என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திம்பம் மலைப்பாதையில் தனியார் பஸ் விபத்து
    X

    திம்பம் மலைப்பாதையில் தனியார் பஸ் விபத்து

    • பஸ்சை வளைவு அருகே இருந்த சுவற்றில் மோதி நிறுத்தினார்.
    • இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாளவாடி:

    ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று நேற்று மாலை திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது 24-வது கொண்டை ஊசி வளைவு அருகே செல்லும்போது திடீரென பஸ்சில் டமால் என்று ஒரு சத்தம் கேட்டு பஸ் பின்னோக்கி சென்றுள்ளது.

    டிரைவரின் சாமர்த்தியத்தால் பஸ்சை வளைவு அருகே இருந்த சுவற்றில் மோதி நிறுத்தினார். இதனால் பெரு அசம்பா விதம் தவிர்க்கப்பட்டது.

    பஸ்சில் இருந்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பஸ்சில் இருந்த பயணிகள் அவ்வழியாக சென்ற சரக்கு வாகனம் மற்றும் மாற்று பஸ்சில் தாளவாடி மற்றும் மைசூர் சென்றனர்.

    இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×