பயணிகள் நிழற்குடை அருகே முதியவர் உடல்

பயணிகள் நிழற்குடை அருகே முதியவர் உடல் கிடந்தது உடலை மீட்டு போலீசார் விசாரணை
பயணிகள் நிழற்குடை அருகே முதியவர் உடல்
Published on

கரூர்:

கடவூர் தாலுகா தரகம்பட்டி முனியப்பன் கோயில் பயணிகள் நிழற்குடை அருகே அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணம் கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து, கிராம நிர்வாக அலுவலர் நர்மதாவுக்கு தகவல் கொடுத்தனர். தகவலை உறுதி செய்து கொண்ட அவர், சிந்தாமணிப்பட்டி போலீசாருக்கு புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com