search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் உடல்"

    • திடீரென வீடு தீப்பற்றி எரிந்தது.
    • வீட்டிலிருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கடத்தூர் பள்ளிக்கூடம் பிரிவை சேர்ந்தவர் பழனி. இந்நிலையில் சம்பவத்தன்று பழனி வீட்டின் உள்ளே படுத்திருந்தார்.

    அப்போது திடீரென வீடு தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    அதைத்தொ டர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்நிலையில் வீட்டிலிருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

    மேலும் விட்டினுள் படுத்திருந்த பழனி உடல் கருகிய நிலை யில் கிடந்து ள்ளார். இதை யடுத்து தீய ணைப்பு வீர ர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவ மனைக்கு சிகி ச்சைக்காக அனுப்பி வை த்தனர்.

    இந்நி லையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து கடத்தூ ர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயணிகள் நிழற்குடை அருகே முதியவர் உடல் கிடந்தது
    • உடலை மீட்டு போலீசார் விசாரணை

    கரூர்:

    கடவூர் தாலுகா தரகம்பட்டி முனியப்பன் கோயில் பயணிகள் நிழற்குடை அருகே அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணம் கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து, கிராம நிர்வாக அலுவலர் நர்மதாவுக்கு தகவல் கொடுத்தனர். தகவலை உறுதி செய்து கொண்ட அவர், சிந்தாமணிப்பட்டி போலீசாருக்கு புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மண் அரிப்பு ஏற்பட்டு அடக்கம் செய்யப்பட்ட துரைசாமியின் சடலம் மேலே வந்துள்ளது.
    • உதயகுமார் தனது தந்தையின் உடலை பெற்றுக் கொண்டு மீண்டும் 2-வது முறையாக 6 அடி குழி தோண்டி முறையாக காரியங்கள் செய்து துரைசாமி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூர் காவிரி ஆற்று தடுப்பணை அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் உடல் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது. இதை பார்த்து முதலில் யாரோ கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் பரவியது. இதை அடுத்து பகுதி சேர்ந்த மக்கள் காவிரி ஆற்று தடுப்பணை பகுதியில் குவிந்தனர்.

    இது குறித்து மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணை செய்தபோது இறந்தவர் பற்றிய அடையாளம் தெரியவந்தது. பாசூர் அருகே உள்ள செங்கோடம் பாளையத்தை சேர்ந்த துரைசாமி (70) முதியவர் உடல் என தெரியவந்தது.

    அவர் கடந்த மாதம் 25-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக இறந்துள்ளார். அவருக்கு முறையாக கைகட்டு, கால்கட்டு, வாய்க்கட்டு, வாய்க்கு அரிசி, காலில் மஞ்சள் கயிறு கட்டி காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள இடுகாட்டில் முறையாக அடக்கம் செய்துள்ளார்கள்.

    இந்த நிலையில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மண் அரிப்பு ஏற்பட்டு அடக்கம் செய்யப்பட்ட துரைசாமியின் சடலம் மேலே வந்துள்ளது. ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு அருகே உள்ள முட்புதரில் உடல் சிக்கிக்கொண்டதால் தண்ணீர் வற்றிய பிறகு துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. போலீஸ் சார்பில் மேற்கண்ட தகவல் தெரிய வந்தது.

    இதனை எடுத்து மலையம்பாளையம் போலீசார் இது குறித்து துரைசாமி மகன் உதயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். உதயகுமார் தனது தந்தையின் உடலை பெற்றுக் கொண்டு மீண்டும் 2-வது முறையாக 6 அடி குழி தோண்டி முறையாக காரியங்கள் செய்து துரைசாமி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    இறந்து போன நபரை இரண்டு முறை அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முதியவரின் பிணத்தை தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் உறவினரிடம் ஒப்படைத்தனர்.
    • இறந்து போன முதியவர் மூலனூர் அருகே உள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்த சென்னி (வயது 65) என்பது தெரியவந்தது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள நாட்ராயன்கோவில் என்ற இடத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் பிணம் கிடப்பதாக வெள்ளகோவில் பகுதியில் உள்ள தன்னார்வ அமைப்பினருக்கு கிடைத்த தகவலின் பேரில் தன்னார்வ அமைப்பினர். உடலை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் குரூப் மூலம் தெரியப்படுத்தினர். தகவல் அறிந்த முதியவரின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இறந்து போன முதியவர் மூலனூர் அருகே உள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்த சென்னி (வயது 65) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 40 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து நாட்ராயன் கோவில் பகுதியில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டுக் கொண்டு வாழ்ந்துள்ளார். முதியவரின் பிணத்தை தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் உறவினரிடம் ஒப்படைத்தனர்.

    ×