search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வில்லியம்சன்"

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
    • சவுதி- வில்லியம்சன் ஆகியோர் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றனர்.

    நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதன் மூலம் நியூசிலாந்து அணியின் சீனியர் வீரர்களான டிம் சவுத்தி மற்றும் கனே வில்லியம்சன் ஆகியோர் தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் அடியெடுத்து வைத்துள்ளனர்.

    இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு சவுதி மற்றும் வில்லியம்சன் மைதானத்திற்குள் தங்களது குழந்தைகளுடன் வந்தனர். மேலும் மைதானத்தில் அந்நாட்டு தேதிய கீதம் பாடும் போது அவர்களது குழந்தைகளுடன் நின்று மரியாதை செலுத்தினர். இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

    இந்நிலையில் இவர்கள் இருவரும் 2008-ம் ஆண்டு நடந்து U19 உலகக் கோப்பையில் இருந்து நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகின்றனர். அரையிறுதி வரை நியூசிலாந்து முன்னேறியது. அந்த உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.

    u19 உலகக் கோப்பைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் நியூசிலாந்து சீனியர் அணியில் சவுதி அறிமுகமாகினார். இதில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியன் மூலம் ஒரு ஆண்டுக்குள் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார்.

    ஆனால் வில்லியம்சன் டெஸ்ட் அணியில் இடம் பெற கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆனது. அவர் 2010-ம் ஆண்டில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அவரது பேட்டிங் திறமையால் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சிறிது காலத்திலேயே அறிமுகமானார்.

    100 டெஸ்ட் போட்டிகளிலு விளையாடியுள்ள வில்லியம்சன் 8692 ரன்களை எடுத்துள்ளார், அவர் 32 சதங்களும் 33 அரை சதங்களும் அடித்துள்ளார். இவரை தவிர வேறு எந்த ஒரு நியூசிலாந்து வீரரும் இத்தனை சதங்களை கடந்ததில்லை. 100-வது டெஸ்ட்டில் விளையாடும் சவுதி, 378 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • வில்லியம்சன் 2 இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தினார்.
    • வில்லியம்சனுடன் ஆட்டநாயகன் விருதை பகிர்ந்து கொள்வீர்களா? என்று ரச்சின் ரவீந்தராவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா இரட்டை சதமும் கனே வில்லியம்சன் சதமும் விளாசினார். இதனை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 162 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    349 ரன்களுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து வில்லியம்சன் சதம் மூலம் 179 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 529 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 247 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இந்த போட்டியில் இரட்டை விளாசிய ரச்சின் ரவீந்திரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் உங்களுக்கு நிகராக இப்போட்டியில் 2 சதங்கள் அடித்த வில்லியம்சனுடன் ஆட்டநாயகன் விருதை பகிர்ந்து கொள்வீர்களா? என்று ரச்சின் ரவீந்தராவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நம்முடைய திறனுக்கு தகுந்தாற்போல் அணியின் வெற்றியில் பங்காற்றுவது நல்ல உணர்வை கொடுக்கிறது. நான் இந்த இன்னிங்சை உயரியதாக மதிப்பிடுவேன். ஏனெனில் வெற்றிக்காக நாங்கள் அங்கே கடினமான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினோம்.

    ஆட்டநாயகன் விருதை கண்டிப்பாக பகிர மாட்டேன். அவர் 31 சதங்கள் அடித்துள்ளார். எனவே ஒரு சதம் மட்டுமே அடித்துள்ள நான் அதை அவருக்கு கொடுக்கப் போவதில்லை. எந்த நேரத்திலும் அணியின் வெற்றியில் பங்காற்றுவது எப்போதுமே ஸ்பெஷலாகும்.

    என்று ரச்சின் கூறினார். 

    • ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
    • கேட்சை பிடிக்க முற்பட்டபோது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

    அகமதாபாத்:

    நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. கடந்த 31-ம் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் குஜராத் அணி வீரர் கேன் வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டது.

    எல்லைக்கோட்டிற்கு அருகே வந்த கேட்சை பிடிக்க முற்பட்டபோது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக குஜராத் அணி நிர்வாகம் தெரிவித்தது.

    இந்த நிலையில், காயம் காரணமாக குஜராத் அணியில் இருந்து வெளியேறிய வில்லியம்சனுக்கு பதிலாக இலங்கை வீரர் சனகா சேர்க்கப்பட்டு உள்ளார்.

    • நியூசிலாந்து 162.3 ஓவரில் 483 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
    • இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் 5 விக்கெட் கைப்பற்றினார்.

    வெலிங்டன்:

    இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் வெலிங்டனில் நடந்து வரு கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 435 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து 209 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. இதனால் 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை நியூசிலாந்து விளையாடியது.

    இதில் அந்த அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து இருந்தது. வில்லியம்சன் 25 ரன்னுடனும், நிகோல்ஸ் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. நிகோல்ஸ் 30 ரன்னில் அவுட் ஆனார். வில்லியம்சன் நிலைத்து நின்று விளையாடினார். மிட்செல் 54 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களம் வந்த ப்ளுன்டெல், வில்லியம்சனுக்கு உறு துணையாக விளையாடினார்.

    இருவரின் ஆட்டத்தால் நியூசிலாந்து முன்னிலை பெற்றது. வில்லியம்சன் தனது 26-வது சதத்தை (92 டெஸ்ட்) பூர்த்தி செய்தார். அவர் 132 ரன் எடுத்து (282 பந்து, 12 பவுண்டரி) அவுட் ஆனார். அடுத்து களம் வந்த பிரேஸ்வெல் 8 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

    நியூசிலாந்து 162.3 ஓவரில் 483 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. டாம் ப்ளுன்டெல் 90 ரன் எடுத்து கடைசி விக்கெட்டாக அவுட் ஆனார். இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் 5 விக்கெட் கைப்பற்றினார்.

    இங்கிலாந்து அணிக்கு 258 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அணி 2-வது இன்னிங்சை விளையாடியது பாலோ-ஆனுக்கு தள்ளப்பட்ட நியூசிலாந்து அணி அதிலிருந்து மீண்டு இலக்கு நிர்ணயித்துள்ளது.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பு மரியாதை.
    • இந்தமாதம் பாகிஸ்தானுக்கான டெஸ்ட் சுற்றுப்பயணத்தின்போது சவுதி கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். புதிய கேப்டனாக சவுதி பொறுப்பேற்கிறார். 346 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள சவுதி, 22 முறை டி20 அணியை வழிநடத்தியுள்ளார். இந்தமாதம் பாகிஸ்தானுக்கான டெஸ்ட் சுற்றுப்பயணத்தின்போது சவுதி கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். அவர் நியூசிலாந்தின் 31வது டெஸ்ட் கேப்டனாவார்.

    கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து கேன் வில்லியம்சன் கூறும்போது, அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது இதுதான் சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பு மரியாதை. என்னைப் பொறுத்தவரை, டெஸ்ட் கிரிக்கெட் என்பது விளையாட்டின் உச்ச நிலையாகும். டெஸ்டில் அணியை வழிநடத்தும் சவால்களை நான் அனுபவித்தேன்.

    எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் இந்த முடிவுக்கான நேரம் சரியானது என்று உணர்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். வில்லியம்சன் 2016 இல் பிரெண்டன் மெக்கல்லத்திடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து 38 போட்டிகளின் நியூசிலாந்து (22 வெற்றி, 8 டிரா, 10 தோல்வி) டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சூர்ய குமாரின் இன்னிங்ஸ் உலகத்தரம் வாய்ந்தது.
    • அவருடைய ஆட்டம் தான் இன்று மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    மவுண்ட் மவுங்கனி:

    நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சூர்யகுமார் யாதவ், மூன்றாவது வீரராக களம் இறங்கி 51 பந்துகளில் 113 ரன்கள் விளாசினார். இதில் 11 பவுண்டர்களும், ஏழு சிக்சர்களும் அடங்கும். நடப்பாண்டில் சூர்யகுமார் யாதவ் அடித்த இரண்டாவது சதம் இதுவாகும். இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

    தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இது எங்களுடைய சிறந்த ஆட்டம் கிடையாது என்று குறிப்பிட்டார். நாங்கள் களத்தில் சிறப்பாக செயல்படவில்லை. சூர்ய குமாரின் இன்னிங்ஸ் உலகத்தரம் வாய்ந்தது. என் வாழ்நாளில் பார்த்த சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று. சூர்யகுமார் ஆடிய சில ஷாட்களை என் வாழ்க்கையில் இதுவரை நான் பார்த்ததே இல்லை.

    அனைத்தும் பிரமிக்கும் வகையில் இருந்தது. நாங்கள் இன்று சரிவர செயல்படவில்லை. எங்களுக்கு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஒரு உத்வேகம் கிடைக்கவில்லை. நாங்கள் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தாமல் இருந்தோம். இதேபோன்று முக்கிய நேரத்தில் பேட்டிங்கில் நான் சோபிக்கவில்லை.நிச்சயமாக இந்த தோல்வி வெறுப்பை தருகிறது. மீண்டும் சொல்கிறேன் சூர்யகுமார் யாதவ் மட்டும் தான் இதற்கு காரணம்.

    அவருடைய ஆட்டம் தான் இன்று மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாங்கள் பேட்டிங் செய்யும்போது பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனது. இதனை பயன்படுத்திக் கொண்டு இந்திய வீரர்கள் நன்றாக பந்து வீசினார்கள்.எங்களுடைய ஆட்டத்தில் சில குறைகள் இருக்கிறது. அதனை நாங்கள் சரி செய்ய வேண்டும். சில விஷயங்களில் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். சிறு தவறுகளால் தான் சில சமயம் போட்டியின் முடிவே மாறுகிறது.

    சில சமயம் சூர்யகுமார் யாதவ் போன்று சிலர் சிறப்பான இன்னிங்ஸை ஆடுவார்கள். அது நமக்கு தோல்வியை தரலாம்.தற்போது உலகத்தில் சூர்ய குமார் தான் சிறந்த வீரராக இருக்கிறார் என்று வில்லியம்சன் கூறினார்.

    ×