search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறவினர்கள்"

    • யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
    • புகார் அளிக்கப்பட்ட நிலையில் காதல் ஜோடிகள் காவல்நிலையம் வந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் செல்போன் கடை வைத்திருக்கும் ரிக்கப் சந்த், இவரது மகள் (வயது 19).

    இவருக்கும் மயிலாடுது றையைச் சார்ந்த தற்போது காரைக்காலில் வசித்து வரும் பாலச்சந்தர் 20 என்ற வாலிபருக்கும் சில ஆண்டு களாக காதல் ஏற்பட்டது.

    காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்ததால் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

    இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காதல் ஜோடிகள் காவல்நிலையம் வந்தனர்.

    தாங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்த அந்தப் பெண் தனது கணவரோடு தான் செல்வேன் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பெண்ணை தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று பெண்ணின் உறவினர்கள் காவல்து றையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் காவல்து றையினர் மறுத்து விட்டனர்.

    பின்னர் பெண்ணை காதல் திருமணம் செய்த கணவனுடன் போலீசார் பெண்ணை அனுப்பி வைத்தனர்.

    ஆத்திரமடைந்த உறவினர்கள் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போலிஸ்சார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 34 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மண்டபத்தின் கண்ணாடி, நாற்காலிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு
    • மணமகன் வீட்டார் மற்றும் மணமகள் வீட்டார் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை நாகர்கோவில் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், புறநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நேற்று இரவு அதே மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மணமகன் வீட்டார் மற்றும் மணமகள் வீட்டார் ஏராளமானோர் கலந்துகொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சியின் போது மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் மாறி மாறி நடனம் ஆடினார்கள். அப்போது இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி மோதிக்கொண்டதால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது ஏற்பட்ட மோதலில் திருமண மண்ட பத்தின் இருக்கைகள் உடைக் கப்பட்டதுடன் மண்டபத்தின் கண்ணாடிகளும் உடைத்து சூறையாடப்பட்டது.

    இதை பார்த்த மணப்பெண் மயங்கி விழுந்தார். உறவி னர்கள் மணப்பெண்ணை சமாதானம் செய்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இரு தரப்பி னரையும் போலீசார் சமாதா னம் செய்ய முயன்றனர்.

    ஆனால் அவர்கள் சமாதானம் அடையவில்லை. நீண்ட நேரத்துக்கு பிறகு போலீசார் சமரசம் செய்த வுடன் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • நேற்று காலையிலும் அவரை காணாததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.
    • புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    கன்னியாகுமரி :

    புதுக்கடையை அடுத்த காஞ்ஞாம்புறம் பகுதியை சேர்ந்தவர் பாலஸ். இவரது மகன் ஜெயசிங் (வயது 27). இவர் சமையல் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் (28-ந் தேதி) புதுக்கடை அருகே உள்ள அம்சி பகுதி நடுத்தலைவிளை பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் திருமண வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலையிலும் அவரை காணாததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.

    இந்தநிலையில் நேற்று மாலையில் அதே பகுதி நடவரம்பு வயல் வழியாக செல்லும் சாலையோரம் ஜெயசிங் மோட்டார் சைக்கிள் நின்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வயல் பகுதியில் அவரை தேடினர். அப்போது வயல் பரப்பில் உள்ள குட்டை ஒன்றில் பிணம் ஒன்று மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். அப்போது அது ஜெயசிங் உடல் என தெரியவந்தது. போலீசார் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது.

    இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பரி சோதனைக்கு பின் ஜெயசிங் எப்படி இறந்தார் என தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
    • 300-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கனிவண்ணன் (27) சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உப்பனாறு கரையில் கனிவண்ணன் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சீர்காழி போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதனிடையே திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனிவண்ணனின் உடல் தடைய அறிவியல் பிரேதப் பரிசோதனை நேற்று மாலை செய்யப்பட்டது.

    இந்நிலையில் கொலை செய்யப்பட்டு பல மணி நேரம் கடந்தும் இதுவரை கொலை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

    என உறவினர்கள் குடும்பத்தினர் ஊர் மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர்.

    கொலை குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மயிலாடுதுறை - சீர்காழி நெடுஞ்சாலை தென்பாதி மெயின் ரோட்டில் 300க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது ஏ.டி.எஸ்.பி தலைமை யில் ஏராளமான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் குற்றவாளிகளை விரைவில் காவல்துறை கைது செய்யும் என்று தெரிவி த்ததன் அடிப்படையில் சாலை மறியலை விலக்கி கொண்டனர்.

    மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார். தெரிவிக்கின்றனர்.

    • போலீசார் விஜயகுமார் உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் என புகார்

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு மேல்புறம் மணலி விளையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 67). இவர் மினி பஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.

    விஜயகுமார், படந்தாலு மூட்டில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மினி பஸ்கள் நடத்துவதற்காக கடன் பெற்றுள்ளார். கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்த விஜயகுமார் என்ன செய்வதென்று தெரியாமல், ஒவ்வொரு மினி பஸ்சாக விற்பனை செய்து கடனை செலுத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக கடன் கொடுத்தவர்கள் அவரது வீட்டில் முகாமிட்டு டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் வினேஷ் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில் மினி பஸ் உரிமையாளர் விஜய குமாரின் உடல் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது மகன் வினேஷ் கந்துவட்டி கும்பலின் மிரட்டலால் தான் தந்தை தற்கொலை செய்து கொண்டார் எனவும்,கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மினி பஸ் உரிமையாளர் விஜயகுமார் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் விஜயகுமார் உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் இன்று விஜயகுமாரின் உற வினர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளை சந்தித்து முறையிட போவதாக தெரி வித்துள்ளனர்.

    • எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன
    • விபத்தில் பலியான பிரதீஷிற்கு வருகிற 1-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது

    கன்னியாகுமரி :

    குலசேகரம் அருகே உள்ள பொன்மனை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40). இவரும் பொன்மனை ஈஞ்சக்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜன் (34) என்பவரும் முள்வேலி அமைக்கும் பணி செய்து வருகின்றனர்.

    நேற்று 2 பேரும் பணியை முடித்து விட்டு முட்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். இரணி யலில் இருந்து தக்கலை சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர் கோணம் ரெயில்வே மேம்பாலம் அருகில் வந்த போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அந்த மோட்டார் சைக்கிளில் ஆத்திவிளையைச் சேர்ந்த பிரதீஷ் மற்றும் ரெஜு ஆகியோர் வந்தனர்.

    இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் ராஜ சேகர் மற்றும் பிரதீஷ் (28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் காயம டைந்த ராஜன் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ மனையிலும் ரெஜூ சுங்கான் கடையில் உள்ள தனியார் மருத்துவ மனை யிலும் அனுமதிக்க ப்பட்ட னர். இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான பிரதீஷிற்கு வருகிற 1-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர் திருமணத்திற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் சொந்தஊர் திரும்பி உள்ளார்.

    திருமண பத்திரிக்கையை கொடுத்து வரும் போது தான் பிரதீஷ் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார். இதனால் திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். மேலும் அந்த கிராமமே சோகத்தில் உள்ளது.

    விபத்தில் பலியான ராஜசேகருக்கு மூன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. மேலும் அவரது மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விஷ பூச்சி கடித்து பள்ளி மாணவன் இறந்ததால் பரபரப்பு நிலவியது.
    • கொட்டாம்பட்டி போலீசார் உறவினர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பூமங்களப்பட்டியைச் சேர்ந்தசெந்தமிழ்ச்செல்வன் -சுமங்கலி ஆகியோரின் மகன் நிதிஷ் (வயது 12) என்பவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நிதிஷ் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பள்ளியில் இருந்த போதுஅவனை ஒரு விஷப்பூச்சி கடித்து விட்டது. இதில் அவனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நிதிஷை கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மதுரையில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிதிஷ் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    மாணவர் இறந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மதுரை-திருச்சி மெயின் ரோட்டில் கொட்டாம்பட்டி போலீஸ் நிலையம் மற்றும் பஸ் நிலையத்திற்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த மேலூர் டி.எஸ்.பி. பிரபாகரன் மற்றும் கொட்டாம்பட்டி போலீசார் உறவினர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பள்ளியில் மாணவனுக்கு விஷப்பூச்சி கடித்ததால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கூறினர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த போராட்டம் காரணமாக 1 மணி நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    ×