என் மலர்

  நீங்கள் தேடியது "Delhi special court"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் 2019-ல் கைது செய்யப்பட்டார்.
  பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் 2019-ல் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

  பின்னர், யாசின் மாலிக் குற்றவாளி என தீர்ப்பளித்த நிலையில் தண்டனையை அறிவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  இதையும் படியுங்கள்.. விசா முறைகேடு விவகாரம்- கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை முன்கூட்டியே ஊடகங்களுக்கு கசிந்தது குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளிக்கும்படி டெல்லி சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #VVIPChoppersCase #AgustaWestland #ChristianMichel
  புதுடெல்லி:

  ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல், துபாயில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் நாடு கடத்தப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

  பின்னர் அவர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  விசாரணைக்குப் பிறகு கிறிஸ்டியன் மைக்கேலுக்கு எதிராக அமலாக்கத்துறை, நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில், கிறிஸ்டியன் மைக்கேல் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான 12 ஒப்பந்தங்களில் தலையிட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


  ஆனால் இந்த குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பே, ஊடகங்களுக்கு அதன் நகல் கசிந்துவிட்டதாக கூறி கிறிஸ்டியன் மைக்கேல் சார்பில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அமலாக்கத்துறை விசாரணையின்போது யாருடைய பெயரையும் தான் குறிப்பிடவில்லை என கிறிஸ்டியன் மைக்கேல் குறிப்பிட்டிருந்தார்.

  இதேபோல் அமலாக்கத்துறை சார்பிலும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  குற்றப்பத்திரிகை நகல் கசிந்தது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றப்பத்திரிகை நகல் முன்கூட்டியே கிடைத்தது எப்படி? என்பது குறித்து விளக்கம் கேட்டு  செய்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் கூறியிருந்தது.
   
  இந்த வழக்கை இன்று விசாரித்த சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார், கிறிஸ்டியன் மைக்கேல் தாக்கல் செய்த மனுவிற்கு அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை  11-ம்  தேதிக்கு ஒத்திவைத்தார்.

  மைக்கேலின் தொழில் பங்குதாரரும் மற்றொரு இடைத்தரகருமான டேவிட் நைஜல் ஜான் சிம் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. அவரை வரும் மே 9-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது.

  இதற்கிடையே ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லியைச் சேர்ந்த இடைத்தரகர் சூசன மோகன் குப்தாவின் விசாரணைக் காவலை, மே 9-ம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. #VVIPChoppersCase #AgustaWestland #ChristianMichel
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கருப்பு பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் கவுதம் கெய்தானின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. #AgustaWestlandcase #GautamKhaitan
  புதுடெல்லி:

  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

  இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் கவுதம் கெய்தானை அமலாக்கத்துறை கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. அவர் மீது புதிதாக கருப்பு பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. கவுதம் கெய்தானின் விசாரணைக் காவல் நிறைவடைந்ததை அடுத்து, அவரை பிப்ரவரி 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

  இதற்கிடையே, கருப்புப் பண மோசடி வழக்கில் ஜாமீன் கோரி கவுதம் கெய்தான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பிப்ரவரி 15-ம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதில் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மனு மீதான தீர்ப்பை 19-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. #AgustaWestlandcase #GautamKhaitan
  ×