search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "god mother"

    சாத்தான்குளம் அருகே இன்று மூதாட்டியிடம் 7 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் பூச்சிக்காடு ஆர்.சி. கோவில்தெருவை சேர்ந்தவர் ஜேசு. இவரது மனைவி தெரசம்மாள் (வயது 68). இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. இந்நிலையில் தோட்டத்தில் இலை பறிப்பதற்காக இன்று காலை தெரசம்மாள் சென்றார். 

    அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் திடீரென்று அவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்துவிட்டு தப்பி ஓடி விட்டான். 

    இது குறித்து அவர் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து விட்டு தப்பி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். 
    போலீஸ் என கூறி மூதாட்டியிடம் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அய்யப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கோசலை (வயது65). இவர்களது மகள் சக்கரையம்மாள் திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவிலில் நிர்வாக அலுவலராக உள்ளார்.

    நேற்று கடைக்கு சென்று விட்டு கோசலை வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 இளைஞர்கள் வந்தனர்.

    அவர்கள் கோசலையிடம் இங்கு திருடர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. நகைகளை கழுத்தில் அணிந்து செல்லாதீர்கள் என போலீஸ் போல் கூறி உள்ளனர். மேலும் நகைகளை கழற்றி தாருங்கள் பேப்பரில் சுற்றித் தருகிறோம் என்றும் தெரிவித்தனர்.

    இதனை நம்பிய கோசலை தான் அணிந்திருந்த 5 மற்றும் 3 பவுன் தங்க சங்கிலிகளை கழற்றி கொடுத்துள்ளார். அதனை பேப்பரில் வைத்து சுற்றி கொடுத்து விட்டு 2 இளைஞர்களும் சென்று விட்டனர்.

    வீட்டிற்கு வந்த கோசலை பேப்பரை பிரித்து பார்த்த போது நகைகள் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    காய்கறி வாங்கச் சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள முகமேதாபுரம் 5-வது தெருவைச் சேர்ந்த தெய்வேந்திரன். இவர் அரசு கருவூலத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவரது மனைவி வீரம்மாள் (வயது 60). இவர் நேற்று இரவு அங்குள்ள ஒரு கடைக்கு காய்கறி வாங்கச் சென்றார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். வீரம்மாளிடம் முகவரி கேட்பது போல் ஒரு பேப்பரை காட்டினர்.

    அதனை வீரம்மாள் வாங்கி படித்துப்பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின் சீட்டில் இருந்த நபர் வீரம்மாளின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார்.

    வீரம்மாள் ‘திருடன், திருடன்’ என்று அலறினார். இதனை கேட்ட பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

    இது தொடர்பாக வீரம்மாள், திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காந்தி வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பு கொள்ளையர்களை வலைவீசி தேடிவவருகிறார்.

    முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் செயினை 2 வாலிபர்கள் பறித்து சென்றனர். #chainsnatching
    கோகை:

    கோவை ஒப்பணகார வீதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி சாந்தா (வயது 73). சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகே உள்ள டெய்லர் கடைக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் சாந்தாவின் அருகில் வந்து இந்தியில் பேசி  முகவரி கேட்டனர். 

    அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் போது கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த சாந்தா இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். 

    போலீசார் வழக்குப்பதிவு செய்து முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள். #chainsnatching
    ×