search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode News"

    • போதை பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த பிரகாஷ், டார ராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    • மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு டவுன் பகுதியில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தடை செய்ய ப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 20) டார ராம் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த பான் மசாலா, ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 275 மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை போல் புளிய ம்பட்டி-சக்தி ரோடு பகுதியில் போதை பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் நஞ்சப்பன் என்ற முருகேசன் (37) என்பவரை புளியம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் வைத்திருந்த போதை பொருள்களை போலீசார் பறி முதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்சை வளைவு அருகே இருந்த சுவற்றில் மோதி நிறுத்தினார்.
    • இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாளவாடி:

    ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று நேற்று மாலை திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது 24-வது கொண்டை ஊசி வளைவு அருகே செல்லும்போது திடீரென பஸ்சில் டமால் என்று ஒரு சத்தம் கேட்டு பஸ் பின்னோக்கி சென்றுள்ளது.

    டிரைவரின் சாமர்த்தியத்தால் பஸ்சை வளைவு அருகே இருந்த சுவற்றில் மோதி நிறுத்தினார். இதனால் பெரு அசம்பா விதம் தவிர்க்கப்பட்டது.

    பஸ்சில் இருந்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பஸ்சில் இருந்த பயணிகள் அவ்வழியாக சென்ற சரக்கு வாகனம் மற்றும் மாற்று பஸ்சில் தாளவாடி மற்றும் மைசூர் சென்றனர்.

    இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கொள்ளையார்கள் நகை- பணத்தையடுத்து மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
    • தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கந்தசாமிபாளையம் நெடுங்காட்டு தோட்டம் பகு தியைச் சேர்ந்தவர் சுப்பிர மணி (85). இவருடைய மனைவி கண்ணம்மாள். இவர்கள் அந்த பகு தியில் உள்ள தோட்டத்து வீட்டில் குடியிருந்து விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தோட்டத்து வீட்டில் சுப்பிரமணியும், கண்ணம்மாளும் இருந்தனர். அப்போது முக மூடி அணிந்த ஆசாமிகள் 3 பேர் வீட்டின் சுற்றுச்சுவர் ஏறி குதித்து வீட்டின் உள்ளே புகுந்தனர்.

    இதையடுத்து அவர்களி டம் முகமூடி ஆசாமிகள் நகை, பணத்தை தருமாறு கூறினர். அதற்கு அவர்கள் மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த முகமூடி ஆசாமிகள் கணவன், மனைவி கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதனால் செய்வது அறியாமல் கண்ணம்மாள் தனது கழுத்தில் அணிந்தி ருந்த 6 பவுன் தாலிசங்கிலியை கழற்றி கொடுத்தார்.

    பின்னர் வீட்டின் பீரோவை திறந்து அதில் இருந்த 4 பவுன் நகை, ரூ.55 ஆயிரத்தையும் எடுத்து கொடுத்தார். இதையடுத்து கொள்ளையார்கள் நகை- பணத்தையடுத்து மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதையடுத்து கணவன், மனைவி 2 பேரும் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவர்க ளுடைய மகன் ஆனந்தன் ஆகியோர் அங்கு சென்று கதவை திறந்து பெற் றோரை மீட்டார்.

    இது குறித்து ஆனந்தன் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத் துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் சாமிநாதபுரம் பஸ் நிறுத் தத்தில் சந்தேகத்துக்கிடமான 3 மர்ம நபர்கள் பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சுப் பிரமணியின் தோட்டத்து வீட்டை நோக்கி சென்றதும், அதே நபர்கள் இரவு 9 மணி அளவில் அதே பஸ் நிறுத்தம் 2 சென்று பஸ்சில் ஏறி சென்ற தும் தெரியவந்தது.

    எனவே அவர்கள் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க லாம் என்று கூறப்படுகிறது. தகவல் கிடைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகையை பதிவு செய்தனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

    இந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பாவையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிரா க்களையும் ஆய்வு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விற்பனைக்காக வைத்திருந்த 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என கோபி, பெருந்துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது விஜயமங்கலம்- ஊத்துக்குளி ரோடு டாஸ்மாக் கடை, மூல வாய்க்கால் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலை சேர்ந்த சிவந்தி கண்ணன் மகன் ராஜமாணிக்கம் (வயது 44),

    சிவகங்கை மாவட்டம் மருதவாயில் பகுதியைச் சேர்ந்த காசி மகன் கோபால் (44) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • தனஸ்ரீ வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் காந்திபன். இவரது மகள் தனஸ்ரீ (வயது 31). இவருக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு போடிநாயக்கனூரை சேர்ந்த கார்த்திக் பிரபு என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

    இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். கணவன், மனைவிக்கு இடை யே ஏற்பட்ட குடும்ப பிரச்ச னை காரணமாக இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    இதனால் தனஸ்ரீ நீண்ட நாட்களாக மன வேதனையில் இருந்து வந்து ள்ளார். இந்நிலையில் சம்பவ த்தன்று தனஸ்ரீ வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பின்னர் இது குறித்து அவரது தந்தை காந்தி பன் மொடக்கு றிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • விற்பனைக்காக வைத்திருந்த 25 மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாள வாடி சுற்றுவட்டார பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என தாளவாடி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டி ருந்த தாளவாடி திகினாரை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மஞ்சையா மகன் மணி என்ற ஐயப்பன் (வயது 30), தாளவாடி பனகள்ளி பகுதியை சேர்ந்த மாதேவா மகன் பசுவராஜ் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 25 மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் பெருந்துறை பகுதியில் அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் துரைசாமி மகன் ஜெய்சங்கர் (39) என்பவர் மீது பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர் விற்பனை க்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது.
    • இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

    தாளவாடி:

    திம்பம் மலைப்பாதையில் கடந்த சில வாரங்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருகிறது. மாலை, இரவு நேரங்களிலும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலைவு வறுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. ஆசனூரில் இருந்து திம்பம் மலைப்பாதை 20-வது கொண்டை ஊசி வளைவு வரை பனிமூட்டம் இருந்தது.

    இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.காலை 10 மணி அளவில் இந்த பனிமூட்டம் விலகியது. பின்னர் வாகனங்கள் சீராக செல்ல தொடங்கின.

    திம்பம் பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பணி மூட்டத்தின் அழகை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

    • போலீசார் ரோந்து சென்றபோது சீட்டு வைத்து சூதாடிய அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
    • தப்பி ஓடிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அடுத்துள்ள முளியனூர் பிரிவு டாஸ்மாக் கடை அருகே உள்ள ஒரு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடு வதாக அம்மாப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது சீட்டு வைத்து சூதாடிய அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

    அப்போது 52 சீட்டுகள் வைத்து கொண்டு உள்ளே வெளியே வெட்டு சீட்டு சூதாட்டம் ஆடியதாக குருவரெட்டியூர் பி.கே.புதூரை சேர்ந்த பால்ராஜ் (40), பொன்னுசாமி (35), நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த மோகன் குமார் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் சீட்டாடும் இடத்தில் இருந்த 9 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • ரூ.2 லட்சம் மதிப்பிலான 5 டன் பழைய இரும்பு பொருள்களை காணவில்லை.
    • 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, செங்காடு பகுதியை சேர்ந்தவர் சுசீந்திரன் (26). இவர் ஈரோடு, பெருந்துறை ரோட்டில் உள்ள பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

    அந்த கட்டுமான நிறுவ னத்துக்கு சொந்தமான இரு ம்பு பொருள்கள், பெயிண்ட் டிரம்கள் என 5 டன் எடையிலான பழைய இரும்பு பொருள்கள் நிறுவனத்தின் கிடங்கில் போட்டு வைக்கப்ப ட்டிருந்தன.

    அந்த கிடங்கில் ராஜேஷ் என்பவர் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இந்த பழைய இரும்பு பொருள்களை அலாவுதீன்பாஷா என்பவர் வாங்கி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வை யாளர் சுசீந்திரன் கடந்த 16-ந் தேதி கிடங்குக்கு சென்று பார்த்தபோது அங்கு வைக்க ப்பட்டிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 5 டன் பழைய இரும்பு பொருள்களை காணவில்லை.

    விசாரணையில் பழைய இரும்பு பொருள்களை வாங்கிச் செல்லும் அலாவூதீன் பாஷா மற்றும் வாட்ச்மேன் ராஜேஷ் மற்றும் 5 பேர் கொ ண்ட கும்பல் ஒரு வேனில் 5 டன் பழைய இரும்பு பொருள்களை எடுத்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து சுசீந்திரன் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அலா வுதீன்பாஷா, ராஜேஷ் மற்றும் இரும்பு பொரு ள்களை திருடி சென்ற 5 பேர் என 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வேன் டேவிட் மீது மோதியது.
    • தப்பித்து சென்ற வேன் டிரைவர் மணி என்பவரை மடக்கி பிடித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியம ங்கலம் காவல் நிலைய எல்லை யில் கோவை ரோட்டில் செண்ப கப்புதூர் அருகே பெருந்து றையைச் சேர்ந்த டேவிட் (வயது 46) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அதிவேகமா கவும் அஜாக்கிரதையாகவும் வந்த ஒரு வேன் டேவிட் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தார். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய அந்த வேன் டிரைவர் வேனை நிறுத்தாமல் வேகமாக சென்று விட்டார்.

    இதை நேரில் பார்த்த பொதுமக்கள் சத்தியமங்க லம் போலீசாருக்கு உடனடி யாக தகவல் கொடுத்தனர். தகவலறிந்த இன்ஸ்பெக்டர் முருகேசன் சத்தி பேருந்து நிலைய சி.சி.டி.வி. கண்காணிப்பு அறையில் இருந்த தலைமை காவலர்கள் செந்தில்நாதன் மற்றும் செந்தில் குமார் ஆகியோ ருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து அவர்கள் உடனே அந்த வாகனம் சத்தி யமங்கலம் நகராட்சி அலுவ லகத்தின் முன்பு கடந்து செல்வதை கண்டுபிடித்து உடன டியாக இன்ஸ்பெ க்டருக்கு தகவல் தெரிவி த்தனர்.

    அப்போது அத்தாணி சாலை யில் பணியில் இருந்த தலைமை போலீசார் சக்திவேல், ஜெகதீஷ் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனடியாக அவர்கள் விபத்தை ஏற்படுத்திவிட்டு வேகமாக தப்பித்துச் சென்ற வேன் டிரைவர் மணி என்பவரை மடக்கி பிடித்தனர்.

    இதையடுத்து வேன் டிரை வர் மணி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய ப்பட்டு புலன் விசாரணை யில் இருந்து வருகிறது.

    விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பித்துச் செல்ல முயன்ற வாகனத்தைப் பிடிக்க உதவியாக இருந்த பொது மக்கள், சி.சி.டி.வி. கேமரா மூலம் உடனே ஆய்வு செய்து தகவல் அளி த்த தலைமை காவலர்கள் மற்றும் வாகனத்தை பிடித்த தலைமை காவலர் சக்திவேல் மற்றும் ஜெகதீஷ் ஆகி யோரை இன்ஸ்பெக்டர் பாராட்டினார்.

    விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்ற டிரைவரை பிடிக்க முயன்ற போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    • புதிய கொடி மரத்திற்கு மகா கும்பாபிேஷகம் விழாவிற்கான சிறப்பு பூஜைகள் நேற்று தொடங்கியது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் இருந்த பழைய கொடிமரம் சேதமடைந்து விட்டதை தொடர்ந்து புதிய கொடி மரம் தயார் செய்யப் பட்டு கடந்த அக்டோபர் மாதம் 20-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து புதிய கொடி மரத்திற்கு மகா கும்பாபிே ஷகம் விழாவிற்கான சிறப்பு பூஜைகள் நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது.

    அப்போது விநாயகர் வழிபாடு, புண்யாக வாசனை, முளைப்பாரி பூஜை, ரக்ஷாபந்தனம், பூர்ணாகுதி தீபாரதனை நடந்தது. அதை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு பஞ்ச காவ்ய பூஜை, கலச பூஜை, சிறப்பு யாக பூஜையும், கலச புறப்பாடு நடந்தது.

    அதைத்தொடர்ந்து துவஜஸ்தம்பம் என்று சொல் கூடிய கொடி மரத்திற்கு மகா கும்பாபிேஷகம் காலை 6.40 மணிக்கு நடந்தது.

    இதில் புதிய கொடி மரத்திற்கு சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவாச்சா ரியார் கலச நீரை கொடி மரத்தின் மீது ஊற்றினார்.

    அப்போது மலைகோவிலில் திரண்டு இருந்த பக்தர்கள் அரஹர... அரஹர... அரோகரா என கோஷம் எழுப்பினர். அதையடுத்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சரவணன் தலைமையில் செங்குந்த முதலியார் அனைவோர்கள் சமூகத்தினர் செய்திருந்தனர்.

    இதில் ஏராளமான பக்த ர்கள் கலந்து கொண்டனர். அனை வருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • கணபதி வேல்வியுடன் தொடங்கி காமதேனு வழிபாடு பூஜை நடைபெற்றது.
    • கோபுர கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து விண்ணப்பள்ளி ஊராட்சி பனங்காட்டு பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில்கள்.

    இக்கோவிலில் கடந்த ஐப்பசி மாதம் 24-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்ப ட்டது. அதைத்தொடர்ந்து கடந்த கார்த்திகை 5-ந் தேதி யாக சாலையில் கணபதி வேல்வியுடன் தொடங்கி காமதேனு வழிபாடு பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து பவானி ஆற்றில் இருந்து தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பா றியினை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    மேலும் 6-ந் தேதி கோபுரத்தில் கலசம் அமைத்தல் மற்றும் இறைவன் திருமேனிக்கு மருந்து சாத்துதல், தீர்த்த குடங்கள் யாகசாலைக்கு எடுத்து சென்று முதல் கால வேள்வி மங்கல இசையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து நேற்று 2-ம் கால வேள்வியை தொடர்ந்து கருவறையில் உள்ள மாகாளியம்மனுக்கு தெய்வத்திருமேனியில் நிலை பெற செய்து வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்று கோபுர கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கருவறையில் உள்ள மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.

    அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்பு மாகாளியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீப ஆராதனை காட்டப்பட்டது.

    இதைக்கண்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூடி இருந்து பொதுமக்களுக்கு கோவில் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    ×