என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
இலத்தூர் அருகே சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து பெண் சாவு
- நேற்று முன்தினம் மாலையில் நிர்மலா தேவி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
- வலி தாங்க முடியாமல் துடித்த நிர்மலாதேவி அலறியபடி வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் வந்து விழுந்தார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் இலத்தூர் அருகே உள்ள வள்ளியம்மாள்புரம் இந்திரா காலனி தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மனைவி நிர்மலா தேவி(வயது 34). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி, ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை யில் நிர்மலா தேவி வீட்டில் சமையல் செய்து கொண்டி ருந்தார். அப்போது எதிர்பா ராதவிதமாக அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் தடுமாறவே, அவரது சேலையில் தீப்பற்றியுள்ளது. தீ மளமளவென அவரது இடுப்பு பகுதிக்கு கீழ் வரை பற்றியது.
வலி தாங்க முடியாமல் துடித்த நிர்மலாதேவி அலறியபடி வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் வந்து விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.