என் மலர்
நீங்கள் தேடியது "pilgrim"
- ஆதி கைலாஷ் யாத்ரீகர்களின் 11-வது குழுவுடனான பயணத்தை முடித்துக் கொண்டபோது சோகம்.
- மருத்துவ உதவி அவரை அடையும் முன்பே பெண் இறந்துவிட்டார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் யாத்ரீகர் ஆதி கைலாஷ் யாத்திரையின் 11வது குழுவுடன் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வரும் வழியில் கஞ்சி முகாமிற்கு வந்தபோது பெண்ணிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து பித்தோராகர் கண்காணிப்பாளர் லோகேஷ்வர் சிங் கூறியதாவது:-
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசிக்கும் ரமேஷ் தத்தாத்ரேயா கடம் என்பவரின் மனைவி ஷீத்தல் ரமேஷ் கடம் (57). இவர் நேற்று இரவு தனது கணவருடன் கஞ்சி முகாமுக்குத் திரும்பிய பிறகு படபடப்பாக உணர்ந்துள்ளார். மருத்துவ உதவி அவரை அடையும் முன்பே பெண் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.
ஆதி கைலாஷ் யாத்ரீகர்களின் 11-வது குழுவுடனான பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்த நாள் ஓம் பர்வத்தை பார்வையிட குழு தயாராக இருந்தது. இந்நிலையில், பெண் யாத்ரீகர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.