search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Express train"

    சென்னை-ராமேசுவரம் இடையே பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் சிவகங்கை வட்ட அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
    சிவகங்கை:

    சிவகங்கை வட்ட அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கக்கூட்டம், அதன் தலைவர் அழகர்சாமி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் இக்னேசியஸ் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். இந்த கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் மெய்யப்பன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் வடிவேலு, வட்ட பொருளாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், மாதந்தோறும் மருத்துவ படி ரூ.1,000 வழங்க வேண்டும், பண்டிகை முன்பணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், விவசாயிகளின் கடனை ரத்துசெய்ய வேண்டும், மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக தொண்டிக்கு அகல ரெயில் பாதை அமைக்க வேண்டும், சென்னை-ராமேசுவரம் இடையே பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கருப்பையா நன்றி கூறினார்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. #KeralaRain #Keralaflood #KeralaTrain
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    எர்ணாகுளம்-காரைக்கால் எக்ஸ்பிரஸ்(வண்டி எண்:16188) பாலக்காடு-எர்ணாகுளம் இடையேயும், மங்களூர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ்(16857) கோவை-மங்களூர் இடையேயும், திருவனந்தபுரம்-சென்னை மெயில்(12624) திருவனந்தபுரம்-பாலக்காடு இடையேயும், மங்களூர்-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ்(12686) மங்களூர்-பாலக்காடு இடையேயும், திருவனந்தபுரம்-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ்(12696) திருவனந்தபுரம்-பாலக்காடு இடையேயும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    ஆலப்புழா-சென்னை(22640) ஆலப்புழா-கோவை இடையே இன்றும், நாளையும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் (22639) கோவை-ஆலப்புழா இடையே இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #KeralaRain #Keralaflood
    நடுவழியில் ரெயில் ரத்து செய்யப்பட்டதால் வாணியம்பாடி ரெயில் நிலையத்தை பயணிகள் முற்றுகையிட்டனர்.
    ஜோலார்பேட்டை:

    ஆந்திர மாநிலம் சீராலா ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் புறப்பட்டது. அந்த ரெயில் நேற்று மதியம் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

    சிறிதுநேரம் கழித்து அந்த ரெயில் ரத்து செய்யப்பட்டதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்ததாக வாணியம்பாடி ரெயில் நிலைய அதிகாரி தெரிவித்தார். ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். மேலும் திடீரென ரத்து செய்தால், நாங்கள் எப்படி செல்வது என்று பயணிகள் வாணியம்பாடி ரெயில் நிலையத்தையும், ரெயில் நிலைய அதிகாரியையும் முற்றுகையிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பயணிகளிடம் கேரள மாநிலத்தில் அதிகளவு மழை பெய்ததால் ரெயில் திடீரென்று ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர். அதன்பிறகு பயணிகள் கலைந்து சென்றனர்.

    ரெயிலில் இருந்த சுமார் 1000 பயணிகளை சென்னை - மங்களூரு நோக்கி செல்லும் ரெயிலில் ஏற்றிவிட்டனர். அதன்பிறகு ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வரை சென்று பயணிகளை இறக்கிவிட்டு, ரெயில் மீண்டும் சென்னை நோக்கி திரும்பி சென்றது.

    மீதமுள்ள 1,500-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை - கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலும், சென்னை - திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாலக்காடு வரை பாதுகாப்புடன், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அனுப்பி வைத்தனர்.

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் பரபரப்பாக காணப்பட்டது. #tamilnews
    டெல்லியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 20 பசுமாடுகள் பரிதாபமாக பலியானது. #ExpressTrain #Cow
    புதுடெல்லி:

    அரியானா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டம் கல்கா நகரில் இருந்து டெல்லியின் வடமேற்கு பகுதியில் நரேலா நகருக்கு கல்கா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் மாலை சென்றுகொண்டிருந்தது. டெல்லியின் ஹோலிம்பி காலன் மற்றும் நரேலா ரெயில் நிலையங்களுக்கு இடையே இந்த ரெயில் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது அங்குள்ள தண்டவாளத்தை பசுமாடுகள் கூட்டமாக கடந்து செல்ல முயன்றன.

    இதைப்பார்த்ததும் ரெயிலின் ஓட்டுநர் ‘எமர்ஜென்சி பிரேக்’கை பயன்படுத்தினார். ஆனாலும் ரெயில் அதிகவேகத்தில் சென்றதால் நிற்காமல் மாடுகளின் மீது மோதிவிட்டு சென்றது.

    இதில் 20 மாடுகள் பரிதாபமாக செத்தன. ரெயில் தண்டவாளத்தில் சிறிய அளவில் சேதாரங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று மாடுகளின் உடலை அப்புறப்படுத்திவிட்டு, தண்டவாளத்தை சரி செய்தனர். இதையடுத்து அங்கு ரெயில் போக்குவரத்து சீரானது. 
    எக்ஸ்பிரஸ் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கூடுவாஞ்சேரி:

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த 24-ந்தேதி காலை திருமால்பூர் மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் தடுப்பு சுவரில் மோதி பலியானார்கள்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து எக்ஸ்பிரஸ் தண்டவாள பாதையில் இயக்கப்பட்டு வந்த திருமால்பூர் பாஸ்ட் மின்சார ரெயில் நிறுத்தப்பட்டது. அந்த ரெயில் மின்சார ரெயில்கள் செல்லும் தண்டவாள பாதையில் இயக்கப்பட்டது.

    எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பாதையில் இயக்கப்படும் மின்சார ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் மட்டும் நிற்பதால் அலுவலகம் செல்பவர்கள் இந்த மின்சார ரெயிலில் அதிகமாக பயணம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் எக்ஸ்பிரஸ் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் இன்று காலை பயணிகள் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். எக்ஸ்பிரஸ் பாதையில் மீண்டும் மின்சார ரெயில்களை இயக்கக்கோரி போராட்டம் நடத்தினார்கள்.

    சென்னை நோக்கி வந்த காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரெயிலையும், மின்சார ரெயிலையும் மறித்தனர். இதனால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

    பயணிகள் போராட்டம் காரணமாக புதுவை எக்ஸ்பிரஸ் ரெயில் சிங்கபெருமாள் கோவிலிலும், திருமால்பூர் ரெயில் மறைமலைநகரிலும் நிறுத்தப்பட்டன. மேலும் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் செய்தவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் பிறகு பயணிகள் மறியலை கைவிட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கம்போல் மின்சார ரெயில் போக்குவரத்து நடந்தது. #tamilnews
    மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணியிடம் ரூ.4 லட்சத்தை திருடிச்சென்ற மர்மநபரை ரெயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    திருச்சி:

    கரூர் மாவட்டம், அரவக் குறிச்சி அருகே மாதிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீரங்கராயன் (வயது60). விவசாயியான இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருவதாக கூறப்படுகிறது. சீரங்கராயன் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கரூருக்கு குளிர்சாதன வசதியான பி.2 பெட்டியில் பயணம் செய்தார்.

    அந்த ரெயில், நேற்று அதிகாலை 5 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் 2-வது நடைமேடைக்கு வந்தது. அப்போது சீரங்கராயன் எழுந்து கழிவறைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது அவர் இருந்த இருக்கையில் வைத்திருந்த சூட்கேசை காணாது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த சூட்கேசில் ரூ.4 லட்சம் மற்றும் 2 ஏ.டி.எம்.கார்டுகள், பான் கார்டு ஆகியவை இருந்தன. மர்மநபர் யாரோ சூட்கேசை திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜங்ஷன் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சீரங்கராயன் புகார் அளித்தார். அதன்பேரில், ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, சீரங்கராயனின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில் அவரது வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம். மூலம் ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஏ.டி.எம். கார்டு வைத்திருந்த அட்டையில் அதன் பின் பகுதியில் ரகசிய குறியீடு எண்ணையும் அவர் எழுதி வைத்திருந்துள்ளார். இதனால் அந்த கார்டு மூலம் மர்மநபர் ரூ.10 ஆயிரத்தை எடுத்திருக்கிறார்.

    சீரங்கராயன் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை வைத்து எந்த ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கப்பட்டது என்பதையும், அந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபரின் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் ரெயிலில் பயணியிடம் ரூ.4 லட்சம் திருட்டு சம்பவம் தொடர்பாக ஜங்ஷன் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இது குறித்து ரெயில்வே போலீசார் கூறுகையில், “சீரங்கராயன் சென்னையில் அவரது நண்பர் ஒருவரிடம் ரூ.4 லட்சம் கடனாக வாங்கி வந்ததாக தெரிவித்திருக்கிறார். அவர் பணம் கொண்டு வருவதை கவனித்த மர்மநபர் அதே ரெயிலில் பயணம் செய்து வந்தாரா? அல்லது அதே பெட்டியில் அவருடன் பயணம் செய்து வந்த நபர் கைவரிசையை காட்டினாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். மேலும் அந்த பெட்டியில் பணியில் இருந்த ரெயில்வே ஊழியர் ஒருவரையும் பிடித்து விசாரிக்கப்படு கிறது” என்றனர். 
    ரெயிலில் கடத்தி கொண்டு வரப்பட்ட 15 கிலோ ‘கஞ்சா’வை மாறுவேடத்தில் இருந்த போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி கொண்டு வந்த ஆசாமி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    மத்திய பிரதேச மாநிலம் தான்பாத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புலாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    அந்த ரெயிலில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதாக போதை பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனால் உஷார் அடைந்த போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தனர். சேலம் மாவட்டம் வீரபாண்டியில் இருந்தே மாறுவேடத்தில் கண்காணித்தபடி இருந்தனர்.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில் வந்து நின்றது. போதை பொருள் தடுப்பு போலீசார் கஞ்சா கடத்தி கொண்டு வருவதாக கூறப்பட்ட பொது பெட்டியில் ஏறி சோதனை நடத்தினர்.

    அங்கு ஒரு ‘மர்ம’ பை கிடந்தது. அதை போலீசார் பிரித்து பார்க்கும் போது அதில் 15 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஆனால் அதனை கடத்தி கொண்டு வந்த ஆசாமி யார் என தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×