என் மலர்
நீங்கள் தேடியது "நினைவு நாள் ஊர்வலம்"
- வாடிப்பட்டியில் கருணாநிதி நினைவு நாள் ஊர்வலம் நடந்தது.
- பழைய நீதிமன்றத்தில் இருந்து பஸ் நிலையம் வரை நடந்தது.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட துணைச்செயலாளர் வெங்கடேசன் எம். எல். ஏ. தலைமையில் கருணாநிதி உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர் பால.ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் அயூப்கான், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மாவட்ட துணைச் செயலாளர் ரோகிணி, மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், ராம் மோக ன், ஒன்றிய பிரதிநிதி எல்.எஸ். அய்யாவு, அமைப்பு சாரா அணி அமைப்பாளர் அய்யங்கோட்டை விஜி, எம் எஸ் முரளி, வினோத், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் பிரபு நன்றி கூறினார். முன்னதாக பழைய நீதிமன்றத்தில் இருந்து பஸ் நிலையம் வரை அமைதி ஊர்வலம் நடந்தது.






