என் மலர்

    நீங்கள் தேடியது "Yasin Malik"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பயங்கரவாத தாக்குதல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. #YasinMalik
    புதுடெல்லி:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சில அமைப்பினர் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் மூலம் பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

    அவ்வகையில், இயங்கிவரும் பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது.

    பிரிவினைவாதி யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கம் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு இந்தியாவில் வன்முறையை ஆதரித்தும் பிரிவினையை உருவாக்கும் காரியங்களையும் செய்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடுப்புக்காவல் சட்டப்படி ஜம்முவில் உள்ள கோட்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த யாசின் மாலிக்குக்கு எதிராக கடந்த 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த தீர்மானித்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரை சமீபத்தில் டெல்லிக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

    பின்னர், டெல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் யாசின் மாலிக்கை ஆஜர்படுத்திய அதிகாரிகள் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்டிய விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரை விசாரணை காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதியிடம் தெரிவித்தனர். இதையடுத்து, ஏப்ரல் 22-ம் தேதிவரை அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    விசாரணை காவல் முடிவடைந்த நிலையில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட யாசின் மாலிக்கை வரும் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.    பாதுகாப்பு காரணங்கள் கருதி யாசின் மாலிக் தொடர்பான மறுவிசாரணையை டெல்லி திகார் சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பிரன்சிங் முறையில் நடத்த வேண்டும் என திகார் சிறை நிர்வாகத்தின் சார்பில் இன்று வலியுறுத்தியதால் இதுதொடர்பாக பதிலளிக்குமாறு யாசின் மாலிக் தரப்பு வழக்கறிஞரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. #YasinMalik #JKLFbanned #NIAremand #Tiharjail 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர் யாசின் மாலிக்கின் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய அரசு இன்று தடை விதித்துள்ளது. #YasinMalik #JKLFbanned
    புதுடெல்லி:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சில அமைப்பினர் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் மூலம் பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

    அவ்வகையில், இயங்கிவரும் பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய அரசு இன்று தடை விதித்துள்ளது.

    உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய உள்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    பிரிவினைவாதி யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கம் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு இந்தியாவில் வன்முறையை ஆதரித்தும் பிரிவினையை உருவாக்கும் காரியங்களையும் செய்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஜம்முவில் உள்ள கோட்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கம் தலைவர் யாசின் மாலிக் மீது 30 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் மத்திய மந்திரி முப்தி முஹம்மது சையத் மகள் ருபயா சையத் கடத்தல் வழக்கு மற்றும் கொலை உள்பட 30-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    யாசின் மாலிக் தலைமையிலான இயக்கத்துக்கு மத்திய அரசு விதித்துள்ள இந்த தடை காஷ்மீர் மாநிலத்தையே திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றிவிடும் என அம்மாநில முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

    யாசின் மாலிக் நீண்ட காலத்துக்கு முன்னரே வன்முறையை கைவிட்டு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் ஜனநாயக முறையிலான போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான முந்தைய மத்திய அரசின் சார்பில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய குழுவில் இடம்பெற்றிருந்த யாசின் மாலிக் இயக்கத்தின்மீது தடை விதிப்பதால் மத்திய அரசு என்ன சாதித்து விடப்போகிறது? எனவும் மெகபூபா கேள்வி எழுப்பியுள்ளார். #YasinMalik #JKLFbanned 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, காஷ்மீரில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்க தலைவர் யாசின் மாலிக்கை போலீசார் இன்று கைது செய்தனர். #NarendraModi #Kashmirprotest
    ஸ்ரீநகர்:
        
    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பிரதமரின் வருகைக்கு காஷ்மீரில் செயல்பட்டு வரும் பல்வேறு பிரிவினைவாத தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

    இதற்கிடையே, ஜே.ஆர்.எல் எனும் கூட்டு இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்க தலைவர்களான சயித் அலி ஷா கிலானி, மிர்வாஸ் உமர் பரூக் மற்றும் ஜே.கே.ஆர்.எல். அமைப்பின் தலைவர் முகமது யாசின் மாலிக் ஆகியோர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் காஷ்மீர் வரும் மோடிக்கு எதிர்ப்பை காட்டும் விதமாக, மக்களை திரட்டி லால் சவுக் சதுக்கத்தை நோக்கி கண்டன பேரணி நடத்தப்படும் என தெரிவித்தனர்.    இந்நிலையில், பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, காஷ்மீரில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை போலீசார் இன்று கைது செய்தனர்.

    இதுதொடர்பாக ஜே.கே.ஆர்.எல். அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், யாசின் மாலிக் ஜே.ஆர்.எல் எனும் கூட்டு இயக்க தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்து வீடு திரும்பிய அவரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டே அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார். #NarendraModi #Kashmirprotest
    ×