search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heart attack"

    • தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை சாலியத் மாரடைப்பால் இன்று காலமானார்.
    • இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

    சாலியத்:

    மங்களூரு கர்நாடக மாநிலம் பெல்தங்கடி தாலுக்காவில் உள்ள படங்கடி பொய்குடே பகுதியைச் சேர்ந்த ஆதம் மற்றும் ஹவ்வம்மா தம்பதியரின் மகள் சாலியத்(24). தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை.

    சாலியத் தேசிய கைப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம், சீனியர் தேசிய தென் மண்டலப் போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் ஜூனியர் தேசிய போட்டியில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் கர்நாடக மாநில அணியை இரண்டாம் இடத்திற்கு கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தார்.

    இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இவர் கடந்த ஒரு வருடமாக சிக்கமகளூரில் உள்ள கணவர் வீட்டில் தங்கி இருந்தார்.

    இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து உடனடியாக மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குதிரையேற்ற கிளப்பில் 50 வயது நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு.
    • மாரடைப்பு சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடந்துள்ளது.

    ஜப்பான், சிபா நகரில் உள்ள வகாபா- குவில் உள்ள குதிரையேற்ற கிளப்பில் 50 வயது நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். இதனை மற்றவர்கள் கவனிக்காத நிலையில், அங்கிருந்த 5 வயதான குமி என்கிற மங்கிரோல் வகை நாய் இடைவிடாமல் குரைத்து கவனத்தை ஈர்த்தது.

    அங்கிருந்தவர்கள் நாயின் அருகில் சரிந்து கிடந்த நபரை பார்த்து அதிர்ச்சியடைந்து, அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த நபர் சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி உயிரை காப்பாற்றப்பட்டார்.

    இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடந்தது. இந்நிலையில், மாரடைப்பால் சரிந்து கீழே விழுந்த நபரின் உயிரை காப்பாற்றிய குமு நாய்க்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொரோனாவால் ரத்தம் உறைகிற போக்கு அதிகரிக்கிறது.
    • தினமும் 6 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும்.

    சிம்லா :

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி 4 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வந்து விடவில்லை. புதிது புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றிப் பரவி வருகின்றன.

    இந்த நிலையில, கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் கூறி இருப்பதாவது:-

    சமீபத்திய உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சிகள், கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், இதய நோய்கள் அதிகரிக்கிற ஆபத்து இருப்பதாக கூறுகின்றன.

    கொரோனாவால் ரத்தம் உறைகிற போக்கு அதிகரிக்கிறது. இது மாரடைப்பு ஆபத்தை கூட்டுகிறது.

    நாட்டில் கடந்த 2 மாதங்களாக இதயம் செயலிழந்துபோவதால் திடீர் திடீரென ஏற்படுகிற இறப்புகள் அதிகரித்து இருக்கின்றன.

    இதில் இரண்டு வகையான இறப்புகள் நேரிடுகின்றன. ஒன்று, கடுமையான மாரடைப்பால் மரணம் நேருகிறது. குறிப்பாக சற்று வயதானவர்கள், பாரம்பரிய இதய நோய் ஆபத்து காரணி கொண்டவர்கள். அடுத்து மாரடைப்பின்றி, வேறு காரணங்களால் மரணம் ஏற்படுகிறது. இதயநோய் ஆபத்து காரணிகள் இல்லாமல் ஆரோக்கியமான நபர்களில் அரிதான நிகழ்வுகளாக இந்த மரணம் நேருகிறது.

    முதல் பிரச்சினையை இ.சி.ஜி., 2டி எக்கோ மற்றும் டி.எம்.டி. போன்ற பாரம்பரிய தடுப்பு இதய சோதனைகள் மூலம் கண்டறிய முடியும். இரண்டாவது பிரச்சினையைக் கண்டறிய நீண்ட கால இ.சி.ஜி. கண்காணிப்பு, மின் இயற்பியல் சோதனை மற்றும் மரபணு சோதனை போன்ற பல்வேறு கண்டறிதல் வழிமுறைகள் தேவைப்படுகின்றன.

    முன் எச்சரிக்கை நடவடிக்கைகளாக 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை மற்றும் உண்ணாவிரத கொழுப்பு சோதனையை மேற்கொள்ள வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எலக்ட்ரோ கார்டியோகிராம், எக்கோ கார்டியோகிராம் மற்றும் 'டிரெட்மில்' சோதனை உள்பட வருடாந்திர இதய பரிசோதனை செய்ய வேண்டும்.

    இளைஞர்கள் அதிரடியாக பழக்கம் இல்லாத உடற்பயிற்சிகளில் தீவிரமாக இறங்குவதற்கு தேவையில்லை.

    ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். உடல் எடையை பராமரித்து வரவேண்டும். புகைப்பிடித்தல் கூடாது. மது அருந்துவதை குறைக்கவேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். தினமும் 6 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும்.

    யாருக்கேனும் அதிக மன அழுத்தம், நீரிழிவு, அதிகளவில் கொழுப்பு இருந்தால் அவற்றைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    கொரோனா தொற்றுக்கு பின்னர் மாரடைப்பு, இதயநோயால் இளைஞர்களில் சம்பவிக்கிற மரணம் தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு சுகாதாரத்துறை அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மக்களிடையே பீதியைக் குறைப்பதற்கு ஒவ்வொரு திடீர் மரணம் தொடர்பாகவும் குழு அமைத்து ஆராய வேண்டும் என்றும் டாக்டர் நரேஷ் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • சர்வதேச விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் பயணி ராஜாமுகமதுவை பரிசோதனை செய்தனர்.
    • உடலை பிரரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆலந்தூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா முகமது (வயது66). இவர் புனித பயணமாக மெக்காவிற்கு தனது குழுவினருடன் சென்று இருந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் இன்று அதிகாலை பக்ரைனில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தனர்.

    நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, ராஜா முகமதுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதுகுறித்து விமான பணிப்பெண்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ராஜா முகமதுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே இன்று அதிகாலை 3.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது. அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர், பயணி ராஜாமுகமதுவை பரிசோதனை செய்தனர். ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து இருப்பது தெரியவந்தது.

    இதனால் அவருடன் வந்திருந்த குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்து போன ராஜாமுகமதுவின் உடலை விமான நிலைய போலீசார் மீட்டு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த விமானம் மீண்டும் அதிகாலை 4.10 மணிக்கு சென்னையில் இருந்து பக்ரைனுக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும். இதில் பயணம் செய்ய 192 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர்.

    பயணி இறந்ததை தொடர்ந்து அந்த விமானத்தை ஊழியர்கள் கிருமிநாசினிகள் தெளித்து முழுமையாக சுத்தப்படுத்தினர். இதனால் விமானம் சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாக காலை 6.40 மணிக்கு பக்ரைனுக்கு புறப்பட்டுச் சென்றது.

    • வேல்முருகன் விழுப்புரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
    • காலை வேல்முருகனுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக போக்குவரத்து குடியிருப்பைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 50) இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் நேற்று பணி முடிந்து இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை வேல்முருகனுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் வலி தாங்காமல் வேலுமுருகன் அலறினார்.

    இவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஆம்புலன்சில் வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் இன்று கைது செய்தனர்.
    • திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    சென்னை பரங்கிமலையில் மின்சார ரெயிலில் இருந்து மாணவியை தள்ளிவிட்டதில், கழுத்து துண்டாகி உயிரிழந்த சம்பவம் நேற்று சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சதீஷ் என்ற இளைஞர் மாணவியை காதலித்து வந்த நிலையில், காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க ரெயில்வே போலீசார் சார்பில் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.

    பின்னர், கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் இன்று கைது செய்தனர்.

    இந்நிலையில், மகள் இறந்த சோகத்தில் இருந்த மாணவியின் தந்தையும் மரணமடைந்துள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மகள் இறந்த தகவல் அறிந்த தந்தை துக்கம் தாங்காமல், உறவினர்களிடம் புலம்பிக் கொண்டே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இருவரின் உடல்களும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை மகள் மற்றும் தந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

    • குஜராத் மாநிலத்தில் கார்பா நடனம் ஆடிக் கொண்டிருந்த 21 வயது இளைஞர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • விரேந்திர சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    அகமதாபாத், குஜராத்தில் நவராத்திரியை முன்னிட்டு பாரம்பரிய கார்பா நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், விரேந்திர சிங் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் நடனமாடி கொண்டிருந்தார்.

    அப்போது அந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அங்கு, விரேந்திர சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • ஆதி கைலாஷ் யாத்ரீகர்களின் 11-வது குழுவுடனான பயணத்தை முடித்துக் கொண்டபோது சோகம்.
    • மருத்துவ உதவி அவரை அடையும் முன்பே பெண் இறந்துவிட்டார்.

    மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் யாத்ரீகர் ஆதி கைலாஷ் யாத்திரையின் 11வது குழுவுடன் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வரும் வழியில் கஞ்சி முகாமிற்கு வந்தபோது பெண்ணிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து பித்தோராகர் கண்காணிப்பாளர் லோகேஷ்வர் சிங் கூறியதாவது:-

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசிக்கும் ரமேஷ் தத்தாத்ரேயா கடம் என்பவரின் மனைவி ஷீத்தல் ரமேஷ் கடம் (57). இவர் நேற்று இரவு தனது கணவருடன் கஞ்சி முகாமுக்குத் திரும்பிய பிறகு படபடப்பாக உணர்ந்துள்ளார். மருத்துவ உதவி அவரை அடையும் முன்பே பெண் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.

    ஆதி கைலாஷ் யாத்ரீகர்களின் 11-வது குழுவுடனான பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்த நாள் ஓம் பர்வத்தை பார்வையிட குழு தயாராக இருந்தது. இந்நிலையில், பெண் யாத்ரீகர் உயிரிழந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈமச்சடங்கு நடத்த மாரடைப்பால் இறந்தவர்களுக்கு விரைவாக இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ministervijayabaskar #deathcertificate

    சென்னை:

    சட்டசபையில் இன்று தோப்பு வெங்கடாசலம் (அ.தி.மு.க.), நேரு (தி.மு.க.) பேசும்போது, வீட்டில் மாரடைப்பால் உயிரிழப் போருக்கு இறப்பு சான்றிதழ் உடனடியாக கிடைக் காததால் பல்வேறு பிரச்சினை ஏற்படுகிறது. உடலை எரிப்பதற்கு கூட இடுகாட்டில் சான்றிதழ் கேட்பதால் சிக்கல் ஏற்படுகிறது. எனவே விரைவாக இறப்பு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அமைச்சர் விஜயபாஸ்கர்:- தற்போது பிறப்பு சான்றிதழ் ஆன்லைன் மூலமாக வழங்கப்படுகிறது. இதற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அதுபோல் வீட்டில் இறப்பவர்கள் மாரடைப்பால் இறந்தால் சட்ட பிரச்சினைகள் வரும் என்பதால் தான் தாமதமாகிறது. அதற்கு நல்ல தீர்வு காணும் வகையில் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். #ministervijayabaskar #deathcertificate 

    பழனி கோவிலுக்கு வந்த தஞ்சாவூர் பக்தர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
    பழனி:

    தஞ்சாவூரை சேர்ந்தவர் தனசேகரன் (வயது40). முருகபக்தரான இவர் நேற்று பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். நேற்று இரவு மலைக்கோவிலில் தங்கரத புறப்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    அதன்பின்னர் கோவில் அருகே நின்று செல்பி எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார். படிப்பாதை வழியாக வந்துகொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவர் மயங்கி விழுந்தார்.

    அருகில் இருந்த பக்தர்கள் அவரை தூக்கி ஆம்புலன்சில் ஏற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே தனசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பழனிக்கு வந்து தனசேகர் உடலை பெற்றுச் சென்றனர்.
    திருபுவனை அருகே நோய் கொடுமையால் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருபுவனை:

    திருபுவனை அருகே குச்சிபாளையம்- திருக்கனூர் சாலையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவகி வயது (60). இவர்களுக்கு ஆனந்தன் என்ற மகன் உள்ளார். கால் ஊனமுற்ற தேவகி கடந்த சில மாதங்களாக கால் வலியினால் அவதி அடைந்து வந்தார். இதற்காக மருந்து- மாத்திரையும் சாப்பிட்டு வந்தார். ஆனால் வலி குறையவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன் ஆனந்தன் ஆகியோர் கூலிவேலைக்கு சென்று விட்ட நிலையில் தேவகிக்கு நோய் கொடுமை அதிகமானதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த தேவகி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் அவர் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார்.

    மாலையில் வேலைமுடிந்து வீட்டுக்கு வந்த கிருஷ்ணமூர்த்தி அங்கு மனைவி தேவகி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, ஏட்டு ஜெயதேவன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் வில்லியனூர் மெயின்ரோடு கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது59. இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணவேணியின் மூத்த மகனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார். மூத்த மகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கிருஷ்ணவேணி மனவருத்தத்துடன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிருஷ்ணவேணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினாயகம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பரமக்குடியில் சென்னை போலீஸ்காரருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    ராயபுரம்:

    சென்னை ஆர்.கே.நகர் போலீசில் குற்றப்பிரிவு எழுத்தாளராக பணிபுரிந்தவர் பாலகிருஷ்ணன் (35). இவர் பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

    அவரது அண்ணன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தங்கியுள்ளார். அவரைப் பார்க்க நேற்று புறப்பட்டு சென்றார். இரவு 9.30 மணி அளவில் பரமக்குடி சென்ற அவர் பஸ்சில் இருந்து இறங்கினார்.

    அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் மயங்கிய அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    மரணம் அடைந்த போலீஸ்காரர் பாலகிருஷ்ணனுக்கு பிரியா என்ற மனைவியும், விபேஸ்நாத் என்ற மகனும், தன்விகா என்ற ஒரு வயது மகளும் உள்ளனர்.

    ×