என் மலர்
நீங்கள் தேடியது "Freedom Birds Party"
- கால் கோள் விழா இந்த மாதம் 29-ந் தேதி நடக்கிறது.
- பெங்களூர் சாலை காரையில் உள்ள விடுதலை பறவைகள் கட்சி அலுவலகம் அருகில் தங்கத்தில் சிலை அமைக்கப்படுகிறது.
விடுதலை பறவைகள் கட்சி நிறுவன தலைவர் டெல்லி ராஜா சமூக நல அறக்கட்டளை சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பெங்களூர் சாலை காரையில் உள்ள விடுதலை பறவைகள் கட்சி அலுவலகம் அருகில் தங்கத்தில் சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக கால் கோள் விழா இந்த மாதம் 29-ந் தேதி நடக்கிறது.
தங்க சிலை அமைக்க தமிழகம் முழுவதும் விடுதலை பறவைகள் கட்சி சார்பில் பல்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதியின் தங்க சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்கள் என்று கட்சியின் நிறுவன தலைவர் டெல்லி ராஜா கூறினார்.






