போதைப்பொருள் விற்ற 3 பேர் கைது

போதை பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த பிரகாஷ், டார ராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப்பொருள் விற்ற 3 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு டவுன் பகுதியில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தடை செய்ய ப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 20) டார ராம் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த பான் மசாலா, ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 275 மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை போல் புளிய ம்பட்டி-சக்தி ரோடு பகுதியில் போதை பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் நஞ்சப்பன் என்ற முருகேசன் (37) என்பவரை புளியம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் வைத்திருந்த போதை பொருள்களை போலீசார் பறி முதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com