search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka Assembly"

    கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கவர்னர் வஜுபாய் வாலா ராஜினாமா செய்வது நல்ல யோசனையாக இருக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #rahulgandhi #karnatakagovernor
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பா அறிவித்தார். 

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘கர்நாடக மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்களை வெளிப்படையாக விலைக்கு வாங்குவதை பிரதமர் மோடி நேரடியாக ஆதரித்ததை மக்கள் பார்த்தனர்.

    எனவே, நாட்டில் ஊழலை ஒழிப்பேன் என்று அவர் பேசி வருவது அப்பட்டமான பொய் என்பதும் அவரே ஊழல்வாதி என்பதும் தெளிவாக புரிகிறது. 

    பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நின்றதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். இனியும் காங்கிரஸ் கட்சி இதர எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பா.ஜ.க.வை வீழ்த்தும். கவர்னர் வஜுபாய் வாலா ராஜினாமா செய்வது நல்ல யோசனையாக இருக்கும் என நான் கருதுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். #rahulgandhi #karnatakagovernor
    கர்நாடக சட்டசபையில் இன்று எடியூரப்பா ராஜிமாமா செய்த பின்னர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தேசிய கீதத்துக்கு மதிப்பளிக்காமல் வெளியேறியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #nationalanthem #rahulgandhi #karnatakaassembly
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பின்னர், அவையை விட்டு அவர் வேகமாக வெளியேறியதும், சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒப்படைப்பதாக தற்காலிக சபாநாயகர் போபையா அறிவித்தார். 

    அப்போது, வழக்கமாக இசைக்கப்படும் தேசிய கீதம் ஒலிபரப்பானது. சில எம்.எல்.ஏ.க்கள் மட்டும் தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் நின்றிருந்தனர். ஆனால், பலர் அவசரமாக வெளியே செல்வதில் குறியாக இருந்தனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தேசிய கீதத்துக்கு மதிப்பளிக்காமல் வெளியேறியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவில், ‘கர்நாடக மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்களை வெளிப்படையாக விலைக்கு வாங்குவதை பிரதமர் மோடி நேரடியாக ஆதரித்ததை மக்கள் பார்த்தனர்.


    எனவே, நாட்டில் ஊழலை ஒழிப்பேன் என்று அவர் பேசி வருவது அப்பட்டமான பொய் என்பதும் அவரே ஊழல்வாதி என்பதும் தெளிவாக புரிகிறது. பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நின்றதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.

    கர்நாடக சட்டசபையில் இன்று அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்த பின்னர் எம்.எல்.ஏ.க்களும், தற்காலிக சபாநாயகரும் தேசிய கீதத்துக்கு மதிப்பளிக்காமல் வெளியே சென்றதை கவனித்தீர்களா? ஆட்சி, அதிகாரத்தில் இருந்தால் அரசின் எந்த அமைப்பையும் அவமரியாதைப்படுத்த இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பது தெரிகிறது’ என குறிப்பிட்டுள்ளார். #nationalanthem #rahulgandhi #karnatakaassembly 
    கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக இன்று சிறப்பு கூட்டம் நடைபெற்று வரும்நிலையில், காலை அமர்வில் வராத 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மதியம் அவைக்கு வந்தனர். #KarnatakaFloorTest #absentMLAs
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க. மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். இது எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 15 நாட்கள் அவகாசம் பெற்று, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரது ஆதரவுடன் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க பா.ஜ.க. திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டது.

    அதன்படி இன்று சட்டமன்ற சிறப்பு கூட்டம்  நடைபெற்று வருகிறது. காலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். 195 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பிறகு சட்டசபை 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்புக்கு வராததால் சந்தேகம் எழுந்தது. அவர்கள் பா.ஜ.க. எம்எல்ஏ ஒருவரின் பிடியில் இருப்பதாகவும் பேசப்பட்டது. பின்னர் அந்த எம்எல்ஏக்களில் பிரதாப் கவுடா பாட்டீல் பேரவைக்கு வந்தார்.

    இந்நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு சட்டமன்றம் மீண்டும் கூடியபோது மற்றொரு எம்எல்ஏ ஆனந்த் சிங்கும் அவைக்கு வந்தார். இதையடுத்து மீதமுள்ள எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். பதவியேற்புக்குப் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

    காணாமல் போனதாக கூறப்பட்ட 2 எம்எல்ஏக்களையும் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் கட்டாயப்படுத்தி வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  #KarnatakaFloorTest #absentMLAs
    கர்நாடக சட்டமன்ற சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கி புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்று வரும் நிலையில், இரண்டு எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வரவில்லை. KarnatakaFloorTest #CongressMLAs #BJP
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறாத பா.ஜ.க. ஆட்சியமைத்ததால், மெஜாரிட்டியை நிரூபிக்க இன்று சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. காலையில் அவை கூடியதும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொண்டனர். தற்காலிக சபாநாயகர் போபையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    மொத்தம் உள்ள 224 உறுப்பினர்களில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் சிங், பிரதாப் கவுடா ஆகிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க வரவில்லை. அவர்களின் பெயர்களை சபாநாயகர் வாசித்தபோது இருக்கையில் இல்லை. பின்னர் பிரதாப் கவுடா தாமதமாக வந்து பதவியேற்றார்.  இதே போல் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. சோமசேகர் ரெட்டியின் பெயரை சபாநாயகர் வாசித்த போது அவர் அவையில் இல்லை.

    எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரும்போது, மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வராமல் இருந்தாலோ, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் அணி மாறி வாக்களித்தாலோ, அவையின் பலம் குறைந்து, எடியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிடும்.

    எனவே, இன்று மாலை 4 மணிக்குள் மேலும் சில எம்.எல்.ஏ.க்களை வாக்கெடுப்பில் பங்கேற்க செய்யாமல், குறுக்கு வழியை பா.ஜ.க. நாடலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது. காங்கிரஸ் கட்சியிலுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை குறி வைத்து பா.ஜ.க. தனது இறுதிக்கட்ட பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #KarnatakaFloorTest #CongressMLAs
    நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதை முன்னிட்டு கர்நாடகா சட்டசபையான விதான் சவுதா வளாகத்தில் சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Karnataka #KarnatakaFloorTest #KarnatakaAssembly
    பெங்களூர்:

    நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதை முன்னிட்டு கர்நாடகா சட்டசபையான விதான் சவுதாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அம்மாநில டி.ஜி.பி.க்கு சுப்ரீம்கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கர்நாடகா போலீஸ் டி.ஜி.பி. நீல்மணி என்.ராஜு மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் சென்று விதான் சவுதா பகுதிகளை ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார். அவர் உத்தரவின் பேரில் விதான் சவுதா வளாகத்தில் சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூன்று வளைய பாதுகாப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

    ஓட்டெடுப்பு நடக்கும் சமயத்தில் ஏதேனும் இடையூறு, பிரச்சனை ஏற்பட்டால் அதை சமாளிக்க பெங்களூர் மேற்கு பகுதி கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் பி.கே.சிங் தலைமையில் தனிப்படை தயாராக உள்ளது. அந்த படையில் 5 துணை போலீஸ் கமி‌ஷனர்கள், 20 உதவிக் கமி‌ஷனர்கள், 40 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் இடம் பெற்றுள்ளனர். ஓட்டெடுப்பு காரணமாக இன்று பொதுமக்கள் யாரும் விதான் சவுதாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    இதற்கிடையே விதான் சவுதா பகுதியில் கட்சிக்காரர்கள் அத்துமீறி ஊர்வலம், போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதில் போலீசார் உஷாராக உள்ளனர். அவற்றை தடுப்பதற்காக சட்டசபை பகுதியில் 144 தடை உத்தரவை பெங்களூர் போலீஸ் கமி‌ஷனர் சுனீல்குமார் பிறப்பித்துள்ளார். #Karnataka #KarnatakaFloorTest #KarnatakaAssembly
    கர்நாடகாவில் எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக நாளை காலை 11 மணிக்கு சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். #KarnatakaGovernor #KarnatakaAssembly
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஆட்சியமைக்க 112 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் பா.ஜ.க.விடம் 104 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளது. எனவே, வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு வலை விரித்துள்ளது. இதனால் தங்களிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை தக்க வைப்பதில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. அதேசமயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசை வீழ்த்தவும் ஆயத்தமாகி வருகின்றன.

    இந்த சூழ்நிலையில்  நாளை காலை 11 மணிக்கு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். சபையை வழிநடத்துவதற்கு தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவை அவர் நியமனம் செய்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    போபையா நியமனத்திற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறது. உச்ச நீதிமன்றத்தை அணுகி, போபையாவின் முந்தைய செயல்பாடுகளை சுட்டிக்காட்டி  தடை பெறவும் முயற்சிக்கலாம் என தெரிகிறது. 

    நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் கர்நாடக காவல்துறை உயரதிகாரிகள் இன்று மாலை அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினர். எம்.எல்.ஏ.க்கள் வரும்போது கூடுதல் பாதுகாப்பு அளிப்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #KarnatakaGovernor #KarnatakaAssembly
    கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள போப்பையா ஏற்கனவே 2009ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை சபாநாயகராக பணியாற்றியிருக்கிறார். #KGBopaiah #karnatakaassembly
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் நாளை சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஆட்சியமைக்க 112 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், 104 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட பா.ஜ.க.வை ஆட்சிப்பொறுப்பில் அமர்த்தியதை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. அதேசமயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசை வீழ்த்த ஆயத்தமாகி வருகிறது.

    இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்காக தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போப்பையாவை ஆளுநர் நியமித்துள்ளார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான இவர் ஏற்கனவே 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை சபாநாயகராக பொறுப்பில் இருந்துள்ளார். மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

    2011ம் ஆண்டு எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்தார் போப்பையா. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

    தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தகுதி நீக்கத்தை உறுதி செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. எடியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற ஏதுவாக, எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்கள் 16 பேரை விரைவாக தகுதிநீக்கம் செய்ததாக சபாநாயகர் போப்பையாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #KGBopaiah #karnatakaassembly
    கர்நாடகாவில் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்காத நிலையில், ஆங்கிலோ இந்திய எம்.எல்.ஏவை நியமித்த கவர்னரின் உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ், மஜத சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன. #KarnatakaCMRace
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்கள் வென்ற கட்சி என்ற அடிப்படையில் எடியூரப்பா இன்று முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்துள்ள மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

    இந்நிலையில், ஆங்கிலோ இந்திய எம்.எல்.ஏ பதவிக்கு வினிஷா நீரோ என்பவரை நியமித்து கவர்னர் வாஜுபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் மஜக சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது. எடியூரப்பா அரசு பெரும்பான்மையை இன்னும் நிரூபிக்காத நிலையில், ஆங்கிலோ இந்திய எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது என அதில் கூறப்பட்டுள்ளது.

    எடியூரப்பா பதவியேற்க தடை கோரிய மனுவுடன், இந்த மனு நாளை சேர்த்து விசாரிக்கப்பட உள்ளது. நீதிபதிகள் ஏகே சிக்ரி, எஸ்ஏ போப்டே, அசோக் பூஷன் மேற்கண்ட மனுவை விசாரிக்கின்றனர். 
    ×