search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode News"

    • கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.99 லட்சத்திற்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    பெருந்துறை:

    பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

    பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,695 மூட்டைகளில் 1,24,000 கிலோ கொப்பரையை விற்பனை க்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முதல் தரக் கொப்பரை குறைந்த பட்சமாக கிலோ ரூ. 78.89 -க்கும், அதிகப ட்சமாக, ரூ.89.59 -க்கும் விற்பனை யா னது. 2-ம் தரக் கொப்ப ரை குறை ந்தப ட்சமாக ரூ.15.21 -க்கும், அதிகபட்ச மாக ரூ. 83.99-க்கும் விற்பனை யா னது.

    மொத்தம் ரூ. 99 லட்சத்திற்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    • பொன்னாளுக்கு திடீரென தலைசுற்ற ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.
    • பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பொன்னாள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி இச்சிபாளையம் காலனியை சேர்ந்தவர் தங்கவேல் (65). இவரது தாயார் பொன்னாள் (86). இவர் தனது மகனின் வீட்டின் அருகிலேயே தனியாக வசித்து வருகிறார்.

    100 நாள் வேலைக்கு சென்று வரும் பொன்னாள் சம்ப வத்தன்று காலையில் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். சுமார் 10 மணியளவில் பொன்னாளுக்கு திடீரென தலைசுற்ற ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.

    அருகில் இருந்தவர்கள் உடனடி யாக அவரை மீட்டு கொடுமுடி யில் உள்ள தனியார் மருத்துவம னையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பொன்னாள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பேன் மாட்டும் கொக்கியில் ஜீவா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சிய டைந்தனர்.
    • சத்தியமங்கலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப் பேட்டை, பிரிட்டோ காலனி யை சேர்ந்தவர் ஜீவா (35). இவர் குள்ளங்காட்டில் உள்ள தனியார் பிரிண்டிங் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி தனபாக்கியம் (29). கடந்த 6 மாதங்களுக்கு முன் ஜீவாவின் அண்ணனும், அதைத்தொடர்ந்து அவரது பாட்டியும் இறந்துவிட்டனர்.

    இதனால் கடுமையான மன அழுத்தத்துக்குள்ளான ஜீவா தொடர்ச்சியாக மது அருந்த ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜீவா தொடர்ந்து, மது அருந்தி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று மாலை தனபாக்கியம் அருகில் வசித்து வரும் தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு அதிக மது போதையில் ஜீவா அங்கு வந்துள்ளார்.

    அப்போது மது அருந்து வது குறித்து தனபாக்கியம், கணவர் ஜீவாவை கண்டித்து ள்ளார். இதையடுத்து இருவரும் அங்கேயே படுத்து தூங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் அதிகாலை தனபாக்கியத்தின் தாயார் கண் விழித்துப் பார்த்தபோது ஜீவா அங்கு இல்லை.

    இதையடுத்து அருகில் உள்ள தங்களது வீட்டுக்கு தனபாக்கியமும், அவரது தாயாரும் சென்று பார்த்து ள்ளனர். அப்போது வீட்டின் அறையில் பேன் மாட்டும் கொக்கியில் ஜீவா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சிய டைந்தனர்.

    உடனடியாக உறவினர்களின் உதவியுடன் ஜீவாவை மீட்டு சத்தியம ங்கலம் அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர் வரும் வழியி லேயே ஜீவா இறந்து விட்ட தாக தெரிவித்தார்.

    இது குறி த்து சத்தியமங்கலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சாலையின் ஓரத்தில் ஆபத்தான நிலையில் பெரிய பள்ளம் உள்ளது.
    • இதனால் சில இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை சிப்காட்டில் இருந்த பெருந்துறை நகருக்கு வரும் தேசிய நெடுஞ்சாலை யில் சிப்காட் நுழைவாயில் எதிரில் சாலையின் ஓரத்தில் ஆபத்தான நிலையில் பெரிய பள்ளம் உள்ளது.

    இதில் மழை பெய்யும் போது மழை நீர் தேங்கியும் வருகிறது.

    இதனால் இந்த சாலையில் செல்லும் பெரிய மற்றும் சிறிய வாகனங்கள் ஓவர் டேக் எடுக்கும்போது, பக்கவாட்டில் செல்லும் இருசக்கர வாகனங்கள், தங்கள் மீது மோதாமல் இருந்த அந்த பள்ளத்தில் இறங்க வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் சில இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்து வருகின்றனர்.

    தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் வி ரைவாக நடவடிக்கை எடுத்து சாலை ஓரத்தில் உள்ள பள்ள த்தை மூட வேண்டும் என்பது இருசக்கர வாகன ஓட்டிகள் வேண்டுக்கோளாக உள்ளது.

    • ரசூல் மொய்தீன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • பெருந்துறை கோர்ட்டில் ஆஜர் செய்து மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை-ஊத்துக்குளி மெயின் ரோடு சிறுக்களஞ்சி அருகில் ரோட்டில் பாதை கருப்ப ணசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சில மாதத்தி ற்கு முன்பு நள்ளிரவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டுப் போனது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரசூல் மொய்தீன் (46) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சென்னை புழல் பகுதியில் தங்கி இருந்ததாகவும், இவர் மீதுள்ள பழைய வழக்கு சம்பந்தமாக கோவைக்கு வந்து சென்றுள்ளார்.

    அதன் பின்னர் திருப்பூர் பகுதியில் தங்கியிருந்து அங்கு வேலை செய்து வந்துள்ளார்.

    இவர் சென்னிமலை அடுத்துள்ள சிறுக்களஞ்சி கோவிலில் பணம் ரூ.20 ஆயிரத்தை உண்டியலை உடைத்து திருடி சென்றதா கவும், இவரிடம் இருந்து 6 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்ப ட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர் .

    மேலும் இவரை கைது செய்து பெருந்துறை கோர்ட்டில் ஆஜர் செய்து மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்னி மலை அடுத்துள்ள முகாசி ப்பிடாரியூர் பகுதியில் கஸ்தூரி என்பவரது வீட்டில் நான்கு பவுன் தங்க நகை திருட்டு போனது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த திருட்டு வழக்கில் மேட்டூரை சேர்ந்த கனகராஜ் (44) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் இந்த வீட்டில் 4 பவுன் தங்க நகையை திருடி சென்றது போலீசாரின் விசார ணையில் கண்டறியப்பட்டது.

    அவரிடம் இருந்து 4 பவுன் தங்க நகை மீட்கப்பட்டது. இவரை போலீசார் கைது செய்து பெருந்துறை கோ ர்ட்டில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என கருங்கல்பாளையம், அந்தியூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஈரோடு-பவானி மெயின் ரோடு, அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் தடை செய்ய ப்பட்ட போதை பொரு ட்களை விற்பனை செய்து கொண்டிருந்த சேலம் மாவ ட்டம் எடப்பாடி மூலப்பா றைக்காடு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் முருகன் (வயது 30), அந்தியூர் நகலூர் ரங்கசாமி மகன் முத்து (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட போதை பொரு ள்களை போலீசார் பறிமு தல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதைப்போல் ஈரோடு வீரபத்திர தெரு, குட்டப்பா ளையம் ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த ஈரோடு வீரப்பன்சத்திரத்தை ேசர்ந்த சின்னக்கண்ணு மகன் கனகராஜ் (52), சென்னிமலை குட்டப்பா ளையம் துரைசாமி மனைவி துளசி மணி (63) ஆகியோர் மீது ஈரோடு வடக்கு, சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கனமழை பெய்து கொண்டிருந்த போது மின் கம்பிகள் தென்னங்கீற்றில் உரசியது.
    • தென்மரத்தின் கிளையில் தீ பற்றி எரிய தொடங்கியது.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் மற்றும் கள்ளிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடிரென காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதில் அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் கள்ளிப்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஒரு தென்னை மரம் உள்ளது.

    அந்த மரத்தின் அருகே உயர் மின்னழுத்த கம்பிகள் செல்கின்றன. இந்நிலையில் இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்த போது மின் கம்பிகள் தென்னங்கீற்றில் உரசியதில் மின் கசிவு ஏற்பட்டு தென்மரத்தின் கிளையில் தீ பற்றி எரிய தொடங்கியது.

    தற்போது மழை காலம் என்பதால் இதுபோன்று நிகழ்வால் ஏதேனும் ஆபத்து ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக மரக்கிளைகளுக்கு இடை யில் செல்லும் மின் கம்பி களை முறையாக பராமரிப்பு செய்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
    • ஆட்களை ஏற்றி வந்த 9 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் உத்தரவின் பேரிலும், துணை போக்குவரத்து ஆணையர் வழிகாட்டுதலின் பேரில் சரக்கு வாகனங்களில் ஆட்க ளை ஏற்றி செல்வதை தடுக்க வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

    அதன்படி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கட் ரமணி (ஈரோடு கிழக்கு), பதிவைநாதன் (ஈரோடு மேற்கு), சக்திவேல் (பெரு ந்துறை) ஆகியோர் தலைமை யில் அதிகாரிகள் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

    அதிக பாரம் ஏற்றி வந்ததாக 9 வாகனங்கள், வாகனங்களில் ஆட்களை ஏற்றி வந்ததாக 7 வாகனங்கள், தகுதி சான்று புதுப்பிக்காத 7 வாகனங்கள், காப்பு சான்று இல்லாத 15 வாகனங்கள் உட்பட போக்குவரத்து விதி முறைகளை மீறியதாக 99 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.5 லட்சத்து 3 ஆயிரத்து 150 அப ராதமாக விதிக்கப்பட்டது.

    மேலும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டி வந்ததாக 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆட்களை ஏற்றி வந்த 9 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து இதுபோன்று சோதனைகள் நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 3 இடங்களில் புதியதாக ஆதார் அட்டை விண்ணப்பிக்கும் மையங்கள் செயல்பட்டு வந்தன.
    • பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் செயல்பட்டு வந்த மையத்தை மூடி விட்டா ர்கள்.

    பெருந்துறை:

    பெருந்துறை தாசில்தார் அலுவலகம், பெருந்துறை தலைமை தபால் அலுவலகம் மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஆகிய 3 இடங்களில் புதியதாக ஆதார் அட்டை விண்ண ப்பிக்கும் மையங்கள் செயல்பட்டு வந்தன.

    இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் செயல்பட்டு வந்த மையத்தை மூடி விட்டா ர்கள்.

    தற்போது பெருந்துறை யில் 2 இடங்களில் அதாவது பெருந்துறை தாசில்தார் அலுவலகம், பெருந்துறை தலைமை தபால் அலு வலகம் ஆகிய இடங்களில் மட்டுமே புதியதாக ஆதார் அட்டைக்கு விண்ண ப்பிக்கும் மையங்கள் செயல்படு கிறது.

    பெருந்து றை பகுதியில் நிரந்தரமாக வசிக்கும் மக்கள் மற்றும் புலன் பெயர்ந்த தொழிலா ளர்கள் ஆதார் அட்டைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விண்ண ப்பித்து வருகின்றனர்.

    வயதான வர்களின் கைரேகை சரியாக விழுவ தில்லை. அதனால் ஆதார் மையத்தை அனுகி கை ரேகை பதிவாகவில்லை என்று சான்றிதழ் பெறுவ தற்கு அனுகி வருகின்றனர்.

    இதனால் ஆதார் மையத்தில் எப்போது கூட்டம் அதிகமாக காணப்ப டுகிறது. வயதானவர்கள் நீண்ட நேரம் காத்து இருக்க வேண்டியுள்ளது.

    சிலர் பேர் வரிசையில் நின்று நேரம் முடிந்து விட்டால் திரும்பி சென்று மறுமுறை வரவே ண்டியுள்ளது. தொழிலாளர்கள் விடுமுறை போட்டு விட்டு வந்து காத்து இருந்தா லும் சில சமயம் வந்த வேலை முடிவதில்லை.

    இவைகளை கவனத்தில் கொண்டு அரசு பெருந்துறை யில் கூடுதலாக ஒன்றோ அல்லது 2 ஆதார் அட்டை க்கும் விண்ண ப்பிக்கும் மையத்தை திறக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    • பொன்னுச்சாமி வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டில் தூக்கு போட்டு கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வாய்க்கால் மேடு அடுத்த ஸ்ரீரங்கம் பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் சித்தன் மகன் பொன்னு ச்சாமி. இவரது மனைவி சாந்தி. பொன்னுச்சாமி நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலியால் பொன்னுச்சாமி அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் மன வேதனை அடைந்த அவர் வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டில் தூக்கு போட்டு கொண்டார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஒரு தனியார் ஆம்பு லன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பொன்னுச்சாமி ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து அவரது மனைவி சாந்தி அர ச்சலூர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோணவாய்க்கால் பகுதியில் கிட்டுசாமி தனது போர்வெல் லாரியை நிறுத்தி வைத்திருந்தார்.
    • லாரி திருடப்பட்ட 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா ஜம்பை அடுத்த சின்னியம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிட்டுசாமி (52). போர்வெல் லாரியை சொந்தமாக வைத்து வாடிக்கையாளர்களுக்கு போர் போடும் தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காங்கேயம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கிட்டுசாமியிடம் அறிமுக மாகி தனக்கு வேலை வேண்டுமென அவரிடம் கேட்டு வேலையில் சேர்ந்து ள்ளார்.

    ரமேஷ் தன்னிடம் செல்போன் இல்லை என்றும், காங்கேயம் பகு தியை சேர்ந்தவர் மட்டும் என்றும் கூறி வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த 10 நாட்களாக வேலையும் பார்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத் தன்று கோணவாய்க்கால் என்ற பகுதியில் கிட்டுசாமி தனது போர்வெல் லாரியை நிறுத்தி வைத்திருந்தார். அங்கு வந்த ரமேஷ் போர்வெல் லாரியை நைசாக திருடி சென்று ள்ளார்.

    லாரி மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிட்டுசாமி இதுகுறித்து விசாரித்த போது ரமேஷ் லாரியை திருடியது தெரிய வந்தது. திருட்டு போன லாரியின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும்.

    இது குறித்து கிட்டுசாமி சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தினர்.

    அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது ரமேஷ் லாரியை திருடி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து தனிப்படை அமைத்து லாரியை தேடி வந்தனர். லாரியில் உள்ள ஜி.பி.ஆர்.எஸ். கருவியை பார்த்தபோது அது கரூர் மாவட்டத்தில் இருப்பது தெரிய வந்தது.

    உடனடியாக தணிக்கை குழு போலீசார் கரூர் சென்று லாரி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து லாரியை மீட்டனர்.

    போலீஸ் வரும்போது லாரி தவிர வேறு யாரும் அங்கு இல்லை. ரமேஷ் லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் லாரியை மீட்டு சித்தோடு போலீஸ் நிலை யத்துக்கு கொண்டு வந்தனர். லாரி திருடப்பட்ட 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.

    • கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஜெய தீபன் என்பவரை பவானிசாகர் போலீசார் கைது செய்தனர்.
    • 750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் அங்கு கஞ்சா எனும் போதை பொருளை விற்பனை செய்து கொண்டி ருந்த சத்தியமங்கலம் சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் சதீஷ் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 500 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.

    இதேபோல் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் மகன் ஜெய தீபன் (28) என்பவரை பவானிசாகர் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் வைத்திருந்த 750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×