search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kane Williamson"

    • குஜராத் அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.
    • குஜராத் அணி பீல்டிங் செய்த போது வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டது.

    ஐபிஎல் 16-வது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதன் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதின.

    இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் குஜராத் அணி பீல்டிங் செய்த போது வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டது. ருதுராஜ் அடித்த பந்தை எல்லை கோட்டில் நின்ற தடுக்க முற்பட்ட போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பாதிலேயே களத்தில் இருந்து வெளியேறினார்.

    இந்நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வில்லியம்சன் ஐபிஎல் முழு சீசனில் இருந்தும் விலகியுள்ளார்.

    • பந்தை பிடித்து உள்ளே வீசிய அவர் கீழே விழுந்தபோது முழங்காலில் பலத்த அடிபட்டது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.

    அகமதாபாத்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.

    இப்போட்டியின் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன், சிக்சருக்கு சென்ற பந்தை கேட்க் பிடிக்க முயன்றபோது பலத்த காயமடைந்தார். பவுண்டரி எல்லையில் துள்ளிக்குதித்து பந்தை பிடித்து உள்ளே வீசிய அவர் கீழே விழுந்தபோது முழங்காலில் பலத்த அடிபட்டது. அவரால் எழுந்திருக்க முடியவில்லை. வலியால் துடித்த அவருக்கு மருத்துவக் குழுவினர் வந்து உதவி செய்தனர். பின்னர் அவர் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். 

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன் தனது 26-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
    • டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து வீரர்களில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை வில்லியம்சன் படைத்தார்.

    வெலிங்டன்:

    இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் வெலிங்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 435 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 209 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. இதனால் 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை நியூசிலாந்து விளையாடியது.

    வில்லியம்சனின் சதத்தால் நியூசிலாந்து 162.3 ஓவரில் 483 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 258 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் 5 விக்கெட் கைப்பற்றினார். தனது 26-வது சதத்தை (92 டெஸ்ட்) பூர்த்தி செய்தார். அவர் 132 ரன் எடுத்து (282 பந்து, 12 பவுண்டரி) அவுட் ஆனார்.

    2-வது இன்னிங்சில் வில்லியம்சன் 32 ரன்கள் எடுத்த போது டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து வீரர்களில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார். அவர் டெஸ்டில் 7,787 ரன் எடுத்துள்ளார். இதற்கு முன்பு ரோஸ் டெய்லர் 7,683 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.

    • பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 311 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது.
    • நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 61 ரன் எடுத்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    கராச்சி:

    பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 438 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 612 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

    174 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி நேற்றைய 4-ம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 77 ரன் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இன்று 5-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் அணியின் நௌமன் அலி, பாபர் அசாம் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் இமாம் உல் ஹக் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு சர்ப்ராஸ் கான் ஒத்துழைப்பு கொடுத்தார். சர்ப்ராஸ் கான் 53 ரன்னிலும், ஆகா சல்மான் 6 ரன்னிலும் வெளியேறினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இமாம் உல் ஹக் 96 ரன்னில் அவுட்டானார். அப்போது 7 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் 206 ரன்கள் எடுத்திருந்தது.

    அப்போது 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சவுத் ஷகீல், வாசிம் ஜுனியர் பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடி 71 ரன்களை எடுத்தபோது பிரிந்தது. வாசிம் ஜுனியர் 43 ரன்னில் அவுட்டனார்.

    இறுதியில், பாகிஸ்தான் 8 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. ஷகீல் 55 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. அடித்து ஆடி வெற்றி பெற வேண்டும் என அந்த அணி வீரர்கள் விளையாடினர்.

    இறுதியில், நியூசிலாந்து 7.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. பிரேஸ்வெல் 3 ரன்னில் அவுட்டானார். டாம் லாதம் 35 ரன்னும், கான்வே 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதனால் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்சன் அறிவிக்கப்பட்டார். 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 2-ம் தேதி தொடங்குகிறது.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பு மரியாதை.
    • இந்தமாதம் பாகிஸ்தானுக்கான டெஸ்ட் சுற்றுப்பயணத்தின்போது சவுதி கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். புதிய கேப்டனாக சவுதி பொறுப்பேற்கிறார். 346 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள சவுதி, 22 முறை டி20 அணியை வழிநடத்தியுள்ளார். இந்தமாதம் பாகிஸ்தானுக்கான டெஸ்ட் சுற்றுப்பயணத்தின்போது சவுதி கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். அவர் நியூசிலாந்தின் 31வது டெஸ்ட் கேப்டனாவார்.

    கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து கேன் வில்லியம்சன் கூறும்போது, அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது இதுதான் சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பு மரியாதை. என்னைப் பொறுத்தவரை, டெஸ்ட் கிரிக்கெட் என்பது விளையாட்டின் உச்ச நிலையாகும். டெஸ்டில் அணியை வழிநடத்தும் சவால்களை நான் அனுபவித்தேன்.

    எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் இந்த முடிவுக்கான நேரம் சரியானது என்று உணர்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். வில்லியம்சன் 2016 இல் பிரெண்டன் மெக்கல்லத்திடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து 38 போட்டிகளின் நியூசிலாந்து (22 வெற்றி, 8 டிரா, 10 தோல்வி) டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் நியூசிலாந்து அணியில் இடம் பெறுகிறார்.
    • ஆக்லாந்து ஒருநாள் போட்டியில் வில்லியம்சன் மீண்டும் அணியில் இணைகிறார்.

    நேப்பியர்

    நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்துச் செய்யப்பட்டது. 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை மருத்துவரை சந்திப்பதற்காக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவரது முழங்கை வலி பிரச்சினைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும், நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

    எங்கள் வீரர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக்லாந்தில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் வில்லியம்சன் மீண்டும் அணியில் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3வது டி20 போட்டியில் வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அணியை வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • எல்லோராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்பது இயற்கையானது.
    • டிரெண்ட் போல்ட் எங்கள் அணியில் ஒரு பெரிய அங்கமாக இருந்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி அரையிறுதியில் தோற்று வெளியேறின. இந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து செல்ல உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

    இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும் செயல்படுவார். இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக வில்லியம்சன் தொடர்கிறார். டிரண்ட் போல்ட் மற்றும் கப்திலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் இந்தியாவுடனான தொடர் குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது:-

    இந்திய அணியில் ஏராளமான சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். எல்லோராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்பது இயற்கையானது. டிரெண்ட் போல்ட் எங்கள் அணியில் ஒரு பெரிய அங்கமாக இருந்துள்ளார். அவரை மீண்டும் நியூசிலாந்து அணியில் பார்ப்போம் என நம்புகிறேன்.

    இவ்வாறு வில்லியம்சன் கூறினார்.

    • உடல் நலம் சரியில்லாத நிலையில் உள்ள இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா?.
    • நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் இன்று நடக்கும் கடைசி போட்டியில் களமிறங்குவதை உறுதிப்படுத்தி உள்ளார்.

    நாட்டிங்காம்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்ஸில் இன்று தொடங்குகிறது.

    முதல் 2 போட்டியில் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்ய முயற்சி செய்யும். 3 போட்டிகளிலும் வென்று தொடரை முழுமையாக வெல்ல இங்கிலாந்து அணி முனைப்பு காட்டும்.

    கொரோனா பாதிப்பு காரணமாக முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் இன்று நடக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டியில் களமிறங்குவதை உறுதிப்படுத்தி உள்ளார். உடல் நலம் சரியில்லாத நிலையில் உள்ள இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

    • நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் லேசான கொரோனா தொற்று காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    • இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஜோரூட் தேர்வு செய்யப்பட்டார்.

    3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் லேசான கொரோனா தொற்று காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

    இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வில்லியம்சனுக்கு பதிலாக ஹமிஷ் ரூதர்ஃபோர்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் 7 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார். இவர் இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    அபுதாபியில் நேற்று நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசததில் நியூசிலாந்து வீழ்த்தியதால், இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது.
    அபுதாபி:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியில் விளையாடும் 12 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன், ஒரு முறை மோத வேண்டும். 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

    இதில் குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன.

    இந்நிலையில், குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் அணி தான் விளையாடிய 5 போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதனால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

    கேன் வில்லியம்சன்

    நியூசிலாந்து அணி தான் விளையாடிய 5 போட்டிகளில் தலா 4 வெற்றியைப் பெற்று 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணியும் அரையிறுதி வாய்ப்பை பெற்றுள்ளது.

    ஏற்கனவே, இந்தியா, ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன.

    அபுதாபியில் 10ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    துபாயில் 11ம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    உலகக்கோப்பை போன்ற முக்கியமான தொடர்களில் பின்வரிசை வீரர்கள் ரன் குவிப்பது அவசியம் என்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்க இன்னும் 4 தினங்களே உள்ளது. வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை14-ந்தேதி வரை உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நடக்கிறது.

    உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு 10 நாடுகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தன. 1983 மற்றும் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. அதன்படி நியூசிலாந்துடன் இந்திய அணி நேற்று மோதிய பயிற்சி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

    முதலில் விளையாடிய இந்திய அணி 39.2 ஓவர்களில் 179 ரன்னில் சுருண்டது. 8-வது வீரராக களம் இறங்கிய ஜடேஜா 50 பந்தில் 54 ரன்னும் (6 பவுண்டரி 2 சிக்சர்), ஹர்திக் பாண்டியா 30 ரன்னும் எடுத்தனர். போல்ட் 4 விக்கெட்டும், நீசம் 3 விக்கெட்டும், சவுத்தி, கிராண்ட்ஹோம், பெர்குசன் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.



    பின்னர் விளையாடிய நியூசிலாந்து 37.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னாள் கேப்டன் டெய்லர் 71 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 67 ரன்னும் எடுத்தனர். பும்ரா, சாஹல், ஜடேஜா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பயிற்சி ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    நாங்கள் திட்டமிட்டு ஆடவில்லை, எங்கள் முன்பு கடுமையான சவால்கள் இருந்தன. இங்கிலாந்தில் உள்ள சில இடங்களில் தட்ப வெப்பநிலை, ஆடுகள தன்மை ஆகியவற்றை எதிர்பார்க்கவில்லை. 50 ரன்னில் 4 விக்கெட் என்ற நிலை 180 ரன்னை இலக்காக நிர்ணயித்தது நல்ல முயற்சியாகும்.

    உலகக்கோப்பை போன்ற முக்கியமான போட்டிகளில் முன்னிலை பேட்ஸ்மேன்கள் ஆடாதபோது பின்கள வீரர்கள் ரன் குவிப்பது அவசியமானது. இதற்கு அவர்கள் இங்குள்ள மைதானத்தில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். ஜடேஜா நம்பிக்கை அளிக்கும் வகையில் பின்கள வரிசையில் ஆடினார். எங்களது பந்து வீச்சு நன்றாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    வெற்றி குறித்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, ‘‘வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்த வெற்றியை பெற்று தந்தனர். இந்த வெற்றி மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்றார். இந்திய அணி 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசத்தை 28-ந்தேதி சந்திக்கிறது. அதே தினத்தன்று நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீசை சந்திக்கிறது.

    நேற்று நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 12 ரன்னில் இங்கிலாந்தை தோற்கடித்தது. இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான்- வங்காளதேசம், தென்ஆப்பிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
    டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய வீரர் புஜாரா, நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முன்னேற்றம் கண்டுள்ளனர். விராட் கோலியின் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. #ICCTestRanking #Williamson #Pujara #ViratKohli
    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் ஒரு இடம் உயர்ந்து 2-வது இடத்தை பிடித்துள்ளார். அபுதாபியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் 89, 139 ரன்கள் வீதம் எடுத்து தங்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்ட வில்லியம்சன் 37 புள்ளிகளை சேகரித்து தனது ஒட்டுமொத்த புள்ளி எண்ணிக்கையை 913 ஆக உயர்த்தி இருக்கிறார்.



    நியூசிலாந்து பேட்ஸ்மேன் ஒருவர் 900 புள்ளிகளுக்கு மேல் குவித்து இருப்பது இதுவே முதல்முறையாகும். அத்துடன் உலக அளவில் இந்த மைல்கல்லை கடந்த 32-வது பேட்ஸ்மேன் ஆவார். நியூசிலாந்து பேட்ஸ்மேன்களில் வில்லியம்சன் புதிய உச்சத்தை எட்டியிருந்தாலும், அந்த நாட்டில் இருந்து ஏற்கனவே ஒரு பந்து வீச்சாளர், பவுலிங் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்திருக்கிறார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் ஹாட்லீ 1985-ம் ஆண்டு 909 புள்ளிகளை பெற்று இருந்தது நினைவு கூரத்தக்கது.

    வில்லியம்சனின் முன்னேற்றம் இந்திய கேப்டன் விராட் கோலியின் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்தை உருவாக்கியுள்ளது. அடிலெய்டு டெஸ்டில் விராட் கோலி பெரிய அளவில் சோபிக்கவில்லை. இரண்டு இன்னிங்சிலும் முறையே 3, 34 ரன்கள் வீதமே எடுத்தார். இதன் மூலம் 15 புள்ளிகளை பறிகொடுத்த கோலி, தற்போது 920 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் கோலி கணிசமான ரன் குவித்தால் மட்டுமே ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைக்க முடியும். இல்லாவிட்டால் முதலிடத்தை இழக்க நேரிடும். அவருக்கும், 2-வது இடத்தில் உள்ள வில்லியம்சனுக்கும் இடையே 7 புள்ளி மட்டுமே வித்தியாசம் உள்ளது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி தடையை அனுபவித்து வரும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் ஒரு இடம் இறங்கி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    அடிலெய்டு டெஸ்டில் சதமும் (123 ரன்), அரைசதமும் (71 ரன்) நொறுக்கி இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு வழிவகுத்த புஜாரா, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோரை முந்தி 4-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த மெச்சத்தகுந்த பேட்டிங்கின் மூலம் 81 புள்ளிகளை திரட்டிய புஜாரா மொத்தம் 846 புள்ளிகள் எடுத்திருக்கிறார்.

    இதே போல் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 126 ரன்கள் விளாசிய நியூசிலாந்து வீரர் ஹென்றி நிகோல்ஸ் தனது வாழ்க்கையில் முதல்முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். அவர் 17-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு வந்துள்ளார். இந்தியாவின் ரஹானே 17-வது இடத்திலும் (2 இடம் உயர்வு), ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா 13-வது இடத்திலும் (3 இடம் சறுக்கல்) உள்ளனர்.

    பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 2 இடங்களில் தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா, இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடருகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரு இடம் ஏற்றம் கண்டு 6-வது இடத்தை பிடித்துள்ளார். இதே போல் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 இடங்கள் எகிறி 33-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரவரிசையாகும். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை அள்ளிய போதிலும் அவரது தரவரிசையில் மாற்றமில்லை. ஆனாலும் 19 புள்ளிகள் கூடுதலாக சேகரித்து 725 புள்ளிகளுடன் 14-வது இடத்தில் நீடிக்கிறார்.

    டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் டாப்-5 இடங்களில் மாற்றம் இல்லை. வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசன், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, தென்ஆப்பிரிக்காவின் வெரோன் பிலாண்டர் முதல் 3 இடங்களில் உள்ளனர். #ICCTestRanking #Williamson #Pujara #ViratKohli
    ×