என் மலர்
செய்திகள்

X
ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
By
மாலை மலர்27 Feb 2019 9:25 AM IST (Updated: 27 Feb 2019 9:25 AM IST)

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் மற்றும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #ShopianEncounter #JammuAndKashmir #JaisheMohammed
ஸ்ரீநகர்:

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவில் பாலகோட் பகுதியில் முகாமிட்டிருந்த ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகள் மீது இந்திய விமானப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள், பயங்கரவாத பயிற்சி பெறுவோர் மற்றும் மூத்த தளபதிகள் உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ShopianEncounter #JammuAndKashmir #JaisheMohammed
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம், மீமந்தர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் இன்று காலை அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர். சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
Next Story
×
X