search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "City Council Chairman"

    • கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோடை மழை பெய்ததால் கருப்பாநதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
    • கருப்பாநதி அணையில் கோடை மழையால் 2 நாளில் 5 அடி உயர்ந்து தற்போது 30 அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் நகராட்சி மிகபெரியதாகும். 52.25 சதுரம் கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும்.

    இந்த நகராட்சியில் 33 வார்டுகளில் 32 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது. அதில் 1 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடிநீர் தேவைக்காக நகராட்சி நிர்வாகம் 18,500 குடிநீர் இணைப்புகளை வழங்கி உள்ளது.

    அதற்காக கருப்பாநதி குடிநீர் திட்டதின் மூலம் தினசரி 35 லட்சம் லிட்டர் தண்ணீரும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 35 லட்சம் லிட்டர் தண்ணீரை பெற்று ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்து வந்தது . இதை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி வந்தனர்.

    இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் கோடை வெயிலால் கடந்த மாதம் கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணை வறண்டு காணப்பட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருந்தது.

    கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் அடிவாரத்தில் கோடை மழை பெய்ததால் கருப்பாநதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையில் கோடை மழையால் 2 நாளில் 5 அடி உயர்ந்து தற்போது 30 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு 9 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    குடிநீர் தேவைக்காக 3 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நகராட்சி சார்பில் வீடுகளுக்கு வழங்கப்படும். தண்ணீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கடையநல்லூர் நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    • தாராபுரம் நகரின் 14 -வது வாா்டு பகுதியில் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.
    • மக்கும் குப்பை-மக்காத குப்பைகள் பிரித்துக் கொடுக்கப்படுகிறதா என்றும் மக்களிடம் கேட்டறிந்தாா்.

    தாராபுரம்:

    தாராபுரம் நகரில் கழிவு நீா்க் கால்வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.இதையடுத்து, தாராபுரம் நகரின் 14 -வது வாா்டு பகுதியில் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.

    அப்போது, சாக்கடைக் கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா, மக்கும் குப்பை-மக்காத குப்பைகள் பிரித்துக் கொடுக்கப்படுகிறதா என்றும் மக்களிடம் கேட்டறிந்தாா்.  

    ×