என் மலர்
உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் மீது வழக்கு
- விற்பனைக்காக வைத்திருந்த 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என கோபி, பெருந்துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விஜயமங்கலம்- ஊத்துக்குளி ரோடு டாஸ்மாக் கடை, மூல வாய்க்கால் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலை சேர்ந்த சிவந்தி கண்ணன் மகன் ராஜமாணிக்கம் (வயது 44),
சிவகங்கை மாவட்டம் மருதவாயில் பகுதியைச் சேர்ந்த காசி மகன் கோபால் (44) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story






