மயங்கி விழுந்து மூதாட்டி சாவு

பொன்னாளுக்கு திடீரென தலைசுற்ற ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பொன்னாள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
மயங்கி விழுந்து மூதாட்டி சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி இச்சிபாளையம் காலனியை சேர்ந்தவர் தங்கவேல் (65). இவரது தாயார் பொன்னாள் (86). இவர் தனது மகனின் வீட்டின் அருகிலேயே தனியாக வசித்து வருகிறார்.

100 நாள் வேலைக்கு சென்று வரும் பொன்னாள் சம்ப வத்தன்று காலையில் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். சுமார் 10 மணியளவில் பொன்னாளுக்கு திடீரென தலைசுற்ற ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் உடனடி யாக அவரை மீட்டு கொடுமுடி யில் உள்ள தனியார் மருத்துவம னையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பொன்னாள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com