search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "municipal meeting"

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற சாதாரணக்கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் நடைபெற்றது.

    செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் நித்யா தீர்மானங்கள் வாசித்தார்.

    இக்கூட்டத்தில் துணை தலைவர் வி.குமார் உள்பட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசுகையில்:-

    கண்ணமங்கலம் சுடுகாடு செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    இதில் கண்ணமங்கலம் பேரூராட்சி-காட்டுக்காநல்லூர் சாலை சந்திப்பில் ரூ.4.35 லட்சம் மதிப்பில் மினி உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கவும், ரூ.7.26 லட்சம் மதிப்பில் டிராக்டர் வாங்குவது உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சுகாதார மேற்பார்வையாளர் வெற்றி நன்றி கூறினார்.

    • ரெயில்வே பீடர் ரோட்டை சீரமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
    • விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சி கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நகராட்சி கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெற்றது. துணை தலைவர் தனலட்சுமி துளசிராம், கமிஷனர் லீனா சைமன், என்ஜினீயர் எட்வின் பிரைட் ஜோஸ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் பலர் தாங்கள் தேர்ந்தெடுக் கப்பட்டதிலிருந்தே கூட்டத்தின் போது ஒலிபெருக்கி வசதி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தியும் இதுவரை செய்து தரப்படாததால் கவுன்சிலர்கள் கலையரசன், முத்துராமன் உள்ளிட்டோர் கூம்பு வடிவ குழாய் மூலம் பேசினர்.

    இதனைத்தொடர்ந்து அடுத்த கூட்டத்திற்குள் ஒலிபெருக்கி வசதி செய்து தரப்படுமென தலைவர் மாதவன் மற்றும் கமிஷனர் லீனா சைமன் ஆகியோர் உறுதி கூறினர்.

    எங்கு சென்றாலும் மக்கள் ெரயில்வே பீடர் சாலையை எப்போது சீரமைக்க போகிறீர்கள் என கேட்கும் நிலை உள்ளதால் அதனை உடனடியாக ஆக்கிரமிப்புக ளை அகற்றி சீரமைக்க வேண்டுமென கவுன்சி லர்கள் முத்துராமன், முத்துலட்சுமி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவர் மாதவன் உறுதி அளித்தார்.

    கவுன்சிலர் முத்துராமன் தனது வார்டில் வேலுச்சாமி நகரில் மின் மோட்டார் இயக்கப்படாததால் குடிநீர் பிரச்சினை உள்ளதாகவும், கவுன்சிலர் முத்துலட்சுமி தனது வார்டு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாததால் நோய் பரவுவதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும் கூடுதல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் முறையாக நடைபெற வில்லை என புகார் கூறப் பட்டது.

    கவுன்சிலர் ராஜ்குமார் தனது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் முறையாக சுத்தம் செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

    பள்ளிகளில் நோய் பாதிப்பை தடுக்க பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்க வேண்டுமென கவுன்சிலர் ஜெயக்குமார் வலியுறுத்தி னார். புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது. தியாகி இமானுவேல் சேகரன் உருவப்படத்தை நகராட்சி கூட்ட அரங்கில் திறக்க வேண்டும் என காங்கிரஸ் 

    • கொசு மருந்து அடிக்கவேண்டும்
    • குடிநீர் வசதி, கழிவு நீரோடை பராமரிப்பு, உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், துணைத்தலைவர் தீபிகா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க கொசு மருந்து அடிக்கவேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பேரூராட்சியாக மாற்றவேண்டும். குடிநீர் வசதி, கழிவு நீரோடை பராமரிப்பு, உள்ளிட்டவை குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களும் கலந்துகொண்டனர்.

    • கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் மாதாந்திர மதிப்பூதியத்தினை வழங்குவதற்கு உத்தரவு பிறப்பித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. நகர்மன்ற துணைத்தலைவர் ராசையா, கமிஷனர் சுகந்தி, பொறியாளர் அப்துல்காதர், உதவி பொறியாளர் கண் ணன், சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர், மேலாளர் சண்முக வேல், கணக்கர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பிரிவு மாரியப்பன் தீர்மானங்களை வாசித்தார்.

    குடிநீா விநியோகம்

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் ரேவதி பாலீஸ்வரன், பூங்கோதைதாஸ், சுபா ராஜேந்திர பிரசாத், தன லெட்சுமி, பாலசுப்பிர மணியன், வளர்மதி, மாலதி, சந்திரா, முருகன், முகைதீன் கனி, மீராள்பீவி, திவான்மைதீன், யாசர்கான், வேல்சங்கரி, சங்கர நாராயணன், பாத்திமா பீவி, நிலோபர், அக்பர்அலி, பீரம்மாள், முகமது அலி, மகேஸ்வரி, துர்காதேவி, முகமது முகைதீன், ராம கிருஷ்ணன், மாவடிக்கால் சுந்தர மகாலிங்கம், சண்முக சுந்தரம், மாரி, முத்துலெட்சுமி, செய்யதலி பாத்திமா ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நீண்ட கால கோரிக்கையான மாதாந்திர மதிப்பூதியத்தினை வழங்குவதற்கு உத்தரவு பிறப்பித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் விநியோகத்தின் அளவு வறட்சி காலங்களில் உள்ளூர் குடிநீர் திட்ட ஆதாரத்தில் நீரின் அளவு குறைய பெற்று குடிநீர் வினியோகம் பாதிப்பிற்குள்ளாகிறது.

    10 வார்டுகள்

    மேலும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் அளவு குறைவாக வரப்பெற்று குடிநீர் வினியோகம் பாதிப்பிற்குள்ளாகிறது. தாமிரபரணி குடிநீரானது 10 வார்டு மக்களுக்கு மட்டும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள வார்டு பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கும் தாமிரபரணி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தேவைப்படும் குடிநீரின் அளவிற்கு ஏற்ப தாமிரபரணி குடிநீர் ஆதாரத்தின் மூலம் நகராட்சிக்கு தாமிரபரணி குடிநீர் ஆதாரத்தின் மூலம் நகராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் மூலமாகவோ அல்லது கூட்டு குடிநீர் திட்டத்தின் கூடுதலாக தண்ணீர் கிடைப்பதற்கு புதியதாக குடிநீர் திட்டத்தை செயல்ப டுத்தி தர அரசிடம் கோருவது உள்பட பல்வேறு தீர்மான ங்கள் நிறைவேற்ற ப்பட்டது.

    கூட்டத்தின் போது நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறக்கி சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ விஞ்ஞா னிகள் மற்றும் குழுவின் தலைவர் வீரமுத்துவேலுக்கு அனைவரும் எழுந்து நின்று நன்றி, பாராட்டு தெரிவித்தனர்.

    • தரமற்ற ரேசன் அரிசி வழங்குவதாக புகார்
    • ஆரணி கவுன்சிலர்கள் அதிர்ச்சி

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.

    இதில் நகர மன்ற தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஏ.சி.மணி உள்ளிட்ட 33 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.

    நேற்று ஆரணி நகராட்சி அலுவலகம் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகரமன்ற துணை தலைவர் பாரிபாபு முன்னிலை வகித்தார். ஆணையர் குமரன் வரவேற்றார். நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமை தாங்கினார்.

    முன்னதாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தெடுக்கபட்ட நகர மன்ற தலைவர், துணை தலைவர் மன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கி ஆணை பிறப்பித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டன.

    நகரமன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஆரணி டவுன் கார்த்திகேயன் சாலை பகுதியை சேர்ந்த பழனி என்பவர் திடீரென உள்ளே புகுந்தார்.

    அப்போது வைகை கூட்டுறவு அங்காடி-2ல் வழங்கபட்ட அரிசி தரமற்ற முறையில் உள்ளதாக கூறி நகர மன்ற தலைவர் ஏ.சி.மணியிடம் முறையிட்டார்.

    அவரிடம் கவுன்சிலர்கள் கூட்டத்தில் உங்களை யார் உள்ளே வர அனுமதி கொடுத்தார்கள். தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவ லகத்திற்கு செல்லுமாறு கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    பாதுகாப்பில் இருந்த போலீசார் உடனடியாக பழனியை சமரசம் செய்து கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் இருந்து வெளியே அனுப்பினர். இதனால் சிறிது நேரம் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

    • கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவித்துள்ள மாதாந்திர ஊதியத்திற்கு நன்றி தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • தங்கள் வார்டு பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைநது வருகின்றனர் என்று கவுன்சிலர்கள் கூறினர்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி மன்ற சாதாரண கூட்டம் நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை சேர்மன் சங்கரா தேவி முருகேசன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுகந்தி தீர்மானம் குறித்து விளக்கி கூறி வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் நகராட்சி சேர்மன், துணைச் சேர்மன், கவுன்சிலர்களுக்கு, முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவித்துள்ள மாதாந்திர ஊதியத்திற்கு நன்றி தெரிவித்து தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், கவுன்சிலருமான ஜெயபாலன் தீர்மானம் முன்மொழிந்தார் அதனை தொடர்ந்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர் தங்கள் வார்டு பகுதியில் குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படவில்லை எனவும், சரிவர தண்ணீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைவதாகவும், சாலை வசதி மற்றும் கட்டிட அனுமதி வழங்கப்படாதது குறித்தும், புதிய நகராட்சியான சுரண்டை வளர்ச்சி பெற தடையாக நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளர், நகராட்சி பொறியாளர், நகர அமைப்பு அலுவலர் நியமிக்கப்படாமல் பொறுப்பு அதிகாரிகள் செயல்படுவதால் பணிகள் சரிவர நடக்கவில்லை எனக் கூறியும் கவுன்சிலர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், கவுன்சிலருமான சக்திவேல், வசந்தன், மாரியப்பன், ராஜேஷ், ராஜ்குமார், பால சுப்பிரமணியன், மாரியப்பன், வெயிலு முத்து, ரமேஷ், வினோத் குமார், பரமசிவன், ஜெயராணி வள்ளிமுருகன், பொன்ராணி ஜெபராஜா, கல்பனா அண்ண பிரகாசம், அம்சா பேகம், அந்தோணி சுதா, செல்வி, பூபதி, முருகேஸ்வரி உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • 15 வார்டுகளிலும் அனைத்து அடிப்படை வசதிகள்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

    இதற்கு பேரூராட்சி தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ராமு முன்னிலை வகித்தார். கவுன்சிலர் பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் உட்பட 6 கவுன்சிலர்கள் வருகை தராமல் இருந்தனர். பேரூராட்சித் தலைவர் சத்யாவதி பாஸ்கரன் உட்பட 9 கவுன்சிலர்கள் வைத்து 15 வார்டுகளிலும் அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஒருமனதாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள மகளிர் உரிமைத்திட்டம், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் போன்ற திட்டங்களை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    • ரூ.19.60 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பேரூராட்சி கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு செயல் அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார், பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் முன்னிலை வகித்தார்.

    பேரூராட்சி பணியாளர் சந்தோஷ் தீர்மானங்களை வாசித்தார்.

    இதில் 15-வது நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ் கழிப்பிடங்கள் பழுது நீக்கம் பணி மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

    மேலும் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள கழிப்பிடங்களை ரூ.5 லட்சத்தில் பழுது பார்த்தல், கிருஷ்ணசாமி நகரில் ரூ.3 லட்சத்தில் கழிப்பிடத்தை சீரமைத்தல், வேப்பங்கால் பகுதியில் ரூ.5 லட்சத்தில் கழிப்பிடம் அமைத்தல், ரூ.6.60 லட்சத்தில் ஈரக்கழிவு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • குடிநீர்,சுகாதார பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்கி நகராட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது.
    • குப்பை வாங்குவதற்காக வந்துள்ள வண்டிகள் சோதனை செய்த பின்பே நகராட்சி பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சங்கரா தேவி முருகேசன், பொறியாளர் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் வேல்முத்து நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளிலும் 5000 லிட்டர் குடிநீர் தொட்டி உடனடியாக அமைக்க வேண்டும் என்றார்.

    அதை தொடர்ந்து பேசிய கவுன்சிலர் அமுதா சந்திரன் குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றார். கருப்புச்சட்டை அணிந்து கூட்டத்தில் கலந்து கொண்ட 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பரமசிவன் தொடர்ந்து தனது வார்டு பகுதியில் எந்தவித பணிகளும் நடைபெறாமல் புறக்கணிக்கப்படுகிறது என்றார்.

    26-வது வார்டு கவுன்சிலர் ஜெயபாலன் குடிநீர் மற்றும் சுகாதாரப் பிரச்சினையை தீர்ப்பதற்காக 3 மண்டலங்களாக பிரிக்க வேண்டும், மக்கள் பிரச்சினையை தெரிவிப்பதற்காக மாதந்தோறும் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றார்.

    தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர் மாரியப்பன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் பதினைந்தாவது நிதி குழு மானியத்தில் நகராட்சிக்கு வாங்கப்பட்டுள்ள குப்பை வண்டிகளை தரமானதா என சோதனை செய்த பின்னரே பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும், காங்கிரஸ் கவுன்சிலர் பாலசுப்ரமணியம் பேசும்போது, வீடு கட்டுவதற்கான அப்ரூவல் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி தலைவர் வள்ளி முருகன் குடிநீர் பிரச்சினை மற்றும் சுகாதார பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்கி நகராட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் துரிதமாக மக்களுக்கு குடிநீர் வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. குப்பை வாங்குவதற்காக வந்துள்ள வண்டிகள் சோதனை செய்த பின்பே நகராட்சி பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும், பாரபட்சமின்றி அனைத்து வார்டுகளிலும் பணிகள் நடைபெறும் எனக் கூறினார்.

    • கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கடையநல்லூர் :

    கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. நகர்மன்ற துணைத்தலைவர் ராசையா, ஆணையாளர் பாரிஜான், பொறியாளர் ஜீவா, உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர், ஆய்வாளர் சக்திவேல், கணக்கர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பிரிவு மாரியப்பன் தீர்மானங் களை வாசித் தார்.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் ரேவதி பாலீஸ்வ ரன், பூங்கோதைதாஸ், சுபா ராஜேந்திரபிரசாத்,

    தனலெட்சுமி, பால சுப்பிரமணியன், அப்துல் வஹாப், வளர்மதி, மாலதி, சந்திரா, முருகன், முகைதீன் கனி, மீராள்பீவி, திவான் மைதீன், யாசர்கான், வேல்சங்கரி, சங்கர நாராயணன், பாத்திமா பீவி, நிலோபர், அக்பர்அலி, யாசர்கான், பீரம்மாள், முகமது அலி, மகேஸ்வரி, துர்காதேவி, முகமது முகைதீன், ராமகிருஷ்ணன், மாவடிக் கால் சுந்தரமகாலிங்கம், சண்முகசுந்தரம், மாரி, முத்துலெட்சுமி, செய்யதலி பாத்திமா ஆகியோர் தங்களது வார்டு வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர். கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • பேரூராட்சி உதவியாளர் முக்கிய தீர்மானங்களை வாசித்தார்
    • குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் பங்கேற்பு

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு துணைத் தலைவர் ரேணுகாதேவி பெருமா ள்ராஜா அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் பேரூராட்சி உதவியாளர் முக்கிய தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் சமூக பாதுகாப்புதுறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது.

    மேலும் ஏழ்மையில் இருக்கும் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவுவது என குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து வருகை தந்து இருந்த அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு எடுத்துரைத்து பேசினார்கள். இதில் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    • வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை
    • 7 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் நகராட்சியில் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார்.

    நகராட்சி துணை தலைவர் பழனி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நகராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனை செய்யப்பட்டது.

    கோரிக்கைகளை விரைவில் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார். அப்போது நகர மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களை செய்தி சேகரிக்கவோ, படம் பிடிக்க அனுமதிக்காத நகராட்சி ஆணையரை கண்டித்து காங்கிரஸ், அமமுக, பாமக சேர்ந்த 7 உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.

    ×