முதியவர் உடல் கருகி பலி

திடீரென வீடு தீப்பற்றி எரிந்தது.வீட்டிலிருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.
முதியவர் உடல் கருகி பலி
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கடத்தூர் பள்ளிக்கூடம் பிரிவை சேர்ந்தவர் பழனி. இந்நிலையில் சம்பவத்தன்று பழனி வீட்டின் உள்ளே படுத்திருந்தார்.

அப்போது திடீரென வீடு தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதைத்தொ டர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்நிலையில் வீட்டிலிருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

மேலும் விட்டினுள் படுத்திருந்த பழனி உடல் கருகிய நிலை யில் கிடந்து ள்ளார். இதை யடுத்து தீய ணைப்பு வீர ர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவ மனைக்கு சிகி ச்சைக்காக அனுப்பி வை த்தனர்.

இந்நி லையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து கடத்தூ ர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com