என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஜப்பான்
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 2வது சுற்றுடன் ஒசாகா வெளியேறினார்.
- பயிற்சியாளர் விம் பிசெட்டுடன் பணியாற்றப் போவதில்லை என ஒசாகா அறிவித்தார்.
டோக்கியோ:
ஜப்பானை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா. இவர் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை ஆவார். சமீபத்தில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 2வது சுற்றுடன் ஒசாகா வெளியேறினார்.
இந்நிலையில், நவோமி ஒசாகா தனது பெல்ஜிய பயிற்சியாளர் விம் பிசெட்டுடன் பணியாற்றப் போவதில்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பெல்ஜிய பயிற்சியாளருடன் பணிபுரிந்தபோது 2020 அமெரிக்க ஓபன் மற்றும் 2021 ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
இதுதொடர்பாக, நவோமி ஒசாகா தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில், 4 ஆண்டுகள், 2 ஸ்லாம்கள் மற்றும் நிறைய நினைவுகள். ஒரு சிறந்த பயிற்சியாளராகவும் இன்னும் சிறந்த நபராகவும் இருப்பதற்கு நன்றி விம், உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
ஒசாகாவும், பிசெட்டும் பிரிவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- அணுஉலைகளில் ஏற்பட்ட சேதம் காரணமாக அணு கழிவுகள் அங்கு தேங்கி கிடக்கின்றன.
- அணு கழிவுகளை அகற்ற 40 ஆண்டுகள் வரை ஆகலாம் என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
டோக்கியோ:
ஜப்பானில் 2011-ம் ஆண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. இதனால் அங்குள்ள புகுஷிமா அணுமின் நிலையம் சேதம் அடைந்தது. அணுமின் நிலையத்திற்குள் கடல்நீர் புகுந்து அங்குள்ள அணுஉலைகள் கடுமையான சேதத்தை சந்தித்தன. இதனால் அதன் செயல்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அணுஉலைகளில் ஏற்பட்ட சேதம் காரணமாக அணு கழிவுகள் அங்கு தேங்கி கிடக்கின்றன.
இந்த கழிவுகள் மனிதனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை அப்புறப்படுத்த ஜப்பான் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இந்தநிலையில் அங்குள்ள அணுஉலை கழிவுகளை அகற்ற நவீன ரோபோவை பயன்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. 3 டன் அளவில் கழிவுகள் இருக்கலாம் என கருதப்படுகிறது. கதிரியக்க அளவினை அறிந்த பின்னர் முழு வீச்சில் இந்த பணி தொடரும் எனவும், இதனை அகற்ற 40 ஆண்டுகள் வரை ஆகலாம் எனவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
- ஜப்பானைச் சேர்ந்த 40 வயதாகும் டைசுக்கே ஹோரி கடந்த 12 வருடங்களாக நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்களே தூங்குகிறார்.
- வியட்நாமை சேர்ந்த தாய் கோக் [Thai Ngoc] என்பவர் கடந்த 60 வருடங்களுக்காகத் தான் தூங்கவே இல்லை.
தூக்கம்
சீரான மனநிலையைப் பேணுவதற்கும் சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்கும் தூக்கம் என்பது மிகவும் அவசியம். ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சராசரியாக 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் வேண்டும் என்பது மருத்துவ ரீதியிலான உண்மை. ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு அரை மணி நேரம் அதாவது 30 நிமிடங்கள் மட்டுமே ஒருவர் தூங்குகிறார் என்றால் நம்ப முடிகிறதா.. ஆம், தனது வாழ்நாளை இரட்டிப்பாக அனுபவிப்பதற்காக ஜப்பானைச் சேர்ந்த 40 வயதாகும் டைசுக்கே ஹோரி [Daisuke Hori] கடந்த 12 வருடங்களாக நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்களே தூங்குகிறார்.
ஹோரியின் குட்டித் தூக்க ஐடியா
வடக்கு ஜப்பானில் உள்ள ஹியோகோ [Hyogo] மாகாணத்தைச் சேர்ந்த ஹோரி தனது உடலையும் மூளையையும் குறைந்த தூக்கத்துக்குப் பழக்கப்படுத்தி உள்ளதாகவும், அதன்மூலம் தனது செயல்படும் திறன் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார். நீண்ட நேரத் தூக்கத்தை விட ஆழமான குட்டித் தூக்கம் உங்களின் செயல்திறனை மேம்படுத்தவும், வேலைத் திறனை அதிகரிக்கவும் உதவும், உதாரணமாக மருத்துவர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் குறைந்த நேரம் ஓய்வெடுத்தாலும் அதிக ஊக்கத்துடன் செயல்படுகிறனர் என்று ஹோரி தெரிவித்துள்ளார்.
யோமியூரி Yomiuri தொலைக்காட்சி ஹோரியின் அன்றாட செயல்பாடுகளை 3 நாட்களுக்குத் தொடர்ந்து Will You Go With Me? என்ற நிகழ்ச்சியாக ஒளிபரப்பியது. ஆச்சரியப்படும் வகையில் நாள் ஒன்றுக்கு 26 நிமிடமே தூங்கிய கோரி அதிக சுறுசுறுப்பாக தனது வேலைகளைச் செய்துள்ளார். உணவு உண்பதற்குப் பல மணி நேரத்துக்கு முன்னர் உடற்பயிற்சி செய்வதும், காப்பி குடிப்பதும் தூக்கக்கலகத்தை நீக்கும் என்று தெரிவிக்கிறார் ஹோரி. கடந்த 2016 முதல் குறைந்த தூக்கத்திற்கான பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார் ஹோரி. இதுவரை 2100 பேரை ultra-short sleepers ஆக ஹோரி தயார் படுத்தி உள்ளார்.
61 வருடமாக தூங்காத தாய் கோக்
வியட்நாமை சேர்ந்த 80 வயது தாய் கோக் [Thai Ngoc] என்பவர் கடந்த 61 வருடங்களுக்காகத் தான் தூங்கவே இல்லை என்று கூறி பலரையும் ஆச்சரியப்பட வைத்தவர். 1962 இல் காய்ச்சலில் பாதிக்கப்பட்ட அவர் அதன்பின் தனது தூங்கும் திறனை இழந்துவிட்டதாகவும், மருந்து மற்றும் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டும் தன்னால் தூங்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 37,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இறந்தவர்கள் அனைவரும் வீடுகளில் தனியாக தங்கி இருந்தனர் என தெரியவந்தது.
டோக்கியோ:
ஜப்பான் நாட்டு மக்கள் தொகையில் வயதானோர் அதிகம் வசித்து வருகின்றனர். அவர்கள் தனித்து வாழ்ந்து வருகின்றனர். வயது மூத்தோரின் தனிமை பிரச்சனை அங்கு அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 37 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு தேசிய போலீஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
விசாரணையில், உயிரிழந்தவர்கள் அனைவரும் வீடுகளில் தனியாக தங்கி இருந்தனர் என்பதும், அவர்களில் 4 ஆயிரம் பேர் இறந்து ஒரு மாதத்திற்கு பிறகே கண்டுபிடிக்கப்பட்டனர் என்பதும் தெரிய வந்தது.
ஜப்பான் நாட்டு மக்கள் தொகையில் வயதானோர் அதிகம் வசித்து வருகின்றனர். அவர்கள் தனித்து வாழ்ந்து வருகின்றனர். வயது மூத்தோரின் தனிமை பிரச்சனை அங்கு அதிகரித்து காணப்படுகிறது.
இதுதொடர்பாக தேசிய போலீஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
இந்த கணக்கெடுப்பு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. இப்படி உயிரிழந்தவர்களில் 65 வயது முதல் 70 வயது தாண்டியவர்கள் அதிகம். வீட்டில் தனியாக இறந்தவர்களில் 40 சதவீதம் பேர் ஒரு நாளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டனர். 4 ஆயிரம் பேர் இறந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியே கண்டுபிடிக்க முடிந்தது. 130 பேர் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் குறைந்தது ஒரு ஆண்டாவது கவனிக்கப்படாமல் இருந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
- பற்றாக்குறை நிலைமை விரைவில் தீர்க்கப்படும்.
- செப்டம்பர் இறுதிக்குள் 40 சதவீத பயிர் கிடைக்கும் நிலையில் புதிய அறுவடை பருவம் தொடங்கியுள்ளது என்றார்.
நிலநடுக்கம் மற்றும் சூறாவளியால் அதிக அளவில் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்று ஜப்பான்.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சூறாவளியால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பிரதான உணவுகளில் ஒன்றான அரிசிக்கு முன்எப்போதும் இல்லாத வகையில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
டோக்கியோவில் உள்ள பிரபலமான சூப்பர் மார்க்கெட்டின் கிளார்க், "இந்த கோடையில் வழக்கமான அரிசியின் பாதி அளவை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். மேலும் அரிசி பைகள் விரைவாக விற்றுத் தீர்ந்துவிடும்" எனத் தெரிவித்தார்.
இதனிடையே, மளிகை கடைக்காரர் ஒருவர், தங்கள் வாடிக்கையாளர்களிடம் ஒரு நாளைக்கு ஒரு பை அரிசி மட்டுமே வாங்கிக்கொள்ள அறிவிறுத்தியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் "மெகா நிலநடுக்கம்" மற்றும் பல சூறாவளிகள் ஏற்படக்கூடும் என்று அரசாங்கம் எச்சரித்ததை அடுத்து மக்கள் தங்கள் வீடுகளில் அரிசியை வாங்கி வைக்கத் தொடங்கினர். ஜப்பான் முழுவதும் உள்ள கடைகளில் அரிசி இல்லாமல் போனது அல்லது அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான மற்றொரு காரணம் ஓபன் விடுமுறை.
இது தவிர, வெப்பமான காலநிலை மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குறைந்த அறுவடைகள், அத்துடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பதிவு எண்ணிக்கையுடன் தொடர்புடைய தேவை அதிகரித்தது, மேலும் அரிசி பற்றாக்குறையை ஏற்படுத்தியது.
அரிசி தட்டுப்பாடு தொடர்பாக விவசாயத்துறை அமைச்சர் டெட்சுஷி சகாமோடோ கூறுகையில், பற்றாக்குறை நிலைமை விரைவில் தீர்க்கப்படும். அதுவரை மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். செப்டம்பர் இறுதிக்குள் 40 சதவீத பயிர் கிடைக்கும் நிலையில் புதிய அறுவடை பருவம் தொடங்கியுள்ளது என்றார்.
- 1931 இல் திருமணம் செய்துகொண்ட மரியாவுக்கு 3 குழந்தைகள், 11 பேரக் குழந்தைகள் மற்றும் 13 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர்.
- 1908 ஆம் ஆண்டு மே 23 இல் பிறந்த இதூக்கா, இளமைக்காலங்களில் மலையேற்ற வீரராக இருந்துள்ளார்.
உலகின் மிக வயதான பெண்மணி என்று கின்னஸ் சாதனை படைத்த மரியா பிரான்யாஸ் தனது 117 வயதில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் பிறந்த மரியா பிரான்யாஸ் இரண்டு உலகப் போர்களை பார்த்ததுடன், ஸ்பெயின் உள்நாட்டுப் போர், 1918 ஆம் ஆண்டு பெரிய அளவில் பரவிய காய்ச்சல் மற்றும் கோவிட் தொற்று ஆகியவற்றை பார்த்தவர் ஆவார்.
மரியா பிரான்யாஸ் கடந்த 1907 ஆம் ஆண்டு, மார்ச் 4ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். அதன்பின் அவரது குடும்பம் சொந்த நாடான ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தது.
1931 இல் திருமணம் செய்துகொண்ட மரியாவுக்கு 3 குழந்தைகள், 11 பேரக் குழந்தைகள் மற்றும் 13 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர். வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள ஓலோட் நகரில் சாண்டா மரியா என்ற முதியோர் இல்லத்தில் வசித்து வந்த மரியா பிரான்யாஸ் நேற்று முன் தினம் [ஆகஸ்ட் 20] காலமானார். மரியா அவர் விரும்பியபடியே தூக்கத்தில் அமைதியான முறையில் வலியில்லாமல் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உலவகின் மிக வயதான பெண்மணியாக மரியா பிரன்யாஸ் உயிரிழந்ததை அடுத்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 116 வயது மூதாட்டியான தொமிக்கோ இதூக்கா [Tomiko Itooka] உலகின் மிக வயதான பெண்மையாக கின்னஸ் புத்தக அங்கீகாரத்தை பெற்றுள்ளார். 1908 ஆம் ஆண்டு மே 23 இல் பிறந்த இதூக்கா, இளமைக்காலங்களில் மலையேற்ற வீரராக இருந்துள்ளார். 3 குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் இதூக்கா ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அசியா [Ashiya] நகரின் வசித்து வருகிறார்.
- ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், ஜப்பான் வீரர் கண்டா சுனேயமா உடன் மோதினார்.
இதில் ஜார்ஜ் 19-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் இந்திய வீராங்கனைகள் தோல்வி அடைந்தனர்.
- ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றிலேயே இந்தியாவின் அஷ்மிதா, மால்விகா தோல்வி அடைந்தனர்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, சீன தைபேயின் தாய் சு யிங் மோதினார். இதில் அஷ்மிதா 16-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனை அகார்ஷி காஷ்யப் 13-21, 12-21 என்ற செட் கணக்கில் கொரியாவின் கிம் கான் யுன்னிடம் தோல்வி அடைந்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனை மால்விகா பன்சோட் 21-23, 19-21 என்ற செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனை பொலினா புரோவாவிடம் தோற்றார்.
- ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை.
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவாகி இருக்கிறது.
நிலநடுக்கம் காரணமாக ஜப்பானியை தீவுகளான குய்ஷூ மற்றும் ஷிகோகு ஆகிய பகுதிகளை ஒட்டிய கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. நிலநடுக்கம் மியாசகியில் இருந்து 20 மைல் தூரத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்துள்ளது.
- அப்படி என்ன இந்த குடிநீரில் விசேஷம்?
- சுத்தமான குடிநீரைப் பெறுவதே கோடிக்கணக்கான மக்களுக்கு கனவாக உள்ளது.
மனிதர்களின் அத்தியாவசிய அடிப்படைத் தேவை களில் ஒன்று குடிநீர். ஆனால், ஆடம்பர பாட்டில் குடிநீர் பயன்பாடு என்பது தற்போது பெருவசதி படைத்தவர்களிடையே உருவாகியுள்ளது.
அந்த வகையில், உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் குடிநீராக, ஜப்பானில் தயாரிக்கப்படும் 'பிலிகோ ஜூவல்லரி வாட்டர்' உள்ளது.
இதன் ஒரு லிட்டர் விலை, ஆயிரத்து 390 டாலர்கள்.
இந்திய மதிப்பில் உத்தேசமாக ரூ.1 லட்சத்து 16 ஆயிரம்!
அப்படி என்ன இந்த குடிநீரில் விசேஷம்?
இது மிக மிகத் தூய்மையானது என்பதுடன், ரொம்ப ஆடம்பரமான பாட்டில்களில்தான் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த பாட்டில்கள், விலை உயர்ந்த ஸ்வரோவ்ஸ்கி கற்களால் ஆபரணம் போல வடிவமைக்கப்படுகின்றன.
தங்க அலங்காரங்கள் மற்றும் சிக்கலான வடிவமைப்புகளைக் கொண்ட, உன்னிப்பாக கவனத்துடன் செய்யப்பட்ட கைவினைப்பொருளாக இந்த பாட்டில் உருவாக்கப்படுகிறது.
இதில் நிரப்பப்படும் நீர், ஜப்பானின் கோபேயில் உள்ள இயற்கை நீரூற்றில் இருந்து பெறப்படுகிறது. இந்த தண்ணீர், மிக உயர்தரமானதாக கருப்படுகிறது.
ஆடம்பரத்தை விரும்புவோர், அதற்காக தயங்காமல் பணத்தை அள்ளிவிடத் தயாராக இருப்போரை இந்த தண்ணீருடன், இதன் ஆடம்பர பாட்டில் அலங்காரமும் கவர்கிறது.
இந்த பூமியில், சுத்தமான குடிநீரைப் பெறுவதே கோடிக்கணக்கான மக்களுக்கு கனவாக உள்ளது. ஆனால் சிலருக்கோ. குடிக்கும் நீருக்கு, கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பணம் செலவழிக்க முடிகிறது. அதையும் கூட தங்கள் அந்தஸ்தின் அடையாளமாக கருதுகிறார்கள்.
முரண்பாடுகளின் மொத்த உருவமாய் நம் உலகமே உள்ளது!
- சிரிப்பது மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றையும் பெருமளவில் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.
- ஒவ்வொரு மாதத்தின் 8வது நாளை, சிரிப்பு தினமாக கடைபிடிக்க அறிவுறுத்தல்.
தற்போதைய நவீன, அவசர உலகத்தில் மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. அனைவருமே ஏதோ ஒரு காரணத்திற்காக மன அழுத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் குறைப்பது மிகவும் அவசியமானது. அப்போதுதான் நாம் ஆரோக்கியமன மனநிலையில் வாழ முடியும். சிரிப்பதால் நமது ரத்தத்தில் உள்ள மன அழுத்த ஹார்மோன்கள் குறைந்து புத்துணர்ச்சியை உண்டாக்கும் எண்டோர்பின் கெமிக்கல் அதிகரிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் சிரிப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
சமீபத்தில் ஜப்பானின் யமகட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் மேற்கொண்டு அறிவியல் ஆய்வில் தினசரி சிரிப்பவர்களுக்கு மாரடைப்பின் அபாயங்கள் குறைவதாக தெரிய வந்துள்ளது. மேலும் சிரிப்பது மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றையும் பெருமளவில் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து யமகட்டா மாகாணத்தில் தினசரி அனைவரும் ஒரு முறையாவது கட்டாயமாக சிரிக்க வேண்டும் என புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதத்தில் எட்டாவது நாளையும் சிரிப்பு தினமாக கடைபிடித்து அன்றைய தினம் சிரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டாய சட்டத்தை ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. சிரிப்பது என்பது தனிநபர் உரிமை சார்ந்தது என்றும், அதை கட்டாயப்படுத்தி செய்ய சொல்ல முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
- கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
- ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரஷிய அதிபர் இரங்கல் தெரிவித்தார்.
டோக்கியோ:
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.
ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
இதற்கிடையே, ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷாடா அந்நாட்டு வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஹத்ராஸ் சம்பவம் அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்