search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelry snatch"

    விளாங்குடியில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    புது விளாங்குடி ராம மூர்த்தி நகர், சர்ச் தெருவை சேர்ந்தவர் உஷா (வயது 35). இவரது கணவர் சதீஷ் குமார், சமையல் எண்ணை வியாபாரி.

    உஷா குடும்பத்துடன் இரவில் வீட்டில் படுத்து தூங்கினார். அவர் முன் கதவை சரியாக தாழிடவில்லை என்று தெரிகிறது. நள்ளிரவில் மர்ம நபர் கதவைத்திறந்து வீட்டுக்குள் புகுந்தான். உஷா படுக்கை அறையில் அசந்து தூங்கி கொண்டு இருந்தார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட கொள்ளையன், அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை நைசாக கழற்ற முயன்றான்.

    அப்போது உஷா திடுக்கிட்டுக் கண் விழித்தார். வீட்டுக்குள் திருடன் நிற்பதை பார்த்து ‘திருடன், திருடன்’ என்று சத்தம் போட்டார்.

    இருப்பினும் கொள்ளையன் உஷா கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிவிட்டான்.

    இது குறித்து உஷா கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நாமக்கல்லில் மூதாட்டியிடம் 8½ பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சி சந்தைப்பேட்டைபுதுார் அருணாசலம் தெருவை சேர்ந்தவர் நடேசன் (வயது 64). ரியல் எஸ்டே்ட தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சரோஜா (60).

    இவர் நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த, 3 மர்மநபர்கள் சரோஜா கழுத்தில் அணிந்திருந்த 8½ பவுன் தாலிசங்கிலியை பறித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சரோஜா கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து, மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்ம நபர்களை விரட்டினர். ஆனால் அவர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவாகி விட்டனர்.

    இதுகுறித்து நாமக்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் மூதாட்டியிடம் தாலி சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தஞ்சையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை திருவேங்கடம் நகரை சேர்ந்தவர் தனபாலன் (வயது 63). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி சாந்தி (53). இவர்கள் 2 பேரும் கீழவாசலில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்து விட்டு தனபாலன் தனது மனைவி சாந்தியுடன் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர் முகமூடி அணிந்து கொண்டு மற்றொரு மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்தனர். தஞ்சை-வல்லம் சாலையில் ஒரு தனியார் கம்பெனி அருகே வந்தபோது திடீரென மர்ம நபர்கள் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து சாந்தியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை சட்டென்று இழுத்து பறித்தனர்.

    பின்னர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். மர்ம நபர்கள் செயினை இழுத்ததில் சாந்தி நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவரது கணவர் அதிர்ச்சியடைந்து உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சாந்தியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சாந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுப்பற்றி தனபாலன் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பின்தொடர்ந்து சென்று சாந்தியின் கழுத்தில் கிடந்த செயினை பறித்த காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து கொள்ளையர்கள் யார்? அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சையில் நேற்று முன்தினம் இரவு ரெயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு தாயுடன் ஸ்கூட்டியில் சென்ற சங்கவி தாரணி என்ற இளம்பெண்ணிடம் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் செயினை பறித்தனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் அதுபோல் செயின் பறிப்பு நடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    மோட்டார் சைக்கிள்களில் செல்லும் பெண்களை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபடுகின்றனர். எனவே தஞ்சையில் முக்கிய இடங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடவள்ளி அருகே வீட்டுக்கு நடந்து சென்ற கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை வடவள்ளி நவவூர் பிரிவை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி சுமதி (வயது 38). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சுமதி கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க செயினை கண்இமைக்கும் நேரத்தில் பறித்து தப்பிச் சென்றார். இதில் அதிர்ச்சியடைந்த சுமதி இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

    சூலூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    சூலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தது. இதுகுறித்து கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து சூலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர்.

    சூலூர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிராஜ் மற்றும் போலீசார் சூலூர் அடுத்துள்ள காசிகவுண்டன் புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது சூலூர் பகுதிகளில் சில மாதங்களாக நடந்த தொடர் சங்கிலி பறிப்பில் தொடர்புடையவர்கள் என தெரிந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பாப்பம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த மேலும் 2 பேரை போலீசார் பிடித்தனர்.  விசாரணையில் அவர்கள் பள்ளபாளையம் பகுதியில் வசித்து வரும் ஆகாஷ் (19), சூலூர் மதியழகன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கணேஷ் மணி (27 ), பாலமுருகன் (22), காளையார்கோவில் பகுதியை சேர்ந்த காளீஸ்வரன் (24)என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார் 19 பவுன் தங்க நகைகளையும் மீட்டனர். இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் சூலூர் கோர்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    மதுரவாயலில் பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மதுரவாயல் கார்த்திகேயன் நகரை சேர்ந்தவர் ரஜினிகாந்தன். இவரது மனைவி பிரத்திமா. நேற்று மாலை அவர் அதே பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் தெருவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வநத் 2 வாலிபர்கள் பிரத்திமா அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து சென்று விட்டனர். இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அய்யம்பேட்டையில் நகையை பாலீஷ் செய்வதாக கூறி 2 பெண்களிடம் 8½ பவுன் அபேஸ் செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அய்யம்பேட்டை:

    தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை இரட்டை தெருவைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி கமலா (வயது 71). இவரது மகள் லட்சுமி (வயது 54). இவர் மாற்றுத்திறனாளி. இவரது சகோதரர் சீனிவாசன் திருமணமாகி குடும்பத்துடன் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பிரவீன்குமார் பெங்களூருல் வேலை பார்த்து வருகிறார். கமலாவும், லட்சுமியும் அய்யம்பேட்டையில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று கமலா வீட்டிற்கு வந்த 2 மர்ம நபர்கள் நகைகளை பாலிஷ் போட்டு தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய கமலா தான் அணிந்திருந்த 2½ பவுன் நகையை மர்ம நபரிடம் கழட்டிக்கொடுத்துள்ளார்.

    அவரை தொடர்ந்து லட்சுமியும் தான் அணிந்திருந்த 6 பவுன் செயினை கழட்டி மர்ம நபர்களிடம் கொடுத்தார்.அப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கேட்டு வாங்கிய மர்ம நபர்கள் இரண்டு செயினையும் அந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் போட்டு அலசி உள்ளனர். திடீரென தண்ணீர் இருந்த பாத்திரத்தை கமலாவிடம் கொடுத்த மர்ம நபர்கள், நகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்று மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி விட்டனர். அவர்கள் சென்ற பிறகு கமலாவும், லட்சுமியும் பாத்திரத்தில் கையை விட்டு பார்த்த பொழுது நகைகளை காணாமல் திடுக்கிட்டனர்.

    இதுகுறித்து கமலா அய்யம்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து நகைகளை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.

    ஆம்பூர் அருகே மூதாட்டியிடம் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள மேல்கிருஷ்ணாபுரம் பூந்தோட்டத்தை சேர்ந்தவர் மணி இவரது மனைவி பத்மாவதி (வயது 62). இவர் இன்று காலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக நடந்து வந்த ஒரு மர்ம நபர் திடீரென பத்மாவதி அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு ஓடினார். அதிர்ச்சியடைந்த பத்மாவதி கூச்சலிட்டார். அதற்குள் அந்த நபர் தலைமறைவாகிவிட்டார்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்துச் சென்றனர்.

    விருதுநகர்:

    சிவகாசி தில்லை நகரை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மனைவி ஜெயக்கொடி (வயது 45). இவர், உறவுக்கார பெண்ணுடன் மொபட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சென்றார்.

    ஜக்கம்மாள் கோவில் அருகே சென்றபோது 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெயக்கொடி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசில் ஜெயக் கொடி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பரங்குன்றத்தில் கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றகனர்.

    மதுரை:

    மதுரை எச்.எம்.எஸ். காலனியில் உள்ள அமிதா நகரைச் சேர்ந்தவர் மணி மாறன். இவரது மனைவி ராஜேசுவரி (வயது 45).

    இவர், சம்பவத்தன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு, சன்னதி தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென ராஜேசுவரி கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். ஆள் நடமாட்டம் பகுதியில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நகை பறிப்பு சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    சேலம் அருகே கத்தி முனையில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). இவர் நேற்று அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த தொளசம்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி மாரியப்பன் (56) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் செயினை பறித்தார்.

    இது குறித்து பழனிசாமி சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாரியப்பனை கைது செய்தனர். மாரியப்பன் மீது ஏற்கனவே செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 13 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    குழந்தை வேண்டி பரிகாரபூஜை செய்வதாக கணவன்-மனைவியை தாக்கி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சீபுரம்:

    மதுராந்தகம் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். பெயிண்டர்.இவரது மனைவி ஜானகி (30) இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை.

    இந்த நிலையில் பிரபாகரனுக்கு காஞ்சீபுரம் அடுத்த தாமரைத் தாங்கல் பகுதியைச் சேர்ந்த சாமியார் பாபு உடன் தொடர்பு ஏற்பட்டது. அவரிடம் தனக்கு குழந்தை இல்லையே என்று கூறி வருத்தப்பட்டார்.

    இதையடுத்து பாபு, பவுர்ணமி அன்று ரகசிய யாகம் நடத்தினால் உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்று பிரபாகரனிடம் கூறினார்.

    மேலும் கணவன்-மனைவி இருவரும் குளித்துவிட்டு நகைகள் அணிந்து யாகத்தில் இருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனை நம்பிய பிரபாகரன் ரகசிய பரிகார பூஜைக்கு சம்மதித்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு பிரபாகரன் தனது மனைவி ஜானகியுடன் தாமரைத் தாங்கல் கிராமத்திற்கு சென்றார். அவர்களை சாமியார் பாபு, இரவு 11 மணி அளவில் தாமரைத் தாங்கல் கிராமத்துக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று யாகம் செய்தார். அப்போது கணவன்-மனைவி இருவரும் கண்ணை மூடிக் கொண்டு சாமி கும்பிடுங்கள் என பாபு கூறினார்.

    தம்பதி இருவரும் கண்ணை மூடிக் கொண்டிருந்த போது திடீரென பாபு அங்கிருந்த கல்லால் பிரபாகரனின் முகத்தில் தாக்கினார். பின்னர் ஜானகியையும் தாக்கி கண் இமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

    அதிர்ச்சி அடைந்த ஜானகி கூச்சலிட்டார். கிராம மக்கள் திரண்டு வந்து காயம் அடைந்த பிரபாகரனை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காஞ்சீபுரம் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர்.

    தப்பி ஓடிய போலி சாமியார் பாபுவை தேடி வருகின்றனர்.

    ×