர், காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், கழக தீர்மானக்குழு செயலாளர் மீ.அ. வைத்தியலிங்கம், தாம்பரம் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன், மற்றும் கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய பகுதி கழக செயலாளர்கள், கழக அணிகளின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    முடிவில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபு நன்றியுரை கூறுகின்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கழக நிர்வாகிகள் வரவேற்பும் கொடுக்க உள்ளனர்.

    இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறி உள்ளார்.

    • உடுமலைப்பேட்டை மத்திய பஸ் நிலையத்தில் சுமார் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டை மத்திய பஸ் நிலையத்தில் சுமார் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தங்கராஜ், தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் வக்கீல் பொன்ராஜ் , உடுமலைப்பேட்டை ரோட்டரி கேலக்ஸி சங்கத்தின் பொருளாளர் வக்கீல் நசீர் உசேன் மற்றும் சங்க ஒருங்கிணைப்பாளர் அனுசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே முன்னாள் முதல் வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஒன்றிய சேர்மன் சண்முக வடிவேல் தலைமை தாங்கி னார்.

    கருணாநிதி உருவப் படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணி வித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சி யில் மாவட்ட மாணவரணி கதிர் ராஜ்குமார், நகர செயலா ளர் கார்த்திகேயன், பேரூ ராட்சி மன்ற தலைவர் கோகிலா ராணி, நாராய ணன், மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
    • தீர்ப்பாயத்தின் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 6-ந்தேதிக்கு ஒத்திவைத்ததோடு இவ்வழக்கில் அரசு சார்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையை சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும், பேனா நினைவு சின்னம் உட்பட அனைத்து கட்டுமானங்களை தடை செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பாயத்தின் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 6-ந்தேதிக்கு ஒத்திவைத்ததோடு இவ்வழக்கில் அரசு சார்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக வலைதளங்களில் கருணாநிதி பற்றி ரீல்ஸ்களை பதிவிட வேண்டும்.
    • சட்டத்துறை சார்பில் பேச்சு போட்டி நடத்த வேண்டும். பொறியாளர் அணி சார்பில் கல்லூரிகளில் கவியரங்கம், பட்டிமன்றம் நடத்த வேண்டும்.

    சென்னை:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்காக தி.மு.க. தலைமை கழகம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு அணியினரும் எத்தகைய நிகழ்ச்சிகளை ஆண்டு முழுவதும் நடத்த வேண்டும் என்று தலைமை கழகம் வரையறுத்துள்ளது.

    அதற்கான பட்டியலை தி.மு.க. தலைமை கழகம் தற்போது வெளியிட்டு உள்ளது. தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் கடந்த 5-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு அணியினருக்கும் தி.மு.க. தலைமை கழகம் அளித்துள்ள நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-

    தி.மு.க. இளைஞரணியினர் மாவட்ட வாரியாக பேச்சு போட்டி நடத்தி மாநில அளவில் 100 பேச்சாளர்களை கண்டறிந்து அவர்களை மாநில சொற்பொழிவாளர்களாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாரத்தான் தொடர் ஓட்டம் நடத்த வேண்டும்.

    தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக வலைதளங்களில் கருணாநிதி பற்றி ரீல்ஸ்களை பதிவிட வேண்டும். யூடியூப்பில் கருணாநிதி வாழ்க்கை சாதனைகளை விளக்கும் காணொலிகளை பதிவிட வேண்டும்.

    மாணவர் அணியினர் சார்பில் மீண்டும் மாணவர் மன்றம் உருவாக்கப்பட்டு அனைத்து கல்லூரிகளிலும் பேச்சு போட்டி நடத்த வேண்டும். மகளிர் அணி சார்பில் அகில இந்திய அளவில் பெண் தலைவர்களின் கருத்தரங்கம் நடத்தப்பட வேண்டும்.

    மருத்துவ அணி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும். இலக்கிய அணி சார்பில் கருணாநிதியின் இலக்கியங்கள் குறித்து தமிழறிஞர்கள் கலந்து கொள்ளும் ஆய்வரங்கங்கள் நடத்தப்பட வேண்டும். மேலும் கல்வியாளர்கள் பங்கேற்கும் சொல்லரங்கமும் நடத்தப்பட வேண்டும்.

    கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படங்களை மாவட்டம் தோறும் காட்சிப்படுத்த வேண்டும். விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி 38 மாவட்டங்கள் வழியாக கலைஞர் சுடர் தொடர் ஓட்டம் நடத்த வேண்டும்.

    சட்டத்துறை சார்பில் பேச்சு போட்டி நடத்த வேண்டும். பொறியாளர் அணி சார்பில் கல்லூரிகளில் கவியரங்கம், பட்டிமன்றம் நடத்த வேண்டும்.

    வர்த்தகர் அணி சார்பில் தூத்துக்குடி, மதுரை, கோவை, திருச்சி, வேலூரில் கருணாநிதி சாதனைகளை விளக்கும் கலைஇரவு நடத்த வேண்டும். தொண்டர் அணி சார்பில் சினிமா நடிகர்-நடிகைகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடத்த வேண்டும். சுற்றுச்சூழல் அணி சார்பில் 1000 இடங்களில் மரம் நட வேண்டும்.

    நெசவாளர் அணி சார்பில் கண்காட்சி நடத்த வேண்டும். மீனவர் அணி சார்பில் கடலோர பகுதிகளில் குறைதீர்க்கும் முகாம் நடத்தவேண்டும். ஆதிதிராவிடர் பிரிவு சார்பில் சமநீதி கோட்பாடுகளை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.

    மாவட்ட செயலாளர்கள் மூலம் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட வேண்டும். அனைத்து ஊர்களிலும் கொடி கம்பம் நிறுவ வேண்டும். மேலும் 234 சட்டசபை தொகுதி வாரியாக 234 இடங்களில் கருணாநிதிக்கு முழு உருவ சிலைகள் வைக்க இடங்களையும், தேதிகளையும் உறுதி செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து உள்ளது.

    • வாடிப்பட்டியில் கருணாநிதி நினைவு நாள் ஊர்வலம் நடந்தது.
    • பழைய நீதிமன்றத்தில் இருந்து பஸ் நிலையம் வரை நடந்தது.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட துணைச்செயலாளர் வெங்கடேசன் எம். எல். ஏ. தலைமையில் கருணாநிதி உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர் பால.ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் அயூப்கான், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மாவட்ட துணைச் செயலாளர் ரோகிணி, மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், ராம் மோக ன், ஒன்றிய பிரதிநிதி எல்.எஸ். அய்யாவு, அமைப்பு சாரா அணி அமைப்பாளர் அய்யங்கோட்டை விஜி, எம் எஸ் முரளி, வினோத், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் பிரபு நன்றி கூறினார். முன்னதாக பழைய நீதிமன்றத்தில் இருந்து பஸ் நிலையம் வரை அமைதி ஊர்வலம் நடந்தது.

    • முன்னாள் முதல்வர் கருணாநிதி 5-வது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
    • மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராம–லிங்கம் எம்.எல்.ஏ. வழிகாட் டுதலின் படி மண்டபம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் பிரவீன் தலைமையில் பாரதி நகர் பேருந்து நிலை–யத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்வில் ஒன்றிய அவைத்தலைவர் பாலசுப்பி–ரமணி, ஒன்றிய பொருளா–ளர் கணேசன், மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரே–சன், பொதுக்குழு உறுப்பி–னர் தண்டபானி, மாவட்ட தொண்டரணி அமைப்பா–ளர் ராஜா, முன்னாள் ஒன்றிய செயலாளர் கனகு, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பகத்சிங் சேதுபதி,

    மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அசாரு–தீன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜெகன், மாவட்ட பிரதிநிதி. கார்மேகம், முருகபூபதி, இளைஞரணி யூசுப், வினோத், பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கெளதம், பிரசாத், அசாரு–தீன், கிளை செயலாளர்கள் பூசைத்துரை, செல்வம், ஆனந்த், சோமசுந்தரம், மோகன், விசுவநாதன், நாக–லிங்கம் மேலும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
    • கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மதுரை

    மதுரையில் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி தொ.மு.ச. சார்பில் அனுசரிக்கப்பட்டது. மண்டல செயலாளர் ராஜேஸ்கண்ணன், நிர்வாகி சுபாஷ் ஆகியோர் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் முத்தையா, ரிச்சர்ட், குமார், முத்துப்பாண்டி, கென்னடி, சண்முகசுந்தரம், காமாட்சி அப்பன், எபினேசர்பால், பரமேஸ்வரன், சரவணன், திருவேட்டை ஜாகீர்உசேன், செபாஸ்டியன், ராஜன், ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
    • தி.மு.க. ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    சாயல்குடியில் தி.மு.க. கிழக்கு ஒன்றியம் மற்றும் சாயல்குடி பேரூர் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் அனுச ரிக்கப்பட்டது. சாயல்குடி மும்முனை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், சாயல்குடி பேரூர் செயலாளர் வெங்க டேஷ் ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமர் மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பா ளர் சத்தியேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள்பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி காமராஜ், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், துணை சேர்மன் மணி மேகலை, பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத் திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முனீஸ்வரன், சாயல்குடி புனித ராஜன் உள்ளிட்ட தி.மு.க. ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    ×