search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government of Tamil Nadu"

    • சமூகநீதியில் அக்கறை கொண்ட எந்த முதலமைச்சரும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கமாட்டார்கள்.
    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அனைத்து அதிகாரங்களும், கட்டமைப்பும் தமிழக அரசுக்கே இருக்கும் நிலையில், தமிழக அரசே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் என்று அறிவிக்காமல், மத்திய அரசு இந்தக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பிரத மருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுவது தாம் விளையாட வேண்டிய பந்தை, பிரதமர் பக்கம் திருப்பி விடும் செயல் என்பதைத் தவிர வேறு எதுவும் அல்ல.

    இது கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதற்கு ஒப்பானது. சமூகநீதியில் அக்கறை கொண்ட எந்த முதலமைச்சரும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான் மீண்டும், மீண்டும் கூறிக் கொள்வது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு, அதற்கு எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை என்பதைத் தான். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான் கர்நாடகம், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி உள்ளன. எனவே, இனியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதாமல், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்தும் என்று அறிவித்து, செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • காங்கிரஸ் அரசு பொறுப்புக்கு வந்தவுடன் மேகதாது அணை கட்டும் பணியை தொடங்கப் போவதாக கூறி இருக்கிறது.
    • காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு சொட்டுநீர்கூட காவிரியில் வராது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த மாதம் பொறுப்பு ஏற்றது. கர்நாடக மாநில துணை முதல்வரான டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி வரிசையில் இருந்தபோது, மேகதாது அணை கட்ட வலியுறுத்தி பெங்களூருவில் இருந்து 10.01.2022-ல் நடை பயணம் தொடங்கி, 10 நாட்கள் பல ஊர்கள் வழியாகச் சென்று 19.01.2022 அன்று மேகதாதுவில் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்.

    தற்போது மீண்டும் காங்கிரஸ் அரசு பொறுப்புக்கு வந்தவுடன், மேகதாது அணை கட்டும் பணியை தொடங்கப் போவதாக கூறி இருக்கிறது. நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாது அணை கட்டும் பணியை தொடங்குவோம். எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டோம் என்று கூறி இருப்பது கண்டனத்துக்கு உரியது.

    காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு சொட்டுநீர்கூட காவிரியில் வராது. உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16, 2018-ல் அளித்தத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 177.25 டி.எம்.சி. நீர், கானல் நீராகவே போய்விடும் ஆபத்துதான் விளையும்.

    எனவே ஒன்றிய பா.ஜ.க. அரசு மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கவே கூடாது. தமிழ்நாட்டின் மரபு உரிமையை கர்நாடக மாநிலம் பறித்துக் கொள்வதை ஏற்கவே முடியாது.

    எனவே, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழ்நாடு அரசு விரைவுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
    • சென்னை, கோவை , மதுரை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களிலும் ரேண்டம் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:

    கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களுக்கு சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100% ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

    மேலும் சென்னை, கோவை , மதுரை, திருச்சி உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. என கூறினார்.

    • அரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆலோசனை செய்து அதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டன.

    சென்னை:

    வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேத்தில் காற்று பலமாக வீசியது.

    இதனால் பெரும்பலான இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. சாலைகளில் சாய்ந்த மரங்களை மாநகராட்சி பணியாளர்கள் இரவோடு இரவாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கனமழையின் காரணமாக மின்வெட்டு இருந்த போதும் அவை உடனடியாக சரிசெய்யப்பட்டன.

    கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முன்கூட்டியே பேரிடர் அமைப்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழக அரசு இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆலோசனை செய்து அதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்து.

    இந்நிலையில் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்படுகின்றன. மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை. அதற்காக பாராட்டுகள்! தமிழக அரசு மேற்கொண்ட புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • விழுப்புரம் மாவட்டம் நெய்குப்பி ஊராட்சியில் அரசின் திட்டங்கள் குறித்து புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.
    • தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததை நெய்குப்பி ஊராட்சியினை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஓன்றி யம், நெய்குப்பி ஊராட்சி யில் தமிழக அரசின் சாத னைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.

    புகைப்படக் கண்காட்சி யில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொறுப்பேற்று, முதல் பணியாக 5 முக்கிய கோப்புகளில் கையொப்ப மிட்டு, நடைமுறைப்படுத்திய திட்டங்களான ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்தல், நகரப் பஸ்களில் பெண்கள் இலவச பயணத்திட்டம், முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை பெறும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து புகைப் படங்கள் பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகை யில் இடம்பெற்றிருந்தன.

    மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், கொரோனா தடுப்பு ஆய்வுப் பணிகள், திருக்கோவில் களில் நிலையான மாத சம்பளம் இன்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச் சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர் களுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகை ரூ.4,000 மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம், உங்கள் தொகுதி யில் முதல்-அமைச்சர் திட்டம், மக்களை தேடி மருத்து வம், இல்லம் தேடிக் கல்வித்திட்டம், இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், அமைப்பு சாரா தொழிலாளர் களுக்கான திட்டங்கள், தமிழ்நாடு முதல்வரின் கனமழை மற்றும் வெள்ள மீட்பு பணி ஆய்வு புகைப்படங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததை நெய்குப்பி ஊராட்சியினை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வை யிட்டனர்.

    • விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சமூக சேவைக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மோகன் அறிவித்துள்ளார்.
    • முதலமைச்சரால் ஒங்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டகலெக்டர் மோகன் வேளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சுதந்திர தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூகசேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் தமிழக முதலமைச்சரால் ஒங்வொருஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும்.

    இந்த விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயது மேற்பட்டவராகவும் இருத்தல்வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமைசேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்துபணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.

    சமூக சேவை நிறுவனம் அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.எனவே இவ்விருதுக்கு தகுதியானவர்கள்.

    தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில்(https://awards.tn.gov.in/) இணையதளவழியாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி நாள் 30.06.2022 ஆகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும்வி ண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதனை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ் (ஊத்தங்கரை), சி.வி.ராஜேந்திரன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த புகைப்பட கண்காட்சியில் தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த அரசு திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் தொடர்பான புகைப்படங்கள், கிருஷ்ணகிரியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் தொடர்பான புகைப்படங்கள், அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் என மொத்தம் 80-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

    அதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், முன்னாள் பால்வள தலைவர் தென்னரசு, முன்னாள் நகராட்சி தலைவர் தங்கமுத்து, முன்னாள் நகராட்சி துணை தலைவர் வெங்கடாசலம், சூளகிரி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஹேம்நாத், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மனோஜ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    என்ஜினீயரிங் கலந்தாய்வை தள்ளிவைக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்கிறது. #TNGovernment #SupremeCourt
    புதுடெல்லி:

    தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிந்த பின்னர் என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்த அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் நீட் நுழைவுத்தேர்வில் தமிழில் எழுதிய மாணவர்களுக்கு மொழிபெயர்ப்பு தவறுகளால் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு நடத்துவதற்கு ஆகஸ்டு 31-ந் தேதி வரை காலநீட்டிப்பு கோரி தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், தமிழக அரசு இப்போது காலநீட்டிப்பு கோருவதற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு தமிழக அரசு வக்கீல் விஜயகுமார், சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை நீட் தேர்வு தொடர்பாக மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதித்துள்ளது. மருத்துவ கலந்தாய்வு முடிவடைந்த பிறகு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை நடத்துவது சரியாக இருக்கும். அங்கு இடம் கிடைக்காத மாணவர்கள் இதில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்க வசதியாக இருக்கும் என்று கூறினார்.

    இதற்கு நீதிபதிகள், ஐகோர்ட்டு மதுரை கிளையின் தீர்ப்பின் நகலை தாக்கல் செய்யுமாறு கூறி, இந்த மனுவை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர். #TNGovernment #SupremeCourt
    தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தர்மபுரி டவுன் பஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தர்மபுரி டவுன் பஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழக அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் மக்கள் நலத்திட்டங்கள், விலையில்லா திட்டங்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள், அரசு விழாக்களின் புகைப்படங்கள், தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்படங்கள், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்ற விழாக்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

    கண்காட்சியை ஏராளமான பயணிகள் மற்றும் பஸ் நிலையத்திற்கு வந்து சென்ற பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதிதாசன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சதீஷ், ஜனார்த்தனன் மற்றும் அலுவலர்கள் செய்து இருந்தனர். 
    ×