search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jammu and Kashmir"

    • எல்லைப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டை
    • ட்ரோன் மூலம் ஆயுதங்கள் வீசப்பட்டதா என்பது குறித்து ஆய்வு.

    ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சில்லியாரி கிராமம் அருகே பறக்கும் சாதனம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அந்த பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அது ட்ரோன் ஆக இருக்கலாம் என்று எல்லைப்பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார். எனினும் அந்த ஆளில்லா விமானத்தை யாரும் பார்த்தார்களா என்பது குறித்து தகவல் இல்லை என்றும் அவர் கூறினார்.

    பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு எல்லைப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை நடைபெற்றதாகவும் ட்ரோன் மூலம் ஆயுதங்கள் ஏதுவும் வீசப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் இந்த பணிக்கு ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    அண்டை நாட்டில் இருந்து ஏவப்படும் ட்ரோன்களின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • காஷ்மீர் எல்லையில் இன்று டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • டிரோன் பறந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    ஜம்மு:

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள். சமீபகாலமாக பாகிஸ்தானின் டிரோன்கள் இந்திய எல்லையில் பறந்து போதை பொருள், வெடிபொருள் உள்ளிட்டவற்றை வீசி வருகின்றன. இதற்கு எல்லை பாதுகாப்பு வீரர்கள் பதிலடி கொடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் காஷ்மீர் எல்லையில் இன்று டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஷ்மீரின் சர்வதேச எல்லையில் அதிகாலை 4.15 மணியளவில் டிரோன் பறந்தது.

    இந்த டிரோன் பாகிஸ்தானைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரரகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அந்த டிரோன் அங்கிருந்து மாயமானது.

    டிரோன் பறந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆயுதம் அல்லது ஏதாவது வெடிபொருளை விட்டு சென்றார்களா? என்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் அல் கொய்தா ஆதரவு இயக்கத்தின் தளபதியை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டுக் கொன்றனர்.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட வார்புரா பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து, அந்த பகுதியை இன்று காலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.



    சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் அல் கொய்தா ஆதரவு பெற்ற அன்சர் கஸ்வத் உல்-ஹிந்த் பயங்கரவாத இயக்கத்தின் தளபதியான ஜகிர் முசா என்பவனை பாதுகாப்பு படையினர்  சுட்டுக் கொன்றனர்.

    ஒசாமா பின் லேடன் தலைமையில் முன்னர் இயங்கிவந்த அல் கொய்தா அமைப்பின் கிளை அமைப்பாக இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் அன்சர் கஸ்வத் உல்-ஹிந்த்  பயங்கரவாத இயக்கம்  இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் எல்லைக்கோட்டு பகுதி அருகே இன்று பயிற்சியின்போது சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர்.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் எல்லைக்கோட்டு பகுதியில் உள்ள மெந்தர் பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் இன்று கண்காணிப்பு மற்றும் ரோந்துசார்ந்த பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

    காலை சுமார் 9.30 மணியளவில் அப்பகுதியில் திடீரென்று சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்ததனர். படுகாயமடைந்த இருவர் அருகாமையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கோபால்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் இன்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



    அப்போது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். சிறிது நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. 
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட அவந்திபோரா பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பயங்கரவாதிகளை வேட்டையாடும் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து, அந்த பகுதியை இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் அங்கு 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்டவர்கள் ஷவுக்கத் டார், இர்பான் வார், முசாபர் ஷேக் என்பதும் இவர்கள் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இவர்களில் ஷவுக்கத் டார் மீது பல கொலை வழக்குகள் பதிவாகி போலீசார் அவனை தேடி வந்தனர்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரம்ஜான் விடுமுறைக்காக வீடு திரும்பிய ராணுவ வீரர் அவுரங்கசிப் கடத்திச் சென்று கொல்லப்பட்ட வழக்கு, அக்கிப் அஹமது வாகேய் என்ற போலீஸ்காரர் கொல்லப்பட்ட வழக்கு ஆகியவற்றில் தேடப்படும் குற்றவாளியாக ஷவுக்கத் டார் அறிவிக்கப்பட்டிருந்தார்.

    இதேபோல், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபோர் பகுதியில் இன்று பிற்பகல் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

    பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடங்களில் இருந்து வெடிப்பொருட்கள் மற்றும் இந்திய அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டு வீழ்த்தப்பட்டான்.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் உள்ள பன்ஸ்காம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்த இடத்தை சுற்றி வளைத்து வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீரர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான்.

    மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என கருதி ராணுவ வீரர்கள் தொடர்ந்து தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நவ்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானை சேர்ந்த இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #terroristskilled #Soporeencounter #Pakistaniterrorists
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், நவ்காம் மாவட்டத்துக்குட்பட்ட சுட்சு கலான் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பயங்கரவாதிகளை வேட்டையாடும் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து, அந்த பகுதியை இன்று காலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இன்று மாலை இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து வெடிப்பொருட்கள் மற்றும் இந்திய அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையில் மோதல் நீடித்து வருவதாகவும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொல்லப்பட்ட இரு பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த அலி மற்றும் இத்ரீஸ் என தெரியவந்துள்ளது. #terroristskilled #Soporeencounter #Pakistaniterrorists 
    காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஜெய்ஷ் இ முஹம்மது இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க மேலும் ஆதாரங்களை அளிக்குமாறு பாகிஸ்தான் அரசு கேட்டுள்ளது. #Pakistanseeksevidence #Pulwamaattack
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதி மற்றும் உறுதுணையாக இருந்தவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதற்கான ஆதாரங்களை இந்திய அரசு கடந்த மாதம் 27-ம் தேதி பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைத்து அங்கு இருக்கும் மசூத் அசார் உள்பட 22 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. மேலும், எல்லைப்பகுதியில் இயங்கிவரும் பயங்கரவாத முகாம்கள் தொடர்பாக இந்திய அரசிடம் உள்ள உளவுத்துறை தகவல்களும் பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், இந்திய அரசு அளித்துள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. அவர்கள் அனுப்பிய தகவலில் இவர்களுக்கு எல்லாம் தொடர்பு இருப்பதாக ‘கருதப்படுவதாக’ மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், ஒரு வியக்கத்தக்க முன்னேற்றமாக இந்திய அரசு முன்னர் அளித்திருந்த ஆதாரங்களின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு நடத்திய விசாரணை மூலம் அறியவந்த விபரங்களை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் தூதருடன் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் இன்று பரிமாறி கொண்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இவ்விவகாரத்தில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் வகையில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னர் அளித்திருந்த வாக்குறுதியின்படி, புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்திருந்த ஆதாரங்களின் அடிப்படையில் அந்நாட்டு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் இன்று இந்திய தூதரிடம் பரிமாறப்பட்டது.

    இவ்விசாரணையை மேற்கொண்டு முன்னெடுத்து செல்லும் வகையில் இந்தியாவிடம் இருந்து மேலும் சில ஆதாரங்கள் கோரப்பட்டுள்ளது என பாகிஸ்தான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. #Pakistanseeksevidence  #Pulwamaattack
    காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர் யாசின் மாலிக்கின் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய அரசு இன்று தடை விதித்துள்ளது. #YasinMalik #JKLFbanned
    புதுடெல்லி:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சில அமைப்பினர் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் மூலம் பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

    அவ்வகையில், இயங்கிவரும் பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய அரசு இன்று தடை விதித்துள்ளது.

    உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய உள்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    பிரிவினைவாதி யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கம் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு இந்தியாவில் வன்முறையை ஆதரித்தும் பிரிவினையை உருவாக்கும் காரியங்களையும் செய்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஜம்முவில் உள்ள கோட்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கம் தலைவர் யாசின் மாலிக் மீது 30 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் மத்திய மந்திரி முப்தி முஹம்மது சையத் மகள் ருபயா சையத் கடத்தல் வழக்கு மற்றும் கொலை உள்பட 30-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    யாசின் மாலிக் தலைமையிலான இயக்கத்துக்கு மத்திய அரசு விதித்துள்ள இந்த தடை காஷ்மீர் மாநிலத்தையே திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றிவிடும் என அம்மாநில முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

    யாசின் மாலிக் நீண்ட காலத்துக்கு முன்னரே வன்முறையை கைவிட்டு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் ஜனநாயக முறையிலான போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான முந்தைய மத்திய அரசின் சார்பில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய குழுவில் இடம்பெற்றிருந்த யாசின் மாலிக் இயக்கத்தின்மீது தடை விதிப்பதால் மத்திய அரசு என்ன சாதித்து விடப்போகிறது? எனவும் மெகபூபா கேள்வி எழுப்பியுள்ளார். #YasinMalik #JKLFbanned 
    பாகிஸ்தான் மிரட்டலை தொடர்ந்து இந்தியாவின் வட மாநிலங்களில் உள்ள சில விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட விமானச்சேவைகள் மீண்டும் தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. #airportsOperations #Operationsresumed
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் ஊடுருவி நேற்று நடத்திய தாக்குதலின் எதிரொலியாக இன்று இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தவந்த பாகிஸ்தான் நாட்டு போர் விமானம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நவ்ஷேரா எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

    இதைதொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லே, ஜம்மு, ஸ்ரீநகர், பதான்கோட் ஆகிய விமான நிலையங்களில் இன்று காலையில் இருந்து விமானச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரிஸ்டர், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மற்றும் சிம்லா உள்ளிட்ட விமான நிலையங்களும் இன்று பிற்பகல் மூடப்பட்டன. இதனால், நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    டெல்லிக்கு வடக்கில் உள்ள வான்வெளியில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், வட மாநிலங்களில் உள்ள 9 விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட விமானச்சேவைகள் மீண்டும் தொடர இன்று பிற்பகல் மூன்று மணியளவில் மத்திய அரசு அனுமதிஅளித்துள்ளது.  #airportsOperations #Operationsresumed 
    ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் மற்றும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #ShopianEncounter #JammuAndKashmir #JaisheMohammed
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம், மீமந்தர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் இன்று காலை அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



    அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர். சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவில் பாலகோட் பகுதியில் முகாமிட்டிருந்த ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகள் மீது இந்திய விமானப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள், பயங்கரவாத பயிற்சி பெறுவோர் மற்றும் மூத்த தளபதிகள் உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ShopianEncounter #JammuAndKashmir #JaisheMohammed

    ×