search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewellery flush"

    தஞ்சையில் வீட்டில் இருந்த பெண்களை தாக்கி நகை பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை, பூக்கொல்லை அருகே உள்ள வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் ரவிந்திரநாத். ஓய்வு பெற்ற மருத்துவ ஊழியர். இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது 58). ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார்.

    இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சாந்தமூர்த்தி. இவரது மனைவி அம்சவள்ளி (56).நேற்று இரவு தாமரைச்செல்வி வீட்டில் அவரது மருமகள் நிம்மி மற்றும் அம்சவள்ளி ஆகிய 3 பேரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென மேல்சட்டை அணியாமல் டவுசர் மட்டும் அணிந்து கொண்டு உருட்டு கட்டையுடன் 2 வாலிபர்கள் தாமரைச் செல்வியின் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் தாமரைச்செல்வி மற்றும் நிம்மி அணிந்திருந்த நகைகளை தரும்படி கேட்டுள்ளனர். அவர்கள் மறுக்கவே 2 பேரையும் தாக்கி 9 பவுன் நகையை பறித்துள்ளனர். இதை தடுத்த அம்சவள்ளியையும் தாக்கிவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இதையடுத்து தாமரைச் செல்வி தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து டவுசர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    வீட்டில் இருந்த பெண்களை தாக்கி நகை பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    திருப்பூரில் பேரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையை வாலிபர் ஒருவர் பறித்து சென்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்தவர் சுருளியம்மாள் (வயது 65). இவர் பெரியதோட்டம் என்ற பகுதியில் உள்ள தனது மகனை பார்க்க சென்றார். அங்கு மகன் குடும்பத்தினருடன் பேசி விட்டு இரவு பேரனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    நல்லூத்துபாளையம் என்ற இடத்தில் வந்தபோது பின்னால் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இருட்டுநேரத்தை பயன்படுத்திய அந்த வாலிபர் அருகில் வந்து சுருளியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தார்.

    அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தம்போட்டார். உடனே பேரன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். கொள்ளையனை தேடிய போது அவர் இருட்டில் மின்னல் வேகத்தில் தப்பினார்.

    இது குறித்து அனுப்பர் பாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

    காய்கறி வாங்கச் சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள முகமேதாபுரம் 5-வது தெருவைச் சேர்ந்த தெய்வேந்திரன். இவர் அரசு கருவூலத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவரது மனைவி வீரம்மாள் (வயது 60). இவர் நேற்று இரவு அங்குள்ள ஒரு கடைக்கு காய்கறி வாங்கச் சென்றார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். வீரம்மாளிடம் முகவரி கேட்பது போல் ஒரு பேப்பரை காட்டினர்.

    அதனை வீரம்மாள் வாங்கி படித்துப்பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின் சீட்டில் இருந்த நபர் வீரம்மாளின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார்.

    வீரம்மாள் ‘திருடன், திருடன்’ என்று அலறினார். இதனை கேட்ட பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

    இது தொடர்பாக வீரம்மாள், திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காந்தி வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பு கொள்ளையர்களை வலைவீசி தேடிவவருகிறார்.

    உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் அடுத்த காரணிமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 38). இவரது மனைவி பிரேமா (33). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் மானாம்பதியில் இருந்து காரணிமண்டபம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    வயலூர் கூட்ரோடு அருகே வந்தபோது மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் மோதுவதுபோல வந்து பிரேமா அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.

    உடனே ஸ்டாலின் மற்றும் அருகில் இருந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். அப்போது அந்த மர்ம நபர் நோனாம்பூண்டி அருகே மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தங்கச்சங்கிலியுடன் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து பெருநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை ஆய்வு செய்தார். அப்போது அந்த எண் போலியானது என்பது தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
    ஒட்டன்சத்திரம் அருகே வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் பொருளூரை சேர்ந்தவர் திருவாண்டசாமி. இவரது மனைவி பழனியம்மாள் (வயது70). வீட்டில் சமைத்துக்கொண்டு இருந்தார். அப்போது ஒருவர் முகவரி கேட்பதுபோல் பழனியம்மாளிடம் வழி கேட்டார். திடீரென கையில் இருந்த மிளகாய்பொடியை பழனியம்மாள் முகத்தில் தூவினார். கண் எரிச்சலால் பழனியம்மாள் அலறிதுடித்தார். 

    இதனைபயன்படுத்தி அந்தநபர் அவர் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடமுயன்றார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடி திருடனை பிடித்து கள்ளிமந்தயம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த நபர் குப்பாயிவலசை சேர்ந்த காளிமுத்து(52) என தெரியவந்தது.

    போலீசார் அவரை கைது செய்து வேறு ஏதேனும் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வியாபாரி மனைவியிடம் 6 பவுன் நகையை 2 வாலிபர்கள் பறித்துச் சென்றனர்.

    மதுரை:

    மதுரை கரிமேடு மேல பொன்னகரம் சிஸ்டர் ரோஸ் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர் நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டு வாசலுக்கு தண்ணீர் மோட்டாரை அணைக்க வந்தார்.

    அப்போது அங்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் சாந்தி கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் எஸ்.எஸ்.காலனி ராஜீவ் காந்தி தெருவைச் சேர்ந்தவர் அழகுமலை (வயது30). இவர் மேலவெளிவீதியில் நடந்து சென்றபோது திடீர் நகர் முதல் பிளாக்கை சேர்ந்த செல்லப்பாண்டி (21) வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்து சென்றான்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லப்பாண்டியை கைது செய்தனர்.

    நடந்து சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 7 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    திருவட்டார்:

    திருவட்டார் அருகே மேக்காமண்டபம் மயிலோடும் பாறை விளையைச் சேர்ந்தவர் சில்வான்ஸ். இவரது மனைவி ஜெசி ஜெயனேட் (வயது 78), ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர், அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் ஜெசி ஜெயனேட் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்தார்.

    உடனே அவர், திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அதற்குள் மர்மநபர் நகையை பறித்து விட்டு தப்பியோடி விட்டார். இது குறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஜெசி ஜெயனேட்டிடம் கொள்ளையன் குறித்த அடையாளங்களை போலீசார் கேட்டறிந்தனர். பின்னர் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை.

    செயின் பறிப்பு குறித்து ஜெசி ஜெயனேட் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 1/2 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    பேரையூர்:

    பெருங்குடி அருகே உள்ள பெரிய ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருது. இவரது மனைவி வளர்மதி. இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருது சிந்தாமணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் தனது மனைவியை அழைத்துச் சென்றார்.

    அங்கு சிகிச்சை முடிந்து இருவரும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பெரிய ஆலங்குளம் அருகே வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவர்களை பின் தொடர்ந்தனர்.

    ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென்று மர்ம நபர்கள் வளர்மதி கழுத்தில் கிடந்த 7 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இது குறித்து வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வீட்டில் படுத்து தூங்கிய திமுக நிர்வாகி மனைவியிடம் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். போலீசார் இரவு நேரங்களில் ரோந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம். இவர் தி.மு.க.வில் ஆதி திராவிடர் நல பிரிவு அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி செல்வி (வயது 42).

    இந்நிலையில் நேற்று இரவு இவர்கள் குடும்பத்துடன் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது வீட்டில் புகுந்த மர்மநபர்கள் தூங்கி கொண்டிருந்த செல்வியின் கழுத்தில் கிடந்த 28 கிராம் தங்க செயினை பறித்து கொண்டு ஓடினான். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி திருடன்,திருடன் என சத்தம் போட்டார். இதையடுத்து அவனை துரத்தி சென்றனர். எனினும் மர்ம நபர் தப்பி சென்று விட்டான்.

    இது குறித்து சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு சொக்கம்பட்டி பகுதியில் சலவை தொழிலாளி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் திருட முயற்சித்துள்ளார். இதை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். மேலும் சொக்கம்பட்டி பள்ளி வாசல் தெருவை சேர்ந்த அப்துல் ரகீம் என்பவரது பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    சொக்கம்பட்டி பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் இரவு நேரங்களில் ரோந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவையில் நேற்று இரவு 2 பெண்களிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர். இந்த இரு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை ஆனைமலையை சேர்ந்தவர் ஜான் கிருபாகரன். இவருடைய மனைவி ரூத்குணசீலி (வயது 53).

    இவரது சகோதரி சிங்காநல்லூரில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக நேற்று சிங்காநல்லூர் வந்த ரூத்குணசீலி இரவு 8.30 மணி அளவில் அம்மன் கோவில் தெருவில் நடந்து சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ரூத்குணசீலி கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் எடை கொண்ட 2 தங்கசெயின்களை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த காதர் பாட்ஷா என்பவரது மனைவி பிர்தோஸ்(44). இவர் நேற்று இரவு தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 பேர் பிர்தோஸ் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோட்டில் இன்று அதிகாலை கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார்.

    திண்டல்:

    ஈரோடு திண்டல் கே. எஸ். நகரைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி புஷ்பா (வயது 50) .

    கணவன்-மனைவி இருவரும் இன்று அதிகாலை 5.30 மணியளவில் வெளியூர் செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    செங்கோடம் பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் புஷ்பா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை (தாலிச் செயின்) திடீரென பிடித்து இழுத்து பறித்தார்.

    இதை சற்றும் எதிர்பார்க்காத புஷ்பா திருடன்..திருடன்... என கத்தினார். வெங்கட்ராமன் உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

    அதற்குள் அந்த மர்ம நபர் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார். அதிகாலை நேரம் என்பதால் உதவிக்கு யாரும் அங்கு வரவில்லை.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு வெங்கட்ராமன் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    நகை பறிப்பு நடந்த இடத்தின் அருகே பல்வேறு தனியார் வணிக வளாகங்கள் உள்ளன. அங்கு பொருத்தப்பட்டுள்ள உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாநகரில் சமீப காலமாக தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். நகை பறிப்பு சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    முதலியார்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகையை மர்ம கும்பல் பறித்து சென்று விட்டது.

    புதுச்சேரி:

    முதலியார் பேட்டை வாரியார் நகரை சேர்ந்தவர் உலகநாதன். இவரது மனைவி சித்ரா (வயது 42). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகன் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். மற்றொரு மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர். சித்ரா கணவரை விட்டு பிரிந்து 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.

    நேற்று சித்ரா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் கொண்ட கும்பல் சித்ராவின் வீட்டுக்கு வந்தது. அவர்கள் சித்ராவின் கழுத்தில் கத்தியை வைத்து அணிந்திருந்த நகைகளை கழற்றி கொடுக்கும்படியும், அப்படி கழற்றி கொடுக்காவிட்டால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டியது.

    இதனால் பயந்து போன சித்ரா அணிந்திருந்த தாலி செயின் உள்பட 8 பவுன் நகையை கழற்றி கொடுத்தார். இதையடுத்து அந்த கும்பல் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. அதே வேளையில் பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகை அந்த கும்பலிடம் இருந்து தப்பியது.

    இதுகுறித்து சித்ரா முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

    ×