என் மலர்
செய்திகள்

மத்திய அரசு சாதனைகள் செய்யவில்லை, வேதனையைத்தான் தந்துள்ளது: தினகரன் பேட்டி
மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகள் சாதனைகள் எதையும் செய்யவில்லை. வேதனைகளைத்தான் நமக்கு தந்துள்ளது என தினகரன் கூறியுள்ளார். #dinakaran #pmmodi #centralgovernment
மதுரை:
மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று மதுரை வந்தார். ஓட்டலில் தங்கியிருந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதா தான் உண்ணும் உணவுப்பட்டியலை அவரே எழுதுவார். இதை நான் பல முறை பார்த்துள்ளேன். ஜெயலலிதா மருத்துவ மனையில் பேசிய ஆடியோவை விசாரணை ஆணையம் வெளியிட்டு இருப்பது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்புவதற்காகத் தான்.
மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகள் சாதனைகள் எதையும் செய்யவில்லை. வேதனைகளைத்தான் நமக்கு தந்துள்ளது.
மேற்கண்டவாறு அவர் கூறினார். #dinakaran #pmmodi #centralgovernment
Next Story






