search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "federal government"

    பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது என்று மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது. #PetrolDieselPriceHike #FuelPriceHike #FederalGovernment
    புதுடெல்லி:

    மத்திய அரசு, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 வீதம் உற்பத்தி வரியாக வசூலிக்கிறது. டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33 வீதம் உற்பத்தி வரி வசூலிக்கிறது. இதுதவிர, மாநில அரசுகள் மதிப்பு கூட்டு வரி (வாட்) வசூலித்து வருகின்றன.

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும்வகையில், உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்து விட்டது. இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-



    பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது. ஒரு ரூபாய் குறைத்தால் கூட ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

    உற்பத்தி வரியை குறைப்பதால், நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். நடப்பு கணக்கு பற்றாக்குறையிலும் தாக்கம் ஏற்படும். இதனால், வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கிடைக்காமல் போய்விடும். இவையெல்லாம், வரி குறைப்பால் ஏற்படும் பாதகங்கள். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதும் சரியான தீர்வு அல்ல.

    நிதி நிலைமை வலிமை அடைந்தால் மட்டுமே வரி குறைப்பு செய்ய முடியும். அதற்கு வருமான வரி, ஜி.எஸ்.டி. செலுத்துவோர் எண்ணிக்கை உயர வேண்டும். அதன்மூலம், வரி வருவாய் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான், உற்பத்தி வரியை குறைக்க முடியும். அதுவரை, பெட்ரோலிய பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாயைத்தான் சார்ந்து இருக்க வேண்டி உள்ளது.

    மத்திய அரசு ஏற்கனவே ரூ.98 ஆயிரம் கோடிக்கு வருமான வரி சலுகையும், ரூ.80 ஆயிரம் கோடிக்கு ஜி.எஸ்.டி. குறைப்பும் அளித்துள்ளது அதனால்தான், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்தபோதிலும், பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இதற்கு மேல், நிவாரணம் வழங்க முடியாது. மக்கள், தாங்கள் பயன்படுத்தும் பெட்ரோலுக்கு, உரிய விலையை கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

    பெட்ரோலிய பொருட்கள் மீது மாநில அரசுகள் ‘வாட்’ வரி விதிக்கின்றன. அத்துடன், மத்திய அரசின் வரி வருவாயில் 42 சதவீதம் பங்கைப் பெறுகின்றன. இருந்தாலும், மாநில அரசுகளும் ‘வாட்’ வரியை குறைக்கும் நிலைமையில் இல்லை.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இனிவரும் நாட்களில் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை நேற்றும் உயர்ந்தது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்தது. அதனால் ரூ.83.91-க்கு பெட்ரோல் விற்கப்பட்டது. டீசல் விலை 23 காசுகள் உயர்ந்து, அதன் விலை ரூ.76.98 ஆனது. #PetrolDieselPriceHike #FuelPriceHike #FederalGovernment 
    அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க தனிக்கோர்ட்டுகள் அமைப்பதில் மத்திய அரசு இன்னும் முழுஅளவில் தயாராகவில்லை என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
    புதுடெல்லி:

    வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க பல்வேறு மாநிலங்களில் 12 தனிக்கோர்ட்டுகளை அமைக்கவேண்டும் என்றும், அவை கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்றும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

    பின்னர் இது தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் டெல்லியில் 2 தனிக்கோர்ட்டுகளும் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் தலா ஒரு தனிக்கோர்ட்டும் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் தனிக்கோர்ட்டுகள் அமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் ஐகோர்ட்டுகள் அறிவிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க தனிக்கோர்ட்டுகள் அமைப்பதில் மத்திய அரசு இன்னும் முழுஅளவில் தயாராகவில்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக சில உத்தரவுகளை பிறப்பிக்கும் கட்டாய சூழ்நிலையை அரசு ஏற்படுத்துவதாகவும், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தாங்கள் அதை விரும்பவில்லை என்றும் கூறினார்கள். 
    மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு மாத காலம் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்து உள்ளது. #RandeepSurjewala #Congress
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் கட்சியின் மாநில தலைவர்கள், மாநில பொறுப்பு வகிக்கும் பொதுச்செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில், மத்தியில் உள்ள மோடி ஆட்சியில் ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு மற்றும் பல்வேறு ஊழல்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது என்றும், இதற்காக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு மாத காலம் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மாநில தலைநகரங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெறும்.

    ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடந்து உள்ளது. இதுபற்றி பாராளுமன்ற கூட்டுக்குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறோம். இதில் இருந்து நாங்கள் பின்வாங்கப் போவது இல்லை.

    கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏராளமான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு உள்ளது. அங்கு ஏற்பட்ட மழை, வெள்ள சேதத்தை தேசிய பேரழிவாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும். அந்த மாநிலத்துக்கு கூடுதல் நிதி உதவி அளிக்க வேண்டும்.

    இதுபோன்ற பிரச்சினைகளை பிரதமர் மோடி அரசியல் நோக்கத்துடன் பார்க்கக்கூடாது. நிதி உதவி வழங்குவதில் பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களுக்கும், பாரதீய ஜனதா அல்லாத கட்சிகளின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கும் இடையே அவர் பாகுபாடு காட்டுவதை மோடி நிறுத்திக் கொள்ளவேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு கேரள, கர்நாடக மக்களுக்கு உதவி செய்யவேண்டும்.

    கேரளாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் நிவாரண நிதி வழங்கி வருகின்றன. காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரண உதவியாக வழங்க வேண்டும்.  #RandeepSurjewala #Congress 
    குழந்தைகள் நலனுக்காக தனித்துறை உருவாக்கினால் என்ன? என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
    சென்னை:

    சென்னை அருகே 15 வயது சிறுவனை பாலியல் கொடுமை செய்ததாக வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘குழந்தைகளை பாலியல் கொடுமை செய்பவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று 2015-ம் ஆண்டு தெரிவித்தார்.

    இந்த உத்தரவை மத்திய அரசு முறையாக அமல்படுத்தவில்லை என மத்திய அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் நேற்று விசாரித்தார்.

    அப்போது, ‘குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு வெளிநபர்கள் மட்டும் காரணம் அல்ல. பெற்றோரும் காரணமாக உள்ளனர். 7 மாதங்களாக ஒரு சிறுமியை பலர் பாலியல் கொடுமை செய்துள்ளனர். அந்த சிறுமியின் தாயார் என்ன செய்துகொண்டு இருந்தார்? தன் மகளை கூட கவனிக்க முடியாதா? கூட்டுக்குடும்ப முறை ஒழிந்ததால், பெரியவர்களின் அரவணைப்பு இல்லாமல் குழந்தைகள் வளர்கின்றனர். திருமணமானவுடன் தனிக்குடித்தனம் என்றாகிவிட்டது. இதில் சில நன்மை இருந்தாலும், சில பாதிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    மேலும், ‘விவாகரத்து பெற்றவர்களின் குழந்தை தாயிடம் மட்டுமோ அல்லது தந்தையிடம் மட்டுமோ வாழ்வதால் மனதளவில் பாதிக்கப்படுகிறது. இருவருடனும் சேர்ந்து குழந்தை வளர்ந்தால் தான் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கும்’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து, ‘குழந்தைகள் நலன் கருதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையை, பெண்கள் நலத்துறை என்றும், குழந்தைகள் நலத்துறை என்றும் மத்திய அரசு இரண்டாக பிரித்தால் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து மத்திய அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயனுக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
    ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்துவிட்டதாக, தமிழக அரசு தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. #RajivGandhiKillers
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி கடந்த 2014-ம் ஆண்டு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.

    இதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.

    தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்காலதடை விதித்து உத்தரவிட்டது.

    இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு மனு அளித்தனர்.

    இதனையடுத்து, அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாகவும், எனவே இதற்கு ஒப்புதல் வழங்கவேண்டும் என்றும் கோரி மத்திய அரசுக்கு கடந்த 2016-ம் ஆண்டு கடிதம் எழுதியது.

    இந்த நிலையில் தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி விசாரணைக்கு வந்த போது, 7 பேரையும் விடுவிப்பது குறித்த மத்திய அரசின் கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 16-ந் தேதி இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு வெளியிட்டது. அந்த உத்தரவில், ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சில வெளிநாட்டு அமைப்புக்களுக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளதால் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசு விடுத்துள்ள கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காது என்று கூறப்பட்டு இருந்தது.


    இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி ஆஜராகி, இந்த வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்ய அனுமதி கோரி அனுப்பப்பட்ட மனுவை மத்திய அரசு கடந்த ஏப்ரல் 16-ந் தேதி பரிசீலிக்க மறுத்து அரசாணை வெளியிட்டிருப்பதாக கூறி, அந்த ஆணையின் நகலை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அத்துடன் மத்திய அரசு மறுப்பு தெரிவித்து உள்ளதால் இந்த வழக்கை முடித்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

    மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், மத்திய அரசு ஏற்கனவே தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து அரசாணை வெளியிட்டு இருப்பதால் இந்த வழக்கை முடித்து வைக்கலாம் என்று கூறினார்.

    முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கோபால் சங்கரநாராயணன், பிரபு ராமசுப்பிரமணியன் ஆகியோரும் தங்கள் வாதத்தின் போது, மத்திய அரசு 7 பேர் விடுதலைக்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்து அரசாணை வெளியிட்டுள்ளதால் தற்போது நிலுவையில் உள்ள வழக்கை முடித்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். #RajivGandhiKillers
    தொண்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நன்கொடைகளை கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட என்.ஜி.ஓ.க்கள் என அழைக்கப்படும் தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டு நன்கொடைகள் பெற அனுமதிக்கப்படுகின்றன. அவை நிதி பெறுவதிலும், அவற்றை உள்நாட்டில் செலவழிப்பதிலும் ஏராளமான புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

    இதை கருத்தில்கொண்டு, தொண்டு நிறுவனங்கள் பெறும் வெளிநாட்டு நன்கொடைகளை கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான இணையதள வசதி நேற்று தொடங்கப்பட்டது.

    அதில், வெளிநாட்டு நன்கொடை பெறப்பட்ட விவரங்களும், அப்பணம் இந்தியாவில் செலவழிக்கப்படும் விவரங்களும் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 
    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகள் சாதனைகள் எதையும் செய்யவில்லை. வேதனைகளைத்தான் நமக்கு தந்துள்ளது என தினகரன் கூறியுள்ளார். #dinakaran #pmmodi #centralgovernment

    மதுரை:

    மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று மதுரை வந்தார். ஓட்டலில் தங்கியிருந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா தான் உண்ணும் உணவுப்பட்டியலை அவரே எழுதுவார். இதை நான் பல முறை பார்த்துள்ளேன். ஜெயலலிதா மருத்துவ மனையில் பேசிய ஆடியோவை விசாரணை ஆணையம் வெளியிட்டு இருப்பது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்புவதற்காகத் தான்.

    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகள் சாதனைகள் எதையும் செய்யவில்லை. வேதனைகளைத்தான் நமக்கு தந்துள்ளது.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.  #dinakaran #pmmodi #centralgovernment

    ×