search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hostel"

    • சிவகங்கையில் சிறுபான்மையினர் விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
    • வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 21 பள்ளி மாணவர்கள் விடுதிகளும், 14 பள்ளி மாணவியர்கள் விடுதிகளும், 5 கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற் பயிற்சி கல்லூரி மாணவர்கள் விடுதிகளும், 5 தொழிற் பயிற்சி கல்லூரி மாணவியர்கள் விடுதிகளும் செயல்பட்டு வருகிறது.

    பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ, மாணவியர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, தொழிற் பயிற்சி கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழிற்பயிற்சி மாணவ, மாணவியர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படு த்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவியர்களும் விகிதாசாரா அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

    விடுதிகளில் சேர பெற்றோர் அல்லது பாதுகாவலாரின் ஆண்டு வருமானம் ரூ.2லட்சத்துக்கு மிகாமலும், இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையம் குறைந்தபட்சம் 8 கி.மீட்டர் தொலைவிற்கு மேலும் இருக்க வேண்டும். இந்த தொலைவு விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

    விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக்காப்பா ளாரிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்தும், மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்திலோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி மாணவர்கள் வருகிற 30-ந் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

    விடுதிகளில் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு தனியாக 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்படும் நிலையில் எக்காலத்திலும் நிபந்தனை இல்லாமல் படிப்பு முடியும் வரை விடுதியில் தங்கிப்பயில அனுமதிக்கப்படுவார்கள் .

    விடுதி மாணாக்கர்களுக்கு உணவும், தங்கும் வசதியும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சீருடைகளும், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்களும், மலைப்பிரதேசத்தில் இயங்கும் விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ ர்களுக்கு கம்பளி, மேலாடையும் வழங்கப்படும்.

    எனவே, மாணவ, மாணவிகள் அரசின் சலுகைகளை பயன்படுத்திக் கொண்டு கல்வி பயில வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பூரில் உள்ள விடுதி, திருமண மண்டபங்களில் வெளியூர் நபர்களை தங்க வைக்ககூடாது என போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவிட்டுள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை திருப்பூரில் நாளை நடக்கிறது. வாக்கு எண்ணிக்கையின்போது கட்சி, சாதி, மத ரீதியாக வெளியூர் நபர்களால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    அவர்கள் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்குவதற்காக வரலாம். எனவே தங்கும் விடுதி உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியூர் நபர்களை தங்க வைக்க வேண்டாம்.

    சந்தேகப்படும்படி யாராவது தங்கியிருந்தால் காவல் கட்டுப்பாட்டு அறையை 100 என்ற எண்ணுக்கும், திருப்பூர் மாவட்ட போலீஸ் தனிப்பிரிவை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.
    வத்தலக்குண்டு விடுதியில் பிணமாக கிடந்த சமையல் மாஸ்டர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வத்தலக்குண்டு:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மருதன்வாழ்வைச் சேர்ந்தவர் முருகன் (வயது 53). இவர் திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறையில் உள்ள ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். மேலும் விசே‌ஷங்களுக்கும் சென்று சமைக்கும் பணி செய்து வந்தார்.

    வெளியே பல இடங்களுக்கு வேலைக்கு செல்லும் முருகன் 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறையே வீட்டுக்கு வருவார். பொங்கல் பண்டிகைக்கு வருவதாக கூறிய முருகன் வீட்டுக்கு வரவில்லை. மேலும் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    வத்தலக்குண்டு மெயின் ரோடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் முருகன் கடந்த 17-ந் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். அதன் பின்னர் ஊழியர்களுடன் பேசாமல் பெரும்பாலும் அறைக்குள்ளேயே முடங்கியுள்ளார்.

    நேற்று அறையில் இருந்து துர்நாற்றம் வீசவே சந்தேகமடைந்த ஊழியர்கள் வத்தலக்குண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தே போது அங்கு முருகன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    அவரது உடலை மீட்டு வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே முருகன் எவ்வாறு இறந்தார்? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் வழக்கில் சபாநாயகர் எடுத்த நடவடிக்கை செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளதால் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள 18 பேரின் வீடுகளுக்கும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். #18MLAs
    சென்னை:

    தமிழக எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள விடுதியில் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி வீடு உள்ளது. சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வரை இந்த வீட்டில் தங்கிக் கொள்ளலாம். இரண்டு படுக்கை அறைகொண்ட விசாலமான இந்த வீட்டுக்கு மாதவாடகை ரூ.200 ஆகும். எம்.எல்.ஏ.பதவி காலியான பிறகு வீட்டை காலி செய்யாமல் இருந்தால் மாத வாடகை ரூ.5375 கொடுக்க வேண்டும்.

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன், வெற்றிவேல் உள்பட 18 பேர் சபாநாயகரால் ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள 18 பேரின் வீடுகளை அதிகாரிகள் பூட்டி விட்டனர்.

    இப்போது 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் வழக்கில் சபாநாயகர் எடுத்த நடவடிக்கை செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளதால் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள 18 பேரின் வீடுகளுக்கும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.


    சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி 18 பேருக்கும் நோட்டீசு அனுப்பி உள்ளார். அதில் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள வீட்டுக்கு சீல் வைத்துள்ளதாகவும் அந்த வீட்டில் உள்ள உங்கள் பொருட்களை எடுக்க விரும்பினால் முன்கூட்டி தகவல் தெரிவித்துவிட்டு எடுத்து செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளனர். நிலுவையில் உள்ள வாடகை தொகையையும் செலுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். #18MLAs
    தமிழகத்திலுள்ள அனைத்து விடுதிகளிலும் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கல்வி விடுதி பணியாளர் நலச்சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கோபால் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் வடமலை வரவேற்று பேசினார். சங்க ஆலோசகர் யாக்கோப்துரைராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில பொதுச் செயலாளர் ராமலிங்கம், மாநில பொருளாளர் அறிவழகன், மாநில அமைப்பு செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் சஞ்சய் காந்தி, பொருளாளர் பிரகதி, மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழகத்திலுள்ள அனைத்து விடுதிகளிலும் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் , ஒரு விடுதிக்கு குறைந்த பட்சம் 2 சமையலர்கள் நியமிக்க வேண்டும் , புதிய பென்சன் முறையை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் , துப்புரவு பணியாளர் அனைவருக்கும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கல்வி தகுதி உள்ள சமையலர், காவலர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் போன்ற பணி வழங்கிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில தலைவர் கோபால் சிறப்புரையாற்றினார். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன் நன்றி கூறினார். #tamilnews
    ஜோலார்பேட்டையில் விடுதியில் மாணவர்களிடம் இருந்து நன்கொடையாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை வசூலித்த வார்டனை சஸ்பெண்ட் செய்து உதவி கலெக்டர் உத்தரவிட்டார்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகில் ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி உள்ளது. இதில் ஜவ்வாதுமலை, புதூர் நாடு, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து 35 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். விடுதியின் வார்டனாக ஜோலார்பேட்டையை சேர்ந்த பாஸ்கரன் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் விடுதியில் சுகாதாரமில்லாத உணவுகள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதோடு அடிப்படை வசதிகள் இல்லாததால் நோய் தொற்று அபாயம் இருப்பதாக திருப்பத்தூர் உதவி கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மாணவர்கள் மின் விசிறி, மின் விளக்கு இல்லாமல் இருளில் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. சமையல் அறைக்கு சென்று ஆய்வு செய்தபோது காலையில் சமைத்த உணவையே இரவுக்கும் பயன்படுத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து நேற்று உதவி கலெக்டர் தலைமையில் நகராட்சி கமி‌ஷனர் விசாலாட்சி, ஆதிதிராவிட நல (தனி) தாசில்தார் குமரேசன் ஆகியோர் வார்டனிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவும், அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது. மேலும் திருமண நாட்களில் விடுதியில் உணவு சமைக்கப்படாமல் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து உணவை எடுத்து வந்து மாணவர்களுக்கு கொடுத்தது தெரியவந்தது.

    மேலும் விடுதி வார்டன் பாஸ்கரன் மாணவர்களிடம் இருந்து இதுவரை நன்கொடையாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை வசூலித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பாஸ்கரனை சஸ்பெண்ட் செய்து உதவி கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். #tamilnews
    பேராசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்த மாணவியை விடுதியைவிட்டு வெளியேற்றி கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி உத்தரவிட்டுள்ளார். #ChennaiStudentharassment #AgriCollege
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அரசு வேளாண்மை கல்லூரியில் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவி ஒருவர் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி படிக்கும் தனக்கு, உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் கூறினார்.

    பாலியல் தொல்லைக்கு விடுதி வார்டன்களாக உள்ள கல்லூரி பேராசிரியைகள் புனிதா, மைதிலி ஆகியோர் செயல்பட்டதாக மாணவி முன்வைத்த குற்றச்சாட்டுகள் சர்ச்சையை பெரிதுப்படுத்தி இருக்கிறது. மாணவியுடன், பேராசிரியைகள் பேசிய ஆடியோ வெளியானது.

    இதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மகிழேந்தி முன்னிலையில், பாதிக்கப்பட்ட மாணவி நேற்று முன்தினம் ஆஜராகி, தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.

    இதையடுத்து, நீதிபதி மகிழேந்தி வேளாண் கல்லூரிக்கு நேரில் சென்று கல்லூரி முதல்வர், உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியைகள், மாணவ, மாணவிகள், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினார்.

    மாணவியின் 40 பக்க வாக்குமூலத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட எஸ்.பி. சிபிசக்கரவர்த்தியிடம் மனு அளிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அவர் நேற்று கல்லூரிக்கு சென்று 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து, 2-வது நாளாக நேற்று மாலை சுமார் 3 மணி நேரம் மாணவியிடம் நீதிபதி மகிழேந்தி வாக்குமூலம் பெற்றார். இதனிடையே, கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவிக்கு எதிராக வாணாபுரம் போலீசில் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    மாணவிக்கு எதிராக உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் மற்றும் பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகிய 3 பேர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப்புகாரில் மாணவியின் பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை.

    எங்கள் பெயர்களுக்கு களங்கம் ஏற்படுத்தவே, இது போன்ற புகார்களை கூறி உள்ளார். கல்லூரியில் சக மாணவ, மாணவிகளுடைய 200-க்கும் மேற்பட்ட ஐ.டி. கார்ட்டுகள் மற்றும் பென்சில், பேனா, ரப்பர் போன்ற பொருட்களை மாணவி திருடியுள்ளார்.

    இதுபோன்று பல திருட்டு சம்பவங்களில் மாணவி ஈடுபட்டுள்ளார். கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக பொய் புகார் தெரிவித்த மாணவி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

    இந்த புகார் குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 2-வது நாளாக இன்று காலையும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, மாணவி வெளியிட்ட ஆடியோ மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார்.

    இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா கூறியதாவது:-

    கல்லூரியில் மாணவிகள் மற்றும் பேராசிரியர்களிடம் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை அறிக்கை எஸ்.பி.யிடம் தாக்கல் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    விடுதியில் போலீசார் ஆய்வு செய்தபோது, மாணவி தங்கியிருந்த அறையின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருந்தது. தனி அறையில் தங்க வைக்கப்பட்டு மாணவி தனிமைப்படுத்தப்பட்டார். சக மாணவிகள் உள்பட யாரிடமும் பேசாதபடி மன உளைச்சல் ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

    இரவு நேரத்தில் உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் விடுதிக்கு வந்து சென்றதாகவும், அப்போது தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் புகாரில் மாணவி கூறி இருந்தார். தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு மாணவியை தனிமைப்படுத்தியது ஏன்? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    மேலும், கோவையில் இருந்து வந்த வேளாண்மை பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவும் 2-வது நாளாக கல்லூரி முதல்வர், பேராசிரியைகள், மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, பாலியல் புகாருக்குள்ளான உதவிப்பேராசிரியர் தங்க பாண்டியனை அதிரடியாக சஸ்பெண்டு செய்தும், மாணவியை விடுதியைவிட்டு வெளியேற்றியும் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.

    இதுபற்றி, வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அளித்த பேட்டியில்:-

    ஒரு மாணவியால் ஒட்டுமொத்த கல்லூரிக்கும் இழுக்கு ஏற்பட்டுள்ளது. உண்மை நிலவரம் விரைவில் தெரியவரும் என்றார். #ChennaiStudentharassment #AgriCollege

    விடுதிக்குச் சென்றதும் நம் அறை நண்பராக யாரைப் பெறுகிறோம் என்பது முக்கியம். நம்மினும் அறிவாளியாக, உழைப்பவராக, உன்னதப் பழக்கங்கள் உள்ளவராக அமைந்தால் அது நற்பேறு.
    வீட்டிலிருந்து விடுதிக்குப் புலம் பெயர்ந்த இளம் நண்பர்களே,

    எனக்கு சோர்வு ஏற்படும்போதெல்லாம் கல்லூரி மாணவர்களைச் சந்தித்து அவர்கள் உற்சாகத்தில் உரசி புதுப்பித்துக்கொள்கிறேன். இந்தப் பதின்மப் பருவம் ஆற்றல்களின் அணிவகுப்பு, ஊக்கத்தின் ஊற்று, நம்பிக்கையின் நாற்றங்கால், வசந்தங்களின் வரவேற்புக்கூடம்.

    நான் கண் பார்க்க மலர்ந்திருக்கும் அத்தனை மொட்டுக்களும் மலராக பூத்துக் குலுங்க வேண்டும், அவற்றின் நறுமணம் நான்கு திசைகளிலும் வீசி நாசிகளை மகிழ்விக்க வேண்டும் என எண்ணுபவன். இந்தப் புல்லாங்குழல்கள் அனைத்தும் இனிய இதழ்களில் இசையை அரங்கேற்ற வேண்டும் என்று ஆசைப்படுபவன். இந்த அத்தனை திறமைகளும் சிந்தாமல் சிதறாமல் சிகரத்தை அடைய வேண்டும் என்று எதிர்பார்த்து ஏங்குபவன்.

    இதனால் ஏற்படும் ஏக்கத்தின் காரணமாகவும், எல்லை கடந்த அன்பின் காரணமாகவும் என் எழுதுகோலிலிருந்து உனக்கான கடிதங்கள் கசிந்து கொண்டேயிருக்கின்றன. நான் ஓடிச்சென்று உயர்ந்த பரிசை அடைந்த எக்காளத்தில் எழுபவை அல்ல அவை. தாவிக்குதித்துச் சென்று தடுமாறி விழுந்ததால் ஏற்பட்ட காயங்களின் காரணமாக உண்டான அனுபவத்தால், உனக்கு அப்படி அடிபடக் கூடாது என்கிற அனுசரணையே அவற்றை எழுதத் தூண்டுகின்றன. என் தழும்புகள், நீ பெறும் தங்கப் பதக்கங்களுக்கு அச்சாரமாகட்டும் என்ற அக்கறையே இந்த மடலுக்குக் காரணம்.

    வீடு என்பது கூடு என்பது புரியாமல் கூண்டு என நினைத்து விடுதிக்குச் சென்றதும் வானமே கிடைத்ததைப்போல மயக்கம் ஏற்படுவது இயல்பு. எங்களுக்கும் அது தொடக்கத்தில் ஏற்பட்டது. விழிப்புணர்வு இருந்திருந்தால் வானம் என்பது கண்களுக்குத் தெரியாத கணக்கற்ற கூடுகளின் மஞ்சம் என்கின்ற புரிதல் நிகழ்ந்திருக்கும்.

    அது புரியாத காரணத்தால் கைகளில் கிடைத்த சுதந்திரத்தை கால்களின் அடியில் போட்டு மிதித்த அனுபவம் எங்களுக்குண்டு. இழந்தவற்றைப் புரிந்துகொள்வதற்குள் காலம் நம்மை கடந்து சென்று விடுகிறது. தொடக்கத்திலேயே எங்கள் தோள்மீது கை போட்டு தோழமையுடன் யாரேனும் எச்சரித்திருந்தால், அந்த விடுதி வாழ்க்கையும் சடுதியில் முடிந்து விடும் என்று தெரியாமல் வீணாக்கியிருக்க மாட்டோம்.

    விடுதி வாழ்க்கை அற்புதமான வாய்ப்பு. விடுதியில் தங்கும்போது சுயக்கட்டுப்பாட்டைக் கற்றுக்கொள்கிறோம். கட்டுப்பாட்டுக்கும், கட்டுப்படுவதற்கும் வேறுபாடு இருக்கிறது. போக்குவரத்துக் காவலர் இருக்கிறார் என்பதால் சமிக்ஞையில் காத்திருப்பது கட்டுப்படுவது. இல்லாவிட்டாலும் பச்சை விளக்குக்காக நிதானிப்பது கட்டுப்பாடு. அனைத்துப் புறக் கட்டுப்படுதல்களும் மீறக் கூடியவை.

    நாமே நமக்கு அரணமைத்துக்கொள்ளும் அகக்கட்டுப்பாடே தூய்மையின் துலாபாரம். அதற்கு முதிர்ச்சி தேவை. அதை விடுதி வாழ்க்கை கற்றுத் தரும்.

    விடுதியில் இணைந்ததும் சிறகுகள் முளைத்ததைப்போல சிந்தனை ஏற்படுவது உண்டு. அந்தச் சிறகுகள் இமயத்தை அளக்க வலம் வருவதற்கா அல்லது இருட்டுக் குகைக்குள் அழுகிய எலும்புகளைப் பொறுக்கித் தின்பதற்குத் தேடிச் செல்வதற்கா என்கிற வரையறையே விடுதி வாழ்க்கையின் வெற்றியைத் தீர்மானிக்கிறது.

    விடுதிக்குச் சென்றதும் நம் அறை நண்பராக யாரைப் பெறுகிறோம் என்பது முக்கியம். நம்மினும் அறிவாளியாக, உழைப்பவராக, உன்னதப் பழக்கங்கள் உள்ளவராக அமைந்தால் அது நற்பேறு. மல்லிகைக்கருகில் வைக்கும் மண்ணுருண்டையும் மணப்பதைப்போல அத்தகைய நண்பரின் சமீபம் நம்மை மெருகேற்றி விடும். தூக்கம் கண்களைத் தழுவினாலும் அவர் படிப்பதைப் பார்த்து முகத்தைக் கழுவி விழிகளை அகல விரித்து புத்தகங்களுக்குள் புகுந்து கொள்வோம். அவர் வாசிக்கும் புத்தகங்கள், நம்மையும் பாடத்தைத் தாண்டி அறிவுலகத்தை விசாரிக்கத் தூண்டும்.

    அவர் அறையில் மாட்டி வைத்திருக்கும் உலக வரைபடம் நம்மையும் நாடுகளின் இருப்பிடத்தை நன்றாக அறிய வைக்கும். அவர் மேற்கொள்ளும் பொழுதாக்கம் நாமும் ஒன்றைக் கையகப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தைத் தோற்றுவிக்கும். நமக்குப் புரிந்த பாடத்தை அவருடன் கலந்துரையாடும்போது அது மேகமூட்டம் விலகிய வெண்ணிலவாய் வெளிச்சத்தை அளிக்கும்.

    நல்ல நண்பர்கள் அறையில் கிடைத்தால் அவர்கள் நம்மை செதுக்கும் சிற்பியாய் இருந்து விடுகிறார்கள். நம்மிடம் இருக்கும் மேன்மையைப் புரிய வைக்கிறார்கள். அவர்கள் சொல்லாமலேயே நம் பலவீனங்கள் நமக்குப் புலப்படத் தொடங்குகின்றன. நம் பலம் தெரிந்தால் பலவீனங்கள் தாமாகவே தென்படத் தொடங்கும். ஒத்துக்கொள்கிற பலவீனங்கள் நம்மிடமிருந்து ஒதுங்கிக்கொள்ள முயற்சி செய்கின்றன.



    விடுதிக்குச் சென்றதும் பெறுகிற மற்ற நண்பர்களும் முக்கியம். அவர்கள் நம் வாழ்க்கையை வடிவமைக்கிறார்கள். வகுப்புக்குச் செல்லாமல் ஊர் சுற்றுபவர்களை நண்பர்களாகத் தேர்ந்தெடுத்தால் நாமே நமக்கு மேதாவியாகத் தெரியத் தொடங்குவோம். தீய பழக்கங்களுடன் திரிபவர்களை நண்பர்களாகப் பெற்றால் அது அழுகிய ஓர் உருளைக்கிழங்கு, கூடையிலிருக்கும் மற்றவற்றையும் அழுகச் செய்வதுபோல, நம் அத்தனை நற்குணங்களையும் தீய்த்து விடும்.

    வசதியான நண்பர்களைப் பெறுபவன் அவர்களோடு போட்டிபோடத் தொடங்குகிறான். அவன் கவுரவத்திற்காக கடன் வாங்குகிறான். நோட்டுப் புத்தகம் வாங்குவதாகச் சொல்லி நோட்டுகளை வீட்டிலிருந்து வாங்கி வருகிறான். அவன் நன்றாகப் படிக்கட்டும் என்று பெற்றோர் இன்னும் அதிகமாய் வியர்வையைச் சிந்துகிறார்கள்.

    நீ உன் வசதிக்கேற்ப நண்பர்களைத் தேர்ந்தெடு. வீண் செலவு செய்கிறவர்கள் உன்னை ஊதாரியாக்கி விடுவார்கள். நாளைய வருமானத்தில் செலவு செய்பவன் ஊதாரி. நாளை என்பது இல்லவே இல்லை. அது வருகிறபோது இன்றாகவே இருக்கிறது.

    விடுதி வாழ்க்கையில் நேரம் விரயமாக வாய்ப்பு அதிகம். அதையே நேர முதலீடாக மாற்றவும் முடியும். வைராக்கியம் என்கிற வைரம் இருந்து விட்டால் அந்த ஊசியால் எந்தத் தடைகளையும் அறுத்தெறிந்து விடலாம். வீட்டில் எழுப்புவதற்குப் பெற்றோர், குளிக்கச் சொல்ல ஒருவர், சாப்பிட வற்புறுத்தத் தாய், படிப்பைக் கண்காணிக்கத் தந்தை, அவ்வப்போது தேநீர் தயாரித்துக் கொடுக்கவும் உற்சாகமூட்டவும் இல்லத்தினர். இவையெல்லாம் விடுதியில் சாத்தியமில்லை. நம்மை நாமே கண்காணித்துக்கொள்ள வேண்டும். அத்தகைய நெறியை மேற்கொண்டால் உழைப்பது சுகமாகி விடும். படிப்பது தவமாகி விடும். பண்போடு இருப்பது பண்டிகையாகி விடும். நேர்மையுடன் இருப்பது உடலின் அம்சமாகி விடும்.

    விடுதி வாழ்க்கையில் சுத்தமும், சுகாதாரமும் மிகவும் முக்கியம். நாங்கள் விடுதியிலிருக்கும்போது சில மாணவர்கள் மாதமொரு முறை குளியலறைக்குச் சுற்றுப்பயணம் செய்வதுண்டு. இன்னும் சிலரையோ பொறுக்க முடியாமல் மற்ற மாணவர்கள் வலுக்கட்டாயமாக குளியலறையில் தள்ளுவதுண்டு. தினமும் இரு முறை குளிப்பது அவசியம். கழிவறைகளைப் பயன்படுத்தும்போது நன்றாகச் சுத்தப்படுத்திவிட்டு பயன்படுத்து. கைகளை உண்பதற்கு முன்பும், காலைக்கடன்களைக் கழித்த பிறகும் தூய்மை துலங்க சுத்திகரிப்பது அவசியம்.

    சில மாணவர்கள் இளங்கலைப் படிப்பு முடிக்கும்வரை படுக்கை விரிப்பைத் துவைக்காமல் இருப்பதுண்டு. அது உடலில் பூஞ்சான் தொற்றுகளை ஏற்படுத்தி விடும். இன்னும் சிலரோ சோம்பலின் காரணமாக உள்ளாடைகளைக்கூட சலவைக்குப் போடுவதுண்டு. அது பொது இடத்தில் துவைக்கப்படுவதால் தொற்று நோய்கள் நம் உடலில் பற்று வைக்க வாய்ப்பு ஏற்படுத்தி விடும். அன்றைய உள்ளாடைகளை அன்றே கசக்கு. காலையிலும், இரவு படுக்கச் செல்லும் முன்பும் பற்களைத் துலக்கு.

    சிலர் தாமதமாக எழுவதால் காலையில் குளிக்காமல் வகுப்புகளுக்குச் செல்வதுண்டு. இரவு எப்போது படுப்பது என்பதற்குத் திட்டவட்டமாக நேரத்தை முடிவு செய்து பிசகாமல் பின்பற்று. ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம். தூக்கத்தில் படித்தவை திடப்படுகின்றன. கனவுகளில் செய்முறைகள் வலுவாகின்றன. சரியாகத் தூங்காவிட்டால் நீ படித்தவை பாதியிலேயே போக்குவரத்து மறியல் செய்து விடும் என்பதைப் புரிந்துகொள்.

    பல விடுதி மாணவர்கள் இரவு வெகு நேரம் விழித்திருந்து கேளிக்கைகளிலும், அரட்டைகளிலும் நேர விரயம் செய்வார்கள். நேரம் கழித்து எழுந்து அவசர அவசரமாக வகுப்புக்கு விரைவார்கள். அந்தப் பரபரப்பில் பலர் காலைச் சிற்றுண்டியைத் தவற விடுவார்கள். காலை உணவு உடலுக்கு முக்கியம். நம் மூளை நாம் உண்பதில் 20 சதவீதத்தை முதலில் கிரகித்துக்கொள்கிறது. அதற்கு தொடர்ந்து குளுகோஸ் தேவை. அதை சுயநல மூளை, என்று சொல்வார்கள். உடல் செயல்படவே அது சுயநலமாக நடந்து கொள்கிறது.

    காலை உணவைத் தவற விட்டால் மூளை சோர்வடைந்து படிப்பவையும், கவனிப்பவையும் வழிதவறி விடுகின்றன. காலை உணவை உண்ணாமல் மதியம் உண்டால் உடல் பருமனாகி விடும் அபாயமும் இருக்கிறது. குறிப்பாக, மாணவிகள் காலை உணவை முறையாக அணுகுவதில்லை. சிற்றுண்டியில் நிறைய மாவுச்சத்தும், புரதச்சத்தும் இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும். இதை மனதில் வைத்து ஒருபோதும் காலை உணவைத் தவிர்க்காதே.

    பணக்கார மாணவர்கள் பகட்டுக்காக கல்விபெற வருவார்கள். அவர்கள் கைகளில் ஐநூறு ரூபாய்க் கட்டு தாராளமாகப் புழங்கும். அதைப் பார்த்து சூடுபோட்டுக் கொண்ட பூனையாய் இருந்து விடாதே.

    நீ ஒவ்வொரு ரூபாயைச் செலவழிக்கும்போதும் ஒரு முறை பெற்றோரைக் காட்சிப்படுத்து. அவர்கள் கண்ணீரை நினைத்துப் பார். ரத்தம் சுண்டி அவர்கள் அனுப்பும் பணத்தை பொறுப்புடன் செலவழிப்பதே நல்ல மகனுக்கு இலக்கணம்.

    சில மாணவர்கள் தங்கள் படிப்பைப் படிக்கும் நண்பர்களுடன் மட்டுமே பழகுவார்கள். நீ அப்படி இருக்காதே. நீ அறிவியல் படித்தால் ஆங்கில இலக்கியம் படிக்கிறவர்களையும் நண்பர்களாகக் கொள். அவர்களிடம் மில்டனைப் பற்றியும், ஷேக்ஸ்பியரைப் பற்றியும், ஷெல்லியைப் பற்றியும் அறிந்து கொள். அவற்றில் ஓரிரண்டு இலக்கியங்களை உபரி நேரத்தில் வாசித்து மகிழ். தமிழ் இலக்கியச் சான்றோர்களையும் நட்பாக்கு. அவர்கள் மூலம் கம்பரையும், இளங்கோவையும், பாரதியையும் பயில். மனவியல் நண்பர்களிடம் பழகி நடத்தையைச் சீரமைக்கக் கற்றுக்கொள். நீ அயல் மகரந்தச்சேர்க்கை நிகழ்த்தும் அறிவுக்கூடமாய்க் கட்டமைத்தால், உன்னிடமிருந்து வீரிய விதைகள் தெறித்து விழும்.

    விடுதியில் சேர்ந்ததும் உன் வாழ்க்கைக்கான நோக்கத்தை நிர்ணயித்துக்கொள். படித்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விடாதே. உனக்கான பணி எது என்பதை வரையறை செய். உன் தேடலைத் தொடங்கு.

    போட்டித் தேர்வு எழுத வேண்டுமென்றால் முதலாண்டில் இருந்தே முனைப்புடன் மூழ்கு. உன் கல்லூரி நூலகம் உன் விடுதி அறையின் நீட்சியாக இருக்கட்டும். உன் பேராசிரியர்கள் காட்டும் பேரொளியில் உன் சந்தேக இருள் விலகும். உன் அறிவுச் சுடர் இன்னும் பிரகாசமாக ஒளி வீசும்.

    விடுதி வாழ்க்கையிலிருக்கும்போதே உலகின் தலைசிறந்த நிறுவனங்களுக்கு எவ்வாறு நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்பதை அறிந்துகொள். ஆங்கிலம் வரவில்லை என முடிவு செய்யாதே. தினமும் ஐந்து சொற்களை நன்றாகக் கற்று பயன்படுத்து. இணையத்தில் ஆங்கில உரைகளைக் கேள். சம ஆர்வமுள்ள நண்பர்களுடன் ஆங்கிலத்தில் பேசு.

    இன்று உலகின் பொது மொழியாக ஆங்கிலம் உருவாகி விட்டதை மறுதலிப்பதால் நமக்கே நஷ்டம். ஆனால், அதற்காக தாய்மொழியாம் தமிழை உதாசீனப்படுத்தாதே. பண்பாட்டை ஆழமாகப் பயில, வரலாற்றை உணர, வீரத்தைக் கற்க, விருந்தோம்பலைப் பேண, துணிச்சலை வளர்த்துக்கொள்ள தமிழிலக்கியத்தைப் பயில். ஆங்கிலம் என்கிற வெளிநாட்டுக் குடையை வேண்டியபோது விரித்துக்கொள்ளவும், தமிழ்க் கூரையின் அடியில் தங்கவும் பழகு.

    விடுதி வாழ்க்கையில் விருந்தினர்கள், வீட்டுப் பணிகள் போன்ற கவனச் சிதறல்கள் இல்லை. நமக்கான நேரம் நமக்கு மட்டுமே. அதை முழுமையாகப் பயன்படுத்து. என்னதான் கைபேசி வந்தாலும் அது கடிதத்திற்கு ஈடு இணை ஆகாது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பெற்றோருக்கு மறக்காமல் முத்துமுத்தான கையெழுத்தில் கடிதமெழுது. அவர்கள் அதை முப்பது முறை வாசித்து மகிழ்வார்கள் என்பதை மறக்காதே.

    தினமும் இரவு, அன்று நாள் முழுவதும் என்ன செய்தோம் என்ற குறிப்புகளை எழுது. அது உன்னை இன்னமும் மேன்மைப்படுத்த உதவும். கல்லூரியில் படிக்கும்போது கைப்படத் தயாரிக்கும் குறிப்புகளைத் தூக்கியெறிந்து விடாதே. அவற்றைப் பத்திரப்படுத்து. பின்னர் அவை போட்டித் தேர்வுகள் எழுத மிகவும் உதவியாக இருக்கும்.

    சகல நேரமும் பாடமே வாழ்வென இருக்காமல் தினமும் உடற்பயிற்சிக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கு. விடுதிச் சாப்பாடு வீணாகக் கூடாது என போட்டி போட்டு சாப்பிடாதே. அளவான சாப்பாடு வளமான வாழ்க்கைக்குத் திறவுகோல் என்பதைத் தெரிந்து கொள்.

    விடுதி முடிந்து வருகிறபோது முதிர்ச்சியடைந்த, ஞானம் பெற்ற மனிதனாக உன் வீட்டிற்கு நீ வர வேண்டும் என்பதற்கே இந்த கண்டிப்புக் கடிதம்.
    ×