search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "intensive care"

    • தாதகாப்பட்டி திருஞானம் நகரில் உள்ள சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
    • பாய்லரில் கொதித்துக் கொண்டிருந்த சாயநீர் எதிர்பாராத விதமாக அவரது உடல் மீது கொட்டியது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் கருங்கல்பட்டி, இந்திரா நகர் 6-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50).

    இவர் தாதகாப்பட்டி திருஞானம் நகரில் உள்ள சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    இவர் நேற்று வேலையில் இருந்த போது, பாய்லரில் கொதித்துக் கொண்டிருந்த சாயநீர் எதிர்பாராத விதமாக அவரது உடல் மீது கொட்டியது.

    இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அன்ன–தானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.
    • 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    பண்ருட்டி வட்டம் சிறுகிராமத்தைச் சேர்ந்த வர்கள் புருஷோத்தமன் (வயது 26). இவருடன் அதே ஊரைச் சேர்ந்த பெருமாள், விஜயராஜ் ஆகியோர் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு மோட்டார் சைக்கிளில் (டிரிப்ல்ஸ்) திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூருக்கு சென்றனர். விசேஷம் முடித்து நேற்று இரவு வீடு திரும்பினர். அப்போது அரசூர் பண்ருட்டி சாலையில் டி.குமாரமங்கலம் அருகே வரும் போது நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.

    அந்த வழியாக செல்பவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு 3 பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் புருஷோத்தமன் இறந்து விட்டார். பெருமாள், விஜயராஜ் ஆகியோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வ க்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 மணியளவில் பாலசுப்பிரமணியன் (33), ராஜீ (30) ஆகியோர் வாந்தி எடுத்தபடி சந்தானத்தின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினர்.
    • புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடலூர்: 

     கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காட்டாண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானம். இவருக்கு சொந்தமான நிலத்தில் பனைமரங்கள் உள்ளன. இவர் பனங்கிழங்கு விளைவித்து விற்பனை செய்து வருகிறார். இதில் ஒரு மரம் மட்டும் தப்புக் கொட்டையாகவே இருந்து வந்தது. இதனை கண்ட அந்த ஊரைச் சேர்ந்த ஒரு சிலர் அந்த பனைமரத்தில் மட்டும் கள் இறக்கி குடித்து வந்ததாக தெரிகிறது. அரசால் தடைசெய்யப்பட்ட கள் பானத்தை தனக்கு சொந்தமான மரத்தில் இறக்கி குடிப்பதை அறிந்த சந்தானம், மரத்தில் ஏறி கள் எடுக்க பயன்படுத்தப்படும் கண்ணாடி பாட்டிலில் ஊமத்தங்காய் பேஸ்டினை கலந்துவிடுகிறார். ஊமத்தங்காய் கள் அருந்துபவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படும், அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து விடலாம் என்று சந்தானம் திட்டமிட்டு இருந்தார்.

    அதன்படி இன்று அதிகாலை 3 மணியளவில் அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (33), ராஜீ (30) ஆகியோர் வாந்தி எடுத்தபடி சந்தானத்தின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினர். வெளியில் வந்த சந்தானம் உடனடியாக 2 பேரையும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். விஷ கள் குடித்த 2 பேரும் மயக்க நிலைக்கு வருவதை கண்ட மருத்துவர்கள், அவர்களை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பான புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் போலீஸ் டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு பனைமரங்கள் உள்ள பகுதியை ஆய்வு செய்த போலீஸ் டி.எஸ்.பி. சபியுல்லா, இது போன்று எங்கெல்லாம் பனைமரங்கள் உள்ளன. அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட கள் இறக்கப்படுகிறதா என்பதனை ஆய்வு செய்து, அதனை அழிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள அனைத்து பனைமரங்களையும் ஆய்வு செய்தனர். மேலும், விஷ கள் குடித்து 2 பேர் வாந்தி, மயக்கத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருவது குறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிய பஸ் நிலையத்தில் ஒரு வருடமாக 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார்.
    • திடீரென உடல் நிலை பாதிப்படைந்தது.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஒரு வருடமாக 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நிலை பாதிப்படைந்தது. இதனால் அவர் சைக்கிள் நிறுத்தம் அருகே மயங்கி நிலையில் கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் பள்ளப்பட்டி போலீசார், அங்கு சென்று முதியவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் முதியவர் கடந்த 4-ந்தேதி இரவு 10.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். முதியவருக்கு வலது முழங்கால், இடத முழங்காலில் காயத்தழும்பு இருந்தது. முதிவயர் பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? அவரது உறவினர்கள்? பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை.

    இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன் கத்தியால் குத்தியதில் காயமடைந்த மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான செல்வத்தை தேடி வருகின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொன்னைப் பட்டியைச் சேர்ந்த சேவுகன் மகள் பானுமதி (வயது 30) இவருக்கும், கண்டிக்க பட்டியைச் சேர்ந்த செல்வம் (40) என்பவருக்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

    துபாயில் வேலை பார்த்து வந்த செல்வம் சமீபத்தில் சொந்த ஊர் வந்தார். அவர் நண்பர்களுடன் மது குடிக்க பழகினார். போதைக்கு அடிமையான அவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் வேதனை அடைந்த பானுமதி தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    அவர் தனது 2 மகன்களையும் அழைத்து சென்றதால் செல்வம் ஆத்திரம் அடைந்தார். மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியிடம் தகராறு செய்து கத்தியால் அவரை குத்திக் கொல்ல முயன்றார்.இதனை கண்ட மாமியார் செல்வமணி அவரை தடுக்க முயன்றார்.

    அப்போது செல்வம் மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி மாமியார் செல்வமணி பரிதாபமாக இறந்தார். மனைவி பானுமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான செல்வத்தை தேடி வருகின்றனர்.

    • விஷம் குடித்து பஞ்சாயத்து துணை தலைவர் தற்கொலைக்கு முயன்றார்.
    • சஞ்சய் காந்தியிடம் ரூ. 2 லட்சம் பணத்துக்கு ரூ. 15 லட்சம் கந்துவட்டி கேட்டு மிரட்டி உள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வேகாக்கொல்லை ஊராட்சி வி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய்காந்தி (வயது 31). முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், ஒருமகனும் உள்ளனர்.இவர் கடந்த சில ஆண்டுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்தவர் ஒருவரிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து ரூ. 2 லட்சம் கடன் வாங்கி வருகிறார். கடன் கொடுத்த நபர் நிலத்துக்கான பத்திரத்தை வேறு ஒருவருக்கு வழங்கி உள்ளார்.

    அந்த நபர் சஞ்சய் காந்தியிடம் ரூ. 2 லட்சம் பணத்துக்கு ரூ. 15 லட்சம் கந்துவட்டி கேட்டு மிரட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த சஞ்சய்காந்தி வீட்டில் இருந்த போது திடீர் என விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை தூக்கி கொண்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலைமை மோசமானது. உடனே சஞ்சய்காந்தி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் படுகிறது. இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ‘நிபா’ வைரசால் பாதிக்கப்பட்ட நர்சு, வாலிபர் கவலைக்கிடமாக உள்ளதால் கோழிக்கோடு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் ஏராளமானவர்கள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 79 பேருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர். அவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் 22 பேருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதைதொடர்ந்து அந்த 22 பேரும் கோழிக்கோடு, மலப்புரம் அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் ஒரு நர்சு மற்றும் வாலிபருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஆஸ்திரேலியாவில் இருந்து 50 டோஸ் வைரஸ் காய்ச்சல் தடுப்பு மருந்து கோழிக்கோட்டுக்கு விமானம் மூலம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதி கிடைத்த பிறகுதான் அந்த மருந்தை நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவது பற்றிய முடிவு எடுக்கப்படும் என்று கோழிக்கோடு டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் அருகே மண்ணாச்சேரியில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து என்று கூறி மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் ஏராளமானோர் அந்த மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டனர்.

    மாத்திரை சாப்பிட்டவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இந்த பாதிப்பு காரணமாக 30 பேர் அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி மருத்துவ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது டாக்டர்களின் அனுமதி இல்லாமல் அந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஒரு ஊழியர் இந்த மாத்திரைகளை பொதுமக்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

    இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை மந்திரி சைலஜா கூறும்போது நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை. எனவே பொதுமக்கள் இதுபோன்ற வி‌ஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

    ×