search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fire"

    • வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் சிவக்குமார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக உள்ளார்.
    • தொழில் சரிவர இல்லாததால் கடந்த 2 மாதமாக வீட்டு வாடகை செலுத்தாமல் இருந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48). பனியன் நிறுவனத்தில் டெய்லராக உள்ளார். இவருடைய வீட்டில் ஆட்டோ டிரைவர் வீரமணிகண்டன் (34) என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார். தொழில் சரிவர இல்லாததால் கடந்த 2 மாதமாக வீட்டு வாடகை செலுத்தாமல் வீரமணிகண்டன் இருந்துள்ளார். இதுகுறித்து சிவக்குமார் அவரிடம் வாடகை கேட்டு சத்தம் போட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த வீரமணிகண்டன் கடந்த 1-ந் தேதி தீக்குளித்து இறந்தார்.

    இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் வீட்டு உரிமையாளர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்தநிலையில் சிவக்குமாரை தெற்கு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • விசேஷ நிகழ்ச்சிக்கு சமைத்த போது சம்பவம்
    • எதிர்பாராத விதமாக அவரது கைலியில் தீப்பிடித்தது.

    குன்னம் 

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா பண்டாரவடை திருமணஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மக்கள் பாஷா (வயது 45).சமையல் கலைஞர். இவர் ஆர்டரின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடி காடு ஜமாலியா நகரில் உள்ள ஒரு வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சமையல் செய்யச் சென்றார். அங்கு சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது கைலியில் தீப்பிடித்தது.

    பின்னர் மளமளவென உடல் முழுவதும் பரவியது. சக தொழிலாளர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் மக் புல் பாஷா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • எரிவாரி சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு அதில் நெருப்பு பற்றியது
    • அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க போராடினர்

    மணப்பாறை

    திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த வெள்ளாளபட்டி அருகே உள்ள பிச்சைரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது கான்கிரிட் கட்டிடத்தின் ஒரு பகுதியில் குடிசை அமைத்து அதில் சமையல் செய்து வந்துள்ளனர். நேற்று மாலை அவரது மனைவி சமையல் செய்து கொண்டிருந்த போது எரிவாரி சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு அதில் நெருப்பு பற்றியை பார்த்ததும் அனைவரும் வீட்டை விட்டு வெளியில் ஓடி விட்டனர். சிறிது நேரத்தில் சிலிண்டர் வெடித்து நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க போராடினர். ஆனாலும் சிறிது நேரத்தில் குடிசை முழுவதுமாக எரிந்ததுடன் அதில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது. சிலிண்டர் வெடித்ததில் வீட்டிலும் சேதாரம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தில் நேற்று இரவில் திடீர் என தீ பற்றியது.
    • மரத்தின் அடிப்பகுதி தீயினால் கருகியதால் மரம் எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயமும் எழுந்தது.

    களக்காடு:

    களக்காடு-சேரன்மகாதேவி சாலையில் பத்மநேரி பெரியகுளத்தின் கரையில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தில் நேற்று இரவில் திடீர் என தீ பற்றியது.

    தீயணைக்கும் பணி

    காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மரம் முழுவதும் பரவி பற்றி எரிந்தது. மேலும் மரத்தின் அடிப்பகுதி தீயினால் கருகி சேதமடைந்ததால், மரம் எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயமும் எழுந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக நாங்குநேரி தீ அணைப்பு நிலையத்திற்கும் நெடுஞ்சாலைதுறை யினருக்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து நிலைய அதிகாரி பாபநாசம் தலைமையில் விரைந்து வந்த தீ அணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைதுறை ஊழி யர்கள் துரிதமாக செயல்பட்டு மரத்தை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

    போக்குவரத்து பாதிப்பு

    இதையடுத்து களக்காடு-சேரன்மகாதேவி சாலையில் போக்குவரத்து தடைபட்டது. தீ கட்டுப்படுத்தப்பட்டதும் அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது.

    தீ விபத்து ஏற்பட்ட மரத்தின் அருகே அறுவடை செய்யப்பட்ட வாழைமர குப்பைகளை கொட்டப்பட்டுள்ளது. அதற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். அந்த தீ மரத்திலும் பற்றியதாக கூறப்படுகிறது.

    • மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ எரிந்து வருகிறது
    • 4-வது நாளாக தீ எரிந்து வருகிறது

    கரூர்

    கரூர் வாங்கல் சாலையில் அரசு காலனி அருகே கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் கடந்த 31-ந்தேதி மாலை 5.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. கரூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தீயை முழுவதுமாக அணைக்க முடியவில்லை. 4-வது நாளாக நேற்றும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறி வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் மாலையில் நிர்மலா தேவி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
    • வலி தாங்க முடியாமல் துடித்த நிர்மலாதேவி அலறியபடி வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் வந்து விழுந்தார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் இலத்தூர் அருகே உள்ள வள்ளியம்மாள்புரம் இந்திரா காலனி தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மனைவி நிர்மலா தேவி(வயது 34). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி, ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை யில் நிர்மலா தேவி வீட்டில் சமையல் செய்து கொண்டி ருந்தார். அப்போது எதிர்பா ராதவிதமாக அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் தடுமாறவே, அவரது சேலையில் தீப்பற்றியுள்ளது. தீ மளமளவென அவரது இடுப்பு பகுதிக்கு கீழ் வரை பற்றியது.

    வலி தாங்க முடியாமல் துடித்த நிர்மலாதேவி அலறியபடி வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் வந்து விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரும்புகை-மூச்சுத்திணறலால் மக்கள் அவதி அடைந்தனர்.
    • தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் - சிறுமுகை ரோட்டில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே ஏராளமான பழைய கார்கள் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. அங்கு சேகரமாகும் குப்பைகள் சிறுமுகை மின்வாரிய பவர் ஹவுஸ் அருகே உள்ள குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் அந்த குப்பை தொட்டியில் நேற்று காலை மர்ம நபர்கள் தீ வைத்தனர். கார் உதிரிபாக கழிவு என்பதால் தீ மளமளவென பற்றி எரிந்து பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில் சிறுமுகை ரோட்டில் கார் உதிரி பாகங்களின் கழிவுகள் அதிகம் கொட்டப்படுகிறது. இதில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதால் தீ எளிதில் பரவி புகை மூட்டம் ஏற்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை தரம் பிரித்து பெற்றுச்சென்று அதனை முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் திடீர் என்று தீப்பற்றி எரிந்தது.
    • வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் நொய்யல் -வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் இருந்து திருக்காடுதுறை செல்லும் பிரிவு சாலை அருகே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமான கழிவுகளை கொட்டி வருகின்றனர். இந்த கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது .அதை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் முடியவில்லை. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கழிவுகளில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    • பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல் பாளையத்தை சேர்ந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரும்பை அறுவடை செய்த பின் விவசாய தோட்டத்திலேயே கரும்பு தோகைகளை போட்டிருந்தார்.
    • காய்ந்து போன கரும்பு தொகைகளுக்கு தீ வைத்துள்ளார்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல் பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி விவசாயி, இவர் தனது விவசாய தோட்டத்தில் கருப்பு சாகுபடி செய்திருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கரும்பை அறுவடை செய்த பின் விவசாய தோட்டத்திலேயே கரும்பு தோகைகளை போட்டிருந்தார். காய்ந்து போன கரும்பு தொகைகளுக்கு தீ வைத்துள்ளார்.

    அப்போது காற்று பலமாக வீசியதால் அருகில் விவசாயம் செய்யப்படாமல் பல்வேறு செடி கொடிகள் முளைத்து காய்ந்து இருந்த செடிகளில் தீ பரவியது. அப்பகுதியில் இருந்த பொது மக்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் வேகமாக அருகில் இருந்த தோட்டத்துக்கும் பரவியது. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததனர்.

    தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு பரவாமல் தடுத்தனர் இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கறம்பக்குடி அருகே தைல மரக்காட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது
    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன் பத்தை ஊராட்சி குழப்பென்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன் விவசாயி இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் தைல மரக்காடு உள்ளது. இந்த தைல மரக்காடு நேற்று திடீரென தீ பற்றி எரிந்தது. இது குறித்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் தகவல் அறிந்த கறம்பக்குடி தீயணைப்பு நிலை அலுவலர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அனைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    • மாட்டுக் கொட்டகை தீப்பற்றி எரிந்து நாசமானது
    • கீரமங்கலம் போலீசார் விசாரணை

    புதுக்கோட்டை, 

    கீரமங்கலம் அருகே உள்ள பெரியாளூர் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர், விவசாயி. நேற்று முன்தினம் இரவு ஜெய்சங்கர் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது மாட்டுக் கொட்டகை தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஜெய்சங்கர் குடும்பத்தினர் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். அதற்குள் தீமளமளவென பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் மாட்டுக்கொட்டகை எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது.
    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

    கரூர்

    கரூர் நடையனூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 55). இவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை.இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தென்னை மரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் ஏராளமான தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.

    ×