search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kadayanallur"

    • கிருஷ்ணவேணி உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 68 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.
    • தனது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்காக கண்ணன் கேரளாவுக்கு சென்றுவிட்டார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி வம்சவிருத்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 35). இவர் கடந்த 19-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு கடையநல்லூர் அருகே உள்ள சிங்கிலிப்பட்டியில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    ரூ. 68 ஆயிரம் திருட்டு

    நேற்று முன்தினம் இரவு அவர் தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 68 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

    அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் (30) என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்காக கேரளாவுக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதால் அங்கு யாரும் இல்லை. இதனை அறிந்த மர்மநபர்கள் அங்கு புகுந்து பீரோவில் இருந்த 7 பவுன் நகையை திருடிச் சென்றனர்.

    போலீசார் விசாரணை

    இந்த சம்பவங்கள் தொடர்பான புகார்களின் பேரில் சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரே தெருவில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணையவழி மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநகரத்தின் வழிகாட்டுதல்படி கல்லூரியில் சேவை மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் மே19-ந் தேதி.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் குமரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம்., பி.எஸ்.ஸி., கணினி அறிவியல் மற்றும் பி.எஸ்.சி., கணிதவியல் பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் https://www.tngasa.in/அல்லது https://www.tngasa.org/என்ற இணைய தளங்கள் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.

    இணையவழி மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநகரத்தின் வழிகாட்டுதல்படி கல்லூரி யில் சேவை மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விண்ணப்பக் கட்டணம் ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ.2, எஸ்.சி. எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதும். விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் மே19-ந் தேதி. மேலும் விபரங்களுக்கு 04633 295040, 8883446196, 9688384661, 96295 72959 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவில் திருவிழாவையொட்டி சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
    • 5-ந்தேதி மாலை தீர்த்தகுடம் மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியில் சந்தன மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த 4-ந் தேதி மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலையில் 508 திருவிளக்கு பூஜை, இரவில் சந்தனமாரி அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது.

    5-ந்தேதி மாலை நையாண்டி மேளம், டோலாக் நடனத்தோடு செண்டா மேளம் முழங்க தீர்த்தகுடம் மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இரவில் வில்லிசை மற்றும் கரகாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நள்ளிரவில் சந்தனமாரியம்மன் சப்பர வீதிஉலா நடைபெற்றது. நேற்று (வெள்ளிக்கிழமை) காலை பூ வளர்த்தல் நிகழ்ச்சியும், மாலை முளைப்பாரி, அக்கினி சட்டி எடுத்து நையாண்டி மேளம், செண்டா மேளம் முழங்க பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இதற்கான ஏற்பாடுகளை தேவர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.

    • இந்தஆண்டு திருவிழா கடந்த 24-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • விழாவில் அம்மனுக்கு படப்பு தீபாராதனை நடந்தது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் உள்ள மேலக்கடையநல்லூர் தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்தஆண்டு திருவிழா கடந்த 24-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை, மாலை வேளைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடந்தது.

    விழாவில் 30-ந்தேதி புஷ்பாஞ்சலி, 1-ந்தேதி சுமங்கலிபூஜை, 3-ந்தேதி அண்ணாமலைநாதர் கோவிலில் இருந்து அக்னிச்சட்டி ஊர்வலம், அம்மன் மீது உலா நடந்தது.

    முக்கிய நாளான நேற்று காலை அண்ணாமலைநாதர் கோவிலில் இருந்து குற்றால தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வருதல், சிறப்பு அபிஷேகம், மாலையில் முளைப்பாரி வீதிஉலா, நள்ளிரவில் பூ வளர்த்தல் நடைபெற்றது.

    பின்னர் இன்று அதிகாலை 4 மணிக்கு 100-க்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு படப்பு தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோடை மழை பெய்ததால் கருப்பாநதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
    • கருப்பாநதி அணையில் கோடை மழையால் 2 நாளில் 5 அடி உயர்ந்து தற்போது 30 அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் நகராட்சி மிகபெரியதாகும். 52.25 சதுரம் கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும்.

    இந்த நகராட்சியில் 33 வார்டுகளில் 32 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது. அதில் 1 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடிநீர் தேவைக்காக நகராட்சி நிர்வாகம் 18,500 குடிநீர் இணைப்புகளை வழங்கி உள்ளது.

    அதற்காக கருப்பாநதி குடிநீர் திட்டதின் மூலம் தினசரி 35 லட்சம் லிட்டர் தண்ணீரும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 35 லட்சம் லிட்டர் தண்ணீரை பெற்று ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்து வந்தது . இதை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி வந்தனர்.

    இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் கோடை வெயிலால் கடந்த மாதம் கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணை வறண்டு காணப்பட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருந்தது.

    கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் அடிவாரத்தில் கோடை மழை பெய்ததால் கருப்பாநதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையில் கோடை மழையால் 2 நாளில் 5 அடி உயர்ந்து தற்போது 30 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு 9 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    குடிநீர் தேவைக்காக 3 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நகராட்சி சார்பில் வீடுகளுக்கு வழங்கப்படும். தண்ணீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கடையநல்லூர் நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    • வட்டாரகல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார்.
    • விடுப்பின்றி பள்ளிக்கு வந்தவர்கள், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள ஆனைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பட்ட மளிப்பு மற்றும் பரிச ளிப்பு விழா நடை பெற்றது. வட்டாரகல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கி னார். ஊராட்சி தலைவர் பஞ்ச வர்ணம், முன்னாள் ஊராட்சி தலைவர் கலீல் ரகுமான், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பேபி மாலதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்த னர். தலைமை ஆசிரி யர் மோதிலால் வரவேற்றார். ஆசிரியை ஜரினாபானு செயல் பாட்டு அறிக்கை வாசித்தார்.

    நிகழ்ச்சியின் போது 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. மேலும் விடுப்பின்றி பள்ளிக்கு வந்தவர்கள், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து யோகா, கலை, நாடகம் நடைபெற்றது. விழாவில் யோகா மாஸ்டர் விஷ்ணு யோகா பயிற்சி அளித்தி ருந்தார். ஆசிரிய பயிற்றுனர் சுந்தரேஸ்வரி, இல்லம் தேடிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சார்லஸ், தலைமை ஆசிரியைகள் இசபெல்லா, கலாராணி, முன்னாள் எஸ்.எம்.சி. தலைவர் முகம்மது உசேன் ராஜா, பள்ளி மேலா ண்மை குழு உறுப் பினர்கள், பெற்றோர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் துரைச்சி, அன்ன லட்சுமி, ஜெயக்குமார், இல்லம் தேடிக் கல்வி தன்னார் வலர்கள் சாந்தி, நபிசாள் பீவி, உமா மகேஸ்வரி ஆகியோர் செய்தி ருந்தனர்.

    • கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கடையநல்லூர் :

    கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. நகர்மன்ற துணைத்தலைவர் ராசையா, ஆணையாளர் பாரிஜான், பொறியாளர் ஜீவா, உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர், ஆய்வாளர் சக்திவேல், கணக்கர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பிரிவு மாரியப்பன் தீர்மானங் களை வாசித் தார்.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் ரேவதி பாலீஸ்வ ரன், பூங்கோதைதாஸ், சுபா ராஜேந்திரபிரசாத்,

    தனலெட்சுமி, பால சுப்பிரமணியன், அப்துல் வஹாப், வளர்மதி, மாலதி, சந்திரா, முருகன், முகைதீன் கனி, மீராள்பீவி, திவான் மைதீன், யாசர்கான், வேல்சங்கரி, சங்கர நாராயணன், பாத்திமா பீவி, நிலோபர், அக்பர்அலி, யாசர்கான், பீரம்மாள், முகமது அலி, மகேஸ்வரி, துர்காதேவி, முகமது முகைதீன், ராமகிருஷ்ணன், மாவடிக் கால் சுந்தரமகாலிங்கம், சண்முகசுந்தரம், மாரி, முத்துலெட்சுமி, செய்யதலி பாத்திமா ஆகியோர் தங்களது வார்டு வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர். கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • திரிகூடபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் சார்பில் ரம்ஜானை முன்னிட்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் இமாம் அப்துல் ரஷீத் பைஜி கிராத் ஓதினார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் ஒன்றியம் திரிகூடபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் சார்பில் ரம்ஜானை முன்னிட்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    திரிகூடபுரம் முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் நடந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான, செல்லத்துரை தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் முத்தையாபாண்டி, கடையநல்லூர் நகர செயலாளர் அப்பாஸ், நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், யூனியன் துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரிகூடபுரம் தி.மு.க. தெற்கு கிளை செயலாளரும், ஊராட்சி மன்ற துணைத்தலைவருமான செய்யது மீரான் வரவேற்றார். முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் இமாம் அப்துல் ரஷீத் பைஜி கிராத் ஓதினார். நிகழ்ச்சியில் முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் முகமது யூசுப், பொருளாளர் வாவா கனி,

    சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சரவணன், கிளாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், கவுன்சிலர் திவான் மைதீன், காளிமுத்து, செய்யது மசூது, யாசின், முருகானந்தம், 2-வது வார்டு கவுன்சிலர் கடல் என்ற செல்லத்துரை இளைஞரணி செயலாளர் சதாம், துணை செயலாளர் அஜ்மீர், கே.ஆர்.யாசின் மற்றும் ஊர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.பி. காமராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
    • எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், சதன் திருமலைக்குமார் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் நகர இப்தார் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.பி. காமராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராம சுப்பு மற்றும் ராம்மோகன், அப்துல்லா யூசுப், பஷீர்முகமது, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சண்முகவேல் வரவேற்றார்.

    விழாவில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் செல்லக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், சதன் திருமலைக்குமார், முன்னாள் எம்.பி. திருச்சி வேலுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ரவிஅருணன், ஹிதாயத்துல்லா, பேராயர் எட்வர்ட்ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனிஅருள்சிங், இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் பாக்யராஜ், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் நரேந்திரதேவ், மாணவர் காங்கிரஸ் மாரிக்குமார், மாவட்ட பொதுச் செய லாளர் கணேசன், எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் தலைவர் யாசர்கான், ஜாபர்அலி உஸ்மானி, த.மு.மு.க. பாஷித், தி.மு.க. மாநில பேச்சாளர் எம்.என். இஸ்மாயில், விழா கமிட்டியினர் கோதரி, ரஹ்மத்துல்லா, உமர்முன்னா, யூசுப், நவாஸ், சேயன் அரபாத், ஜேசுதாசன், செய்யது மசூது, சாகுல்ஹமீது, அன்சாரி, அருணாசலசாமி, இஸ்மாயில், அப்துல்காதர், பாதுஷா, பட்டு, சேயன்மைதீன், சாமி, சேக்கிழார் பாபு, குலாம், வரவேற்பு குழு தலைவர் அப்துல் காதர், அயூப்கான், ரெசவுமைதீன், ஷாஜகான், ரபீக், செய்குஒலி, அஸ்கத் அலி, ஹமீது, அஹமது, சிவபிரகாஷ், பிரகாஷ்ராஜ், அசாருதீன், அருள்ராஜ், ரகுமத்துல்லாஹ், அபுபூஸ்தாமி, பொன்ராஜ், யாசின், ஜலால், சாகுல்ஹமீது, ராகுல், சேக் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இப்தார் கமிட்டி செயலாளர் ஷாநவாஸ்கான் நன்றி கூறினார்.

    • புன்னையாபுரம் ஊராட்சியில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
    • புன்னையாபுரத்தை தனி வருவாய் கிராமமாக பிரித்து தர வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    கடையநல்லூர் யூனியன் புன்னையாபுரம் ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிப்பட்டி மணிகண்டன் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடையநல்லூர் தாலுகா சொக்கம்பட்டி வருவாய் கிராமத்திற்குட்பட்ட புன்னையாபுரம் ஊராட்சியில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இது புன்னையாபுரம், சிங்கிலிபட்டி, தர்மாபுரம், வம்சவிருத்தி நகர், கணபதி நகர் என பல்வேறு பகுதிகளை கொண்ட பெரிய ஊராட்சி ஆகும். இங்கு 4,000 பட்டாதாரர்கள் உள்ளனர். 3,500 ஏக்கர் நன்செய் நிலங்கள் மற்றும் புன்செய் நிலங்கள், ரூ.25 ஆயிரம் நில வருவாய் கொண்ட கிராமம் ஆகும். எனவே சொக்கம்பட்டி வருவாய் கிராமத்தில் இருந்து பிரித்து புன்னையாபுரம் தனி வருவாய் கிராமமாக பிரித்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    • கடையநல்லூர் நகர தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
    • இதில் 200-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    கடையநல்லூர் நகர தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு நகர செயலாளர் அப்பாஸ் தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் வரவேற்றார். நகர அவைத்தலைவர் பெட்டி முருகன், துணை செயலாளர்கள் காசி, காமாட்சி, மஸ்தான் அலி, துணைத் தலைவர் ராசையா, முருகையா, பொருளாளர் பொன்னுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, பேச்சாளர் வேங்கை சந்திரசேகர் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தென்காசி நகர செயலாளர் சாதிர், ஒன்றிய செயலாளர் சுரேஷ், யூனியன் சேர்மன் சுப்பம்மாள், துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள், அருணாசல பாண்டியன், சிங்கிலிப்பட்டி மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    • கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா, ஆணையாளர் (பொறுப்பு) தென்காசி பாரிஜான், மேலாளர் சண்முகவேல், இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன், நகர அமைப்பு அலுவலர் காஜாமைதீன், சுகாதார ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் லீக் அக்பர் அலி, அ.தி.மு.க. உறுப்பினர் பூங்கோதை கருப்பையா தாஸ், சுபா ராஜேந்திரன் எஸ்.டி.பி.ஐ. உறுப்பினர் யாசர்கான் உட்படப் பலர் பேசினார்.

    அப்போது தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை அனைத்து வார்டுகளுக்கும் வழங்க வேண்டும் என்றனர். உறுப்பினர்களின் கேள்விக்கு கடையநல்லூர் நகர் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் தாமிரபரணி குடிநீரை வழங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட பணிகள் நடப்பதாக நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

    ×