search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "handover"

    • மேலூரில் பெண் தவறவிட்ட பணத்தை தம்பதி போலீசிடம் ஒப்படைத்தனர்.
    • சப்- இன்ஸ்பெக்டர் அழகர்சாமி முன்னிலையில் நதியாவிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

    மேலூர்

    மேலூர் அருகே வினோபா காலனியை சேர்ந்தவர் நதியா. இவர் மேலூரில் பொருட்கள் வாங்குவதற்காக தனது கைப்பையில் ரூ.21 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு எஸ்.எஸ்.வி. சாலா தெருவில் சென்றார்.

    அப்போது அவர் வைத்திருந்த கைப்பை தவறி கீழே விழுந்து விட்டது. அதனை கவனிக்காமல் அவர் கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார். பின்னர் பணம் கொடுப்பதற்காக பணப்பையை தேடினார். அப்போது அதனை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து மேலூர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நதியா தவறவிட்ட பணத்தை தேடி வந்தனர்.

    இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் அ.வல்லாளபட்டி பேரூராட்சி கவுன்சிலர் பெரியவர் மற்றும் அவரது மனைவி மூக்கம்மாள் ஆகியோர் கீழே கிடந்த பணப்பையை கண்டெடுத்தனர். அதனை யார் தவற விட்டார்களோ என்று கருதி மேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த பணம் நதியா தவறவிட்டது என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் அழகர்சாமி முன்னிலையில் நதியாவிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

    கீழே கிடந்த பணத்தை எடுத்து நேர்மையாக ஒப்படைத்த தம்பதிகளுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

    • ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்
    • 75 நாட்களுக்கு பின்னர் குணமடைந்தார்

    கரூர்,

    குளித்தலையை அடுத்த, கழுகூர் பஞ்., உடையாபட்டி பஸ் நிறுத்தம் அருகே, கடந்த டிசம்பர் 15ல், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், 32 வயது, ஆந்திர மாநில இளைஞர் மஞ்சுநாதா என்பவர் மீட்கப்பட்டார்.

    தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் குமார், சாந்திவனம் மனநல மீட்பு குழு ஒருங்கி து ணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் அனிதா, ஓட்டுனர் வேல்முருகன் ஆகியோர் முயற்சியில், சாந்திவனம் மன நல மருத்துவம் மற்றும் மறு வாழ்வு பயிற்சி மையத்தில் அந்த இளைஞர் சேர்க் கப்பட்டார். 75 நாட்களுக்கு பின், குணமடைந்த மஞ்சுநாதாவை, ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், வெங்கமாவரிப்பள்ளி கிராமத்தில் உள்ள அவரது சித்தி ஹேமலதா, ஊர் முக்கி பஸ்தர்கள் முன்னிலையில், சாந்திவனம் இயக் குனர் அரசப்பன், ஒருங்கிணைப்பாளர் தீனதவாளன், செவிலியர் சித்ரா, ஓட்டுநர் மோகன்ராஜ் ஆகியோர் ஒப்படைத்தனர்.

    • நில உரிமையாளா்களின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த உச்சவரம்பு நிலத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மீட்டனா்.
    • 45 பயனாளிகளுக்கும் அவா்களுக்கு பட்டாவில் குறிப்பிட்டுள்ளபடி விவசாய நிலத்தை பிரித்து வழங்கினா்.

    தாராபுரம்:

    தமிழகத்தில் அதிக அளவு விவசாய நிலங்களை தங்கள் வசம் வைத்திருந்த நில சுவான்தாரா்களிடம் இருந்து நில உச்சவரம்பு சீா்திருத்த சட்டத்தின்கீழ் விவசாய நிலங்களை கையகப்படுத்திய தமிழக அரசு, அவற்றை நிலமற்ற ஏழை விவசாய கூலி தொழிலாளா்களுக்கு பிரித்து வழங்கியது.

    அதன்படி திருப்பூா் மாவட்டம் தாராபுரம் பகுதியை சோ்ந்த தளவாய்பட்டினம், ஊத்துப்பாளையம் பகுதிகளில் நில சுவான்தாரா்களிடம் இருந்து கையகப்படுத்திய 55 ஏக்கா் விவசாய நிலத்தை பிரித்து 45 பயனாளிகளுக்கு கடந்த 2003-ம் ஆண்டு அரசு நில பட்டா வழங்கியது.பட்டா பெற்ற விவசாயிகளுக்கு அவா்களுக்கான நிலத்தை அளந்து பிரித்து எடுப்பதில் கடந்த 19 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடைபெற்று வந்தது. மேலும் அந்த நிலங்கள் நில உரிமையாளா்களின் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அரசு வழங்கிய நிலப்பட்டாக்களுக்கு உரிய இடத்தை 45 பயனாளிகளுக்கும் உடனடியாக பிரித்து நில அளவீடு செய்து வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து நில உரிமையாளா்களின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த உச்சவரம்பு நிலத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மீட்டனா்.

    இதைத்தொடா்ந்து திருப்பூா் மக்களவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டு குழுத் தலைவருமான கே.சுப்பராயன், மாநில துணைச்செயலா் நா.பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் எம்.ரவி ஆகியோா் அரசு வழங்கிய உச்சவரம்பு நிலத்துக்கான பட்டாக்களை பெற்றிருந்த 45 பயனாளிகளுக்கும் அவா்களுக்கு பட்டாவில் குறிப்பிட்டுள்ளபடி விவசாய நிலத்தை பிரித்து வழங்கினா்.இதில் சிபிஐ., கட்சியின் தாராபுரம் பகுதி நிா்வாகிகள், பட்டாதாரா்கள் கலந்துகொண்டனா். 

    • முதியவரின் பிணத்தை தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் உறவினரிடம் ஒப்படைத்தனர்.
    • இறந்து போன முதியவர் மூலனூர் அருகே உள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்த சென்னி (வயது 65) என்பது தெரியவந்தது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள நாட்ராயன்கோவில் என்ற இடத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் பிணம் கிடப்பதாக வெள்ளகோவில் பகுதியில் உள்ள தன்னார்வ அமைப்பினருக்கு கிடைத்த தகவலின் பேரில் தன்னார்வ அமைப்பினர். உடலை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் குரூப் மூலம் தெரியப்படுத்தினர். தகவல் அறிந்த முதியவரின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இறந்து போன முதியவர் மூலனூர் அருகே உள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்த சென்னி (வயது 65) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 40 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து நாட்ராயன் கோவில் பகுதியில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டுக் கொண்டு வாழ்ந்துள்ளார். முதியவரின் பிணத்தை தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் உறவினரிடம் ஒப்படைத்தனர்.

    • ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தை சேர்ந்தவர் கணேசன்.
    • இவர் ராதாபுரத்தில் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார்

    பணகுடி:

    ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் ராதாபுரத்தில் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.நேற்று இரவு இவரது கடையின் அருகே உள்ள சாலையில் ஒரு பணப்பை கிடந்தது.

    அதை பார்த்த கணேசன் பணத்தை எடுத்து கொண்டு ராதாபுரம் போலீஸ் நிலையம் சென்றார். அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகத்திடம் அந்த பையை வழங்கினார். அதை பெற்று கொண்ட சப்-இன்ஸ்பெக்டர், மெக்கானிக்கின் நேர்மையை பாராட்டி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    சென்னை மடிப்பாக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு வீதியில் திரிந்த ஒரிசா வாலிபரை போலீசார் பேஸ்புக் மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். #Facebook
    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம் பகுதியில் சந்தேகப்படும்படி வடமாநில வாலிபர் ஒருவர் அலைந்து திரிவதாக மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மடிப்பாக்கம் பஸ்நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அருகே வடமாநில வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து சுற்றி வந்த மடிப்பாக்கம் போலீசார், அந்த வாலிபர் மோட்டார் சைக்கிள் திருடுவதற்காக வந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.

    உடனே அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவருடைய பெயர் தேவேந்திர பியான் (21). ஒரிசா மாநிலம் பலேசோர் என்ற இடத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

    தொடர்ந்து விசாரித்த போது ஒரு போன் நம்பரை சொன்னார். அதன்மூலம் அந்த வாலிபரின் ‘பேஸ்புக்’ தொடர்பை போலீசார் கண்டுபிடித்தனர். ஐ.டி.ஐ. படித்த இவர் 20-நாட்களுக்கு முன்பு கேரளாவுக்கு பிட்டர் வேலைக்காக சென்றதும், அங்கு ஏமாற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது.

    இந்தநிலையில் கேரளாவில் ரெயில் ஏறி சென்னை வந்த அவர் மடிப்பாக்கம் பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இதுகுறித்து பேஸ்புக் மூலம் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதை அறிந்த தேவேந்திரபியான் உறவினரும், நண்பர்களும் ஒரிசாவில் இருந்து மடிப்பாக்கம் போலீஸ் நிலையம் வந்தனர். அவர்களிடம் வாலிபர் தேவேந்திரபியான் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து மடிப்பாக்கம் போலீசாருக்கும், உறவினர்கள் வரும் வரை வாலிபருக்கு பாதுகாப்பு கொடுத்த தொண்டு நிறுவன பிரமுகர் நாராயணனுக்கும் வாலிபரின் உறவினரும் நண்பர்களும் நன்றி தெரிவித்தனர். #Facebook
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான‌ அந்தோணி செல்வராஜ் உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர்.

    பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அவர்களில் சண்முகம், செல்வசேகர், கார்த்திக், கந்தையா, காளியப்பன், மாணவி ஸ்னோலின், தமிழரசன் ஆகிய 7 பேரின் உடல்கள் முதலில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

    இந்நிலையில் அவர்களது உடலை மறுபிரேத பரிசோதனை செய்யவும், மற்ற 6 பேரின் உடல்களை மறு உத்தரவை வரும்வரை பிரேத பரிசோதனை செய்யாமல் பாதுகாக்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி பிரேத பரிசோதனை முடிந்த மாணவி ஸ்னோலின் உள்ளிட்ட 7 பேரின் உடல்களையும் புதுவை ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் மற்றும் தூத்துக்குடி டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

    நீதிபதிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த பிரேத பரிசோதனை முழுவதுமாக வீடியோ எடுக்கப்பட்டது. பின்பு 7 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மணிராஜ், கிளாட்சன், அந்தோணி செல்வராஜ், ரஞ்சித்குமார், ஜான்சி, ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்களும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் அந்த 6 பேரின் உடல்களையும் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யுமாறு சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையடுத்து 6 பேரின் உடல்களும் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் அண்ணாமலை, கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவர் சங்கர், 2-வது நீதித்துறை நடுவர் தாவூத்தம்மாள், திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் வினோத் சவுத்ரி தலைமையில், தூத்துக்குடி அரசு மருத்துவர்கள் மனோகரன், சுடலைமுத்து, சோமசுந்தரம், மும்மூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

    பிரேத பரிசோதனை முடிந்ததும் ஒவ்வொரு உடலாக அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த அந்தோணி செல்வராஜ் உடலை தவிர மற்ற 5 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    அவரது உறவினர்கள் வெளியூரில் இருந்ததால் அவர்கள் நேற்று வரவில்லை. இன்று (வியாழக்கிழமை) காலை அவர்கள் தூத்துக்குடி வந்த‌னர். இதையடுத்து அவர்களிடம் அந்தோணிசெல்வராஜின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பின்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கிருஷ்ணராஜபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

    துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டு விட்டதால் தூத்துக்குடியில் கடந்த 15 நாட்களாக நிலவிய பதட்டம் தணிந்துள்ளது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் போலீஸ் எண்ணிகையும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

    ×